News Videos Keepalive Gallery Live News Leader Timeline Blog Promote Leader
We Lead India Logo
 
Select Constituency
  •   Party: AIADMK
  •   Constituency: Chennai
  •   State: TAMIL NADU
  •   Born: 24th February ,1948
  •    
    300 characters remaining
    ashiya praveen
    Aug 28,2013 08:41 am Share On Facebook Share on Twitter 0 Likes
    ashiya praveen
    Aug 28,2013 08:35 am Share On Facebook Share on Twitter 0 Likes
    ashiya praveen
    Aug 28,2013 08:32 am Share On Facebook Share on Twitter 0 Likes
    Lalit Kumar
    Aug 23,2013 11:15 am Share On Facebook Share on Twitter 0 Likes
    Lalit Kumar
    DMK Ex Minister & 6 times MLA Mr. Paruthi Ilam Valuthi, who joins into AIADMK & He chooses correct path. PMK Ex Central Minister Ponnusami also joins with us. He is not ready to go with Jathidoss. Welcome to our peaceful Party:-)
    Aug 23,2013 11:15 am Share On Facebook Share on Twitter 0 Likes
    100 characters remaining
    Be the first to write and promote your leader!
    No event scheduled for now.

    Your favorite leader would be online soon!
    Jayalalithaa
    लखनऊ 18 अपै्रल। “आगामी 25 अप्रैल को राष्ट्रीय लोकदल जिलाध्यक्षों/महानगर अध्यक्षो...
    लखनऊ 18 अपै्रल। “आगामी 25 अप्रैल को राष्ट्रीय लोकदल जिलाध्यक्षों/महानगर अध्यक्षों तथा मण्डल अध्यक्षों की बैठक आयोजित करेगा” यह घोषणा करते हुये राष्ट्रीय लोकदल के प्रदेष अध्यक्ष मुन्ना सिंह चैहान ने कहा कि बैठक में किसानों के प्र्रति हो रहे अन्याय के खिलाफ लड़ाई लड़ने के लिए रणनीति बनाई जायेगी। उन्होंने आगे कहा कि मुआवजा नीति दोषपूर्ण होने के कारण राहत की आष लगाये बैठे किसानों की मौत का आंकड़ा प्रतिदिन बढ़ रहा है जिसकी जिम्मेदार प्रदेष एवं केन्द्र सरकारें हैं। यदि दोनों सरकारे मिलकर आपदा राहत कार्य युद्वस्तर पर संचालित करें तो किसानों की मौतों पर अंकुष लगाया जा सकता है परन्तु सरकारे सुस्ती दिखाते हुये मुआवजे के आंकड़ों में उलझकर किसानों की दुर्दषा का उपहास कर रही है। पूरे सूबे में किसानों की मौतों की संख्या 400 पार कर चुकी हैं परन्तु उनकी सुध लेने के बजाय राजनीतिक स्वार्थ साधने मंे जुटी हैं।
    श्री चैहान ने कहा कि अन्नदाता मुसीबत में है और ऐसी विषम परिस्थिति में प्रदेष के मुख्यमंत्री तथा देष के प्रधानमंत्री विदेषी दौरा कर रहे हैं। उन्होंने कहा कि प्रधानमंत्री की पूरी कैबिनेट उन्हीं की तरह बड़ी बड़ी बाते कर रही हैं परन्तु किसानों को राहत के नाम पर एक फूटी कौड़ी भी नहीं मिल पायी है और प्रदेष सरकार बहाने बाजी कर रही है। दोनों सरकारे किसानों के प्रति संवेदनषील नहीं है अरबों रूपये की फसल बर्बादी का दुख झेल रहे किसान खून के आंसू रो रहे हैं। ऐसा प्रतीत होता है कि दोनों सरकारे हर रोज किसानों की मौत का इंतजार कर रही हैं।
    श्री चैहान ने सरकार से मांग करते हुये कहा कि किसानों की पीड़ा को समझते हुये उनकी सभी फसली ऋण के कर्र्जाें और विद्युत बिल माफ कर दिये जायं तथा दैवीय आपदा से हुयी फसल बर्बादी का मुआवजा किसानों को अतिषीघ्र दिलाने हेतु ठोस कार्य करें।


    Apr 19,2015 02:36 pm
    Jayalalithaa
    लखनऊ 9 अप्रैल। राष्ट्रीय लोकदल के प्रदेष अध्यक्ष मुन्ना सिंह चैहान ने मोदी सरकार...
    लखनऊ 9 अप्रैल। राष्ट्रीय लोकदल के प्रदेष अध्यक्ष मुन्ना सिंह चैहान ने मोदी सरकार द्वारा नई दरों में घोषित आपदा राहत राषि को नाकाफी बताते हुये कहा कि इससे तो किसानों की बर्बाद फसल की लागत भी नहीं आयेगी। जब तक दोनों सरकारों द्वारा किसानों को कम से कम 25 हजार रूपये प्रति हेक्टेयर के हिसाब से मुआवजा राषि मुहैया नहीं करायी जायेगी तब तक उन्हें सदमें से नहीं उबारा जा सकता। किसानों को बिना किसी भेदभाव के उनकी फसल के नुकसान के आधार पर अविलम्ब मुआवजा प्रदान करना चाहिए जिससे किसानों की मायूसी को खत्म करके आत्महत्याओं पर अंकुष लगाया जा सके।
    श्री चैहान ने आगे बताया कि जिस प्रदेष के किसानों ने भाजपा को 71 सांसद देकर पूर्ण बहुमत की सरकार बनाने में महत्पूर्ण योगदान देकर केन्द्र की सत्ता सौंपी थी आज वहीं सरकार किसानों की फसल बर्बादी पर पर्याप्त राहत पहुंचाने के बजाय हर रोज किसानों की मौत का इंतजार कर रही हैं। संकट की इस घड़ी में केन्द्रीय मंत्री किसानों के आंसू पोछने के बजाय उनकी बर्बाद फसल और उनकी मौतों पर सियासत का खेल खेल रहे हैं। उन्होंने आगे कहा कि मोदी जी को आपदा राहत निधि से किसानों को राहत पहुंचाने का कार्य करना चाहिए।
    श्री चैहान ने कहा कि इस वर्ष किसान वर्ग पर एक के बाद एक गाज गिरती जा रही है पहले सूखा, बाढ और अब ओलावृष्टि ने किसानों के जख्म को ताजा करने का काम किया है। उन्होंने किसानों के प्रति अपने दर्द को बयां करते हुये सूबे के मुख्यमंत्री से कहा कि इस विषम परिस्थिति में लायन सफारी की चिंता छोड़कर किसानों की हर प्रकार से सम्भव मदद करें जिससे प्रदेष का किसान राहत की सांस ले।


    Apr 12,2015 09:32 pm
    Jayalalithaa
    लखनऊ 7 अप्रैल। प्रदेष में लगातार हो रही किसानों की मौत पर गम्भीर रूख अपनाते हुये...
    लखनऊ 7 अप्रैल। प्रदेष में लगातार हो रही किसानों की मौत पर गम्भीर रूख अपनाते हुये राष्ट्रीय लोकदल ने प्रदेष व केन्द्र सरकार के खिलाफ मोर्चा खोल दिया है। आज विपरीत मौसम व दैवीय आपदा से हुये फसल की बर्बादी पर पर्याप्त आर्थिक सहायता उपलब्ध कराने, मौसम की मार से पीडि़त किसानों की सदमें से अथवा हतोत्साहित होकर की गयी आत्महत्या से प्रभावित परिवारों को क्षतिपूर्ति दिलाने तथा किसानों की अन्य समस्याओं के निराकरण के लिए राष्ट्रीय लोकदल का एक प्रतिनिधि मण्डल राष्ट्रीय लोकदल के राष्ट्रीय महासचिव जयन्त चैधरी के नेतृत्व तथा प्रदेष अध्यक्ष मुन्ना सिंह चैहान की उपस्थिति में माननीय राज्यपाल महोदय से मिला। प्रतिनिधि मण्डल में विधान मण्डल दल के नेता ठा0 दलबीर सिंह, राष्ट्रीय प्रवक्ता डाॅ0 मसूद अहमद, विधायक भवगती प्रसाद सूर्यवंषी, राष्ट्रीय सचिव षिवकरन सिंह व अनिल दुबे तथा युवा रालोद के पूर्व अध्यक्ष आरिफ महमूद शामिल थे।
    माननीय राज्यपाल महोदय से भंेट करने के उपरान्त प्रदेष मुख्यालय पर पत्रकारों से वार्ता के दौरान राष्ट्रीय महासचिव जयन्त चैधरी ने कहा कि केन्द्र व प्रदेष सरकार द्वारा जो आपदा राहत राषि दी जा रही है वह अपर्याप्त है केन्द्र सरकार द्वारा घोषित धनराषि को 9000 रूपये प्रति हेक्टेयर से बढ़ाकर 25000 रूपये प्रति हेक्टेयर करना चाहिए। फसल बर्बादी के कारण जो भी किसान मौत का षिकार हुये हैं चाहे वह सदमें से हो बिजली गिरने से हो या फिर आत्महत्या करने से हो उन्हें उचित मुआवजा अविलम्ब दिया जाना चाहिए साथ ही उनके परिवार के एक सदस्य को सरकारी नौकरी की भी व्यवस्था करनी चाहिए। वर्तमान फसल के कृषि ऋण से सम्बन्धित सभी बैंको व अन्य वित्तीय संस्थाओं के कृषि सम्बन्धित सभी कर्जे माफ होने के साथ साथ किसानों का 6 माह का विद्युत बिल भी प्रदेष सरकार को माफ करना चाहिए। उन्होंने आगे कहा कि प्रदेष सरकार को 50 प्रतिषत के नुकसान पर भुगतान करने की हठधर्मिता को छोड़कर सभी किसानों को नुकसान के आंकलन के आधार पर मुआवजा देना चाहिए। सैटेलाइट सिस्टम व आधुनिक तकनीकी का प्रयोग करते हुये जिलाधिकारी और कृषि विषेषज्ञों की ऐसी टीम का गठन किया जाना चाहिए जिसमें किसानों का प्रतिनिधित्व भी हो जिससे मुआवजा नीति दोषपूर्ण न हो। उन्होंने कहा कि किसानों को राहत पहुंचाने के लिए सरकार किसान बीमा योजना का सहारा क्यों ले रही है प्रदेष सरकार तथा केन्द्र सरकार को मुख्यमंत्री तथा प्रधानमंत्री राहत कोष से राहत पहुंचाने की पहल करनी चाहिए। किसानों को राहत पहुंचाने के लिए यदि सरकार कोई योजना बनाती है तो हमारे विधायक अपनी निधि से किसानों को राहत पहुंचाने की पहल करेंगे।
    श्री चैधरी ने केन्द्र सरकार को आडे़ हाथों लेते हुये कहा कि मोदी सरकार ने किसान को उनकी जमीन छीनने के लिए भूमि अधिग्रहण पुर्नवास एवं पुर्नस्थापना अधिनियम में संषोधन करके बार बार अध्यादेष ला रही है केन्द्र सरकार द्वारा बहाना किया जा रहा है कि विकास के लिए संषोधन जरूरी है बल्कि 2013 के कानून में नहर सड़क और स्कूल के लिए पहले से ही जमीन का प्राविधान था। पी0पी0पी0 माॅडल को जमीन दिलाने के लिए 2013 के अधिनियम में संषोधन करके किसानों की 70 प्रतिषत सहमति की शर्त को खत्म करना चाहती है। उन्होंने कहा कि इस अध्यादेष के खिलाफ विपक्ष को एकजुट होना चाहिए। विकास की बाते करने वाली केन्द्र सरकार उन बेरोजगारों को नौकरी क्यों नहीं देती जो डिग्रियां लेकर दर दर भटक रहे हैं।
    श्री चैधरी ने पुलिस भर्ती में की गयी धांधली को गैर संवैधानिक बताते हुये कहा कि पुलिस भर्ती मामला भ्रष्टाचार की भेंट चढ़ गया जिसमें लाखों नौजवानों के भविष्य के साथ खिलवाड़ किया गया है जिसकी सी0बी0आई0 जांच होनी चाहिए। उन्होंने कहा कि पुलिस भर्ती में छात्रों से 2012 तथा 2013 का जाति प्रमाण पत्र मांगा जा रहा है जो असंवैधानिक है 2015 के जाति प्रमाण पत्र को भी मान्यता देनी चाहिए। आज राष्ट्रीय महासचिव जयन्त चैधरी के समक्ष फतेहपुर के निवासी तथा अलीगढ़ मुस्लिम विष्वविद्यालय के पूर्व महामंत्री श्री सैययद अबरार अहमद ने दल की सदस्यता ग्रहण की।
    लखनऊ आगमन पर पदाधिकारियों और कार्यकर्ताओं ने राष्ट्रीय महासचिव जयन्त चैधरी का फूलमालाओं से लादकर जोर दार स्वागत किया। स्वागत करने वालों में राष्ट्रीय लोकदल मध्य उ0प्र0 के अध्यक्ष राकेष कुमार सिंह मुन्ना, निवर्तमान महासचिव हाजी वसीम हैदर, प्रो0 यज्ञदत्त शुक्ल, डाॅ0 सुरेष यादव, चन्द्रबली यादव, सुरेष अग्रहरि, चै0 भूपाल सिंह, अनिल सिंह, शकुन्तला कुरील, रमावती तिवारी, लक्ष्मी गौतम, शीला भारती, मनोज सिंह चैहान, रामहर्ष यादव, अखिलेष वर्मा, आर0पी0 सिंह चैहान, शैलेन्द्र मिश्रा, बी0एल0 प्रेमी, हरपाल यादव प्रमुख रूप से थे


    Apr 09,2015 09:09 pm
    Jayalalithaa
    அ.தி.மு.க பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதா அவர்களின் அறிக்கை / க...
    அ.தி.மு.க பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதா அவர்களின் அறிக்கை / கருணாநிதியின் பொய் அறிக்கைகள் குறித்து கடும் கண்டனம் - 14.3.2015
    ************************************************************************************

    "மத்திய பாரதிய ஜனதா அரசால் ‘நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை’ சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு, அந்த சட்டத் திருத்தத்திற்கு நாடாளுமன்ற மக்களவையில் அஇஅதிமுக ஆதரவு அளித்தது ஏதோ ஒரு உள்நோக்கத்திற்காக என திமுக தலைவர் . கருணாநிதி சுமத்திய குற்றச்சாட்டுக்கு நான் 13.3.2015 அன்று தெளிவான விளக்கம் அளித்துள்ளேன்.

    தமிழகத்தின் நலனுக்காகவும், தமிழர்களின் நலனுக்காகவும், எப்போதும் பாடுபடும் அரசியல் இயக்கம் அ தி மு க என்பதையும்; சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப பச்சோந்தி போல் தனது நிலைப்பாட்டை அவ்வப்போது மாற்றிக் கொள்பவர் திமுக தலைவர் .கருணாநிதி என்பதையும் பல்வேறு உதாரணங்களுடன் எனது அறிக்கையில் நான் விளக்கியிருந்தேன். அதற்கு எவ்வித தெளிவான பதிலையும் கொடுக்க இயலாத காரணத்தால், ‘மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல்’ அதிமுக இந்த மசோதாவை ஆதரித்ததற்கு கற்பனையான காரணங்களை தேடி அற்பத்தனமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் கருணாநிதி.

    அந்த அறிக்கையில் தனது சொந்த நலனுக்காகவே எந்த ஒரு கருத்தையும், எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுப்பவர் தான் கருணாநிதி என்பதை தன்னை அறியாமலேயே அவர் வெளிப்படுத்திவிட்டார். ஒரு கூட்டணியிலே இடம் பெற்றிருக்கிற போது தி.மு.கழகம் எந்த அளவுக்கு விசுவாசமாக இருக்கும் என்பதை நான் சுட்டி காட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். திருமதி.இந்திரா காந்தி அவர்கள் திமுக உறவாக இருந்தால் உண்மையாக இருக்கும் என்று கூட்டணி தர்மம் பற்றி எடுத்துக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

    தமிழக மக்கள் வாக்களித்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாகவும், மத்திய ஆட்சியிலே அமைச்சர்களாகவும் பதவி வகித்து, தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வந்தது திமுக என்று நான் பல முறை எடுத்துக் கூறியதை உண்மை என்றே திமுக தலைவர் .கருணாநிதி தற்போது ஒத்துக் கொண்டுள்ளார். தமிழக மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஆவது கூட்டணி தர்மத்திற்காகவோ அல்லது மத்தியிலே உள்ள ஆட்சி அதிகார பலன்களைப் பெறுவதற்காகவோ அல்லது மத்திய எஜமானர்களுக்கு விசுவாசமாக இருப்பதற்கோ அல்ல. நாம் விசுவாசமாக இருக்க வேண்டியது நமக்கு வாக்களித்த தமிழக மக்களுக்குத்தான்.

    அந்த நெஞ்சுரம் திரு.கருணாநிதிக்கும், திமுகவுக்கும் இல்லாத காரணத்தால் தான் 17 ஆண்டு காலம் மத்திய ஆட்சிப் பொறுப்பிலே இருந்தும், தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எந்த ஒரு நன்மையையும் செய்யாததோடு மட்டுமல்லாமல், தமிழகத்திற்கு எதிரான கொள்கைகளுக்கு ஆதரவளித்தும், தமிழகத்திற்கு எதிரான அரசுக்கு முட்டுக் கொடுத்தும் வந்தார் திரு.கருணாநிதி.

    முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசால் 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்படி விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முன் 80 சதவீத விவசாயிகளின் ஒப்புதல் பெற வேண்டும் என்றும்; நிலத்தை கையகப்படுத்தும் போது அந்த நிலம் விவசாயம் செய்வதற்கு தகுதி வாய்ந்த நிலமா என்று கவனிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது என திரு.கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை திரு.கருணாநிதி படிக்கவே இல்லை என்பதைத் தான் அவர் இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். பொது நலத்திற்காக அரசு-தனியார் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், பொது நலன் காரணமாக தனியார் கம்பெனிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் போது மட்டும் தான் விவசாயிகளின் ஒப்புதல் பற்றி 2013 ஆம் ஆண்டைய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தனியார் கம்பெனிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் போது பாதிக்கப்படும் குடும்பங்களில் 80 சதவீதம் பேரிடமும், அரசு-தனியார் கூட்டுத் திட்டங்களுக்கு 70 சதவீதம் பேரிடமும் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று தான் உள்ளது. திரு.கருணாநிதி கூறுவது போல தற்போதைய சட்டத்தில் குறிப்பிட்ட 5 வகை நில எடுப்புகளுக்கு இது முற்றிலுமாக கைவிடப்பட்டதாகக் கூறுவது சரியல்ல. அது போன்றே, 2013 ஆம் ஆண்டைய சட்டத்தில் விவசாயம் செய்வதற்கு தகுதி வாய்ந்த நிலமா என்பது கவனிக்கப்பட வேண்டும் என்றும், தற்போதைய திருத்தச் சட்டத்தின்படி அவ்வாறு கவனிக்கத் தேவையில்லை என்றும் திரு. கருணாநிதி கூறியிருப்பதும் சரியல்ல.

    முந்தையச் சட்டத்தில், வேறு நிலம் எதுவும் இல்லை என்கிற போது பாசன வசதியுள்ள பலபோகம் பயிரிடப்படும் நிலம் கையெடுப்பு செய்யலாம் என உள்ளது. அவ்வாறு செய்யும் போது அதே அளவான சாகுபடிக்கு பயனற்ற நிலம் சாகுபடிக்கு கொண்டுவர வேண்டும் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தில் உள்ள நிகர பயிரிடும் பரப்பளவில் எந்த அளவு நில எடுப்பு செய்யலாம் என சம்பந்தப்பட்ட அரசின் அறிவிக்கையின் படி நில எடுப்பு செய்யலாம் எனவும் உள்ளது. எனவே, 2013 ஆம் ஆண்டு சட்டத்தில் விவசாயம் செய்வதற்கு தகுதி வாய்ந்த நிலத்தை கையகப்படுத்திடக் கூடாது என எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    அரசு - தனியார் கூட்டு முயற்சி திட்டங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு கையகப்படுத்தும் நிலம் அரசுக்கு சொந்தமாக இருக்கும் போது பாதிக்கப்படும் குடும்பங்களில் 70 சதவீதத்தனரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்ற நிபந்தனை தான் சம்பந்தப்பட்ட அரசு அந்தந்த நேர்வுகளில் விலக்கிக் கொள்ளலாம் என சட்ட திருத்தம் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது. தனியார் கம்பெனிகளுக்கு தமிழகத்தில் நிலம் எதுவும் கையகப்படுத்தப்படுவதில்லை. எனவே இதனால் தமிழகத்தில் விவசாயிகள் யாரும் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாக மாட்டார்கள்.

    2013 ஆம் ஆண்டைய புதிய நில எடுப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது அது பற்றி அஇஅதிமுக குழுத் தலைவர் பேசியதைப் பற்றி கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். நில எடுப்பு செய்வதற்கு தகுதியான அரசு, மாநில அரசு தான்; மத்திய அரசு அல்ல; ஏனெனில் ‘நிலம்’ என்ற பொருள் மாநில அரசு பட்டியலில் தான் உள்ளது என்று நாடாளுமன்ற அஇஅதிமுக உறுப்பினர் பேசியது தான் அதிமுக எப்போதும் கொண்டுள்ள நிலை. நில எடுப்புச் சட்டம் என்பதே மாநில அரசின் சட்டமாக இருக்க வேண்டும் என்பது தான் அஇஅதிமுகவின் நிலைப்பாடு.

    ஆனால் ‘சொத்தினை கையகப்படுத்துலும், வேண்டுறுத்திப் பெறுதலும்’ என்ற பொருண்மை ஒருங்கியல் பட்டியலில் உள்ளதால், முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. 2013 ஆம் ஆண்டு மக்களவையில் பேசும் போது, தனியார் நிறுவனங்களுக்காக நில எடுப்பு செய்யக் கூடாது என அஇஅதிமுக தனது கருத்தை தெரிவித்ததாக கருணாநிதி கூறியுள்ளார். தற்போதும் அஇஅதிமுக அதே கருத்தை தான் கொண்டுள்ளது. எனவே தான், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு சலுகைகள் அளிக்கக் கூடாது என அஇஅதிமுக திருத்தம் அளித்தது.

    அதனை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. 2013 ஆம் ஆண்டைய நில எடுப்புச் சட்டம் 13 மத்திய சட்டங்களுக்கு இந்த சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளித்துள்ளது பற்றி அப்போதும் அதிமுக சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அதையே தான் எனது அறிக்கையிலும் நான் ஏற்கெனவே தெரிவித்துள்ளேன். 13 மத்திய சட்டங்களின் கீழ் நில எடுப்பு செய்யும் போது மட்டும், நில எடுப்புச் சட்டப் பிரிவுகள் பொருந்தாது என கூறப்பட்டுள்ளது மாநில அரசுகளுக்கு எதிரானதா? இல்லையா? என்று தான் நான் கேட்டிருந்தேன். எனவே 2013-ஆம் ஆண்டு அஇஅதிமுக எடுத்த நிலைப்பாட்டுக்கும், தற்போதைய நிலைப்பாட்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

    தற்போது மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா 5 வகை திட்டங்களுக்கு சில விதிவிலக்கு அளிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. மாநில அரசு தேவை என்று கருதினால், ஒவ்வொரு திட்டத்தின் தன்மைக்கு ஏற்ப, பொதுநலத்திற்கு ஏற்ப, அந்தந்த திட்டத்திற்கு மாநில அரசு, சில குறிப்பிட்ட வரையறையிலிருந்து விலக்களிக்க இயலும். மாநிலத்திற்கு அதிக அதிகாரம் வழங்கும் இந்த சட்டத்தை எதற்காக எதிர்க்க வேண்டும்?

    2013 ஆம் ஆண்டைய ‘நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை’ சட்டத்தில், அத்தியாயம் III-A புதிதாக சேர்க்கப்பட்டு, அதன்படி அத்தியாயம் II-ல் உள்ள சமூக தாக்கத்தை தீர்மானித்தல் மற்றும் பொதுநலன் மற்றும் III வது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறப்பு கூறுகள் ஆகியவற்றிலிருந்து, தேசிய பாதுகாப்பு, ஊரக உள்கட்டமைப்பு, கட்டுப்படியாகக் கூடிய வீட்டுவசதி, ஏழைகளுக்கான வீட்டுவசதி, தொழில் வளாக வழி மற்றும் உள்கட்டமைப்பு, அரசிடமே நிலம் உடமையாக இருக்கும் பட்சத்தில், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதி திட்டங்கள் ஆகிய 5 வகை திட்டங்களுக்கு, அத்தியாயம் II மற்றும் III-ன் கீழ் விதிவிலக்கு அளிக்க, சம்பந்தப்பட்ட அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், இந்த மசோதா மக்களவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அதாவது, ஊரக உள்கட்டமைப்பு போன்ற திட்டங்களுக்கு அத்தியாயம் II-ல் குறிப்பிடப்பட்டுள்ள சமூக தாக்கத்தை தீர்மானித்தல் மற்றும் பொதுநலன் மற்றும் III-வது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறப்பு கூறுகள் ஆகியவற்றிலிருந்து, பொதுவான விலக்கு எதுவும் அளிக்கப்படவில்லை. ஒவ்வொரு திட்டத்தையும் ஆராய்ந்து, குறிப்பிட்ட எந்த ஒரு திட்டத்திற்கும் விலக்கு அளிக்கவேண்டுமெனில், அந்த திட்டத்திற்கு விலக்கு அளிப்பதற்கான அதிகாரம் மட்டுமே, சம்பந்தப்பட்ட மத்திய அரசு அல்லது மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த திருத்த மசோதா, மாநிலங்களுக்குத் தேவையான அதிக அதிகாரத்தை வழங்குகிறதே அல்லாமல், சமூகத் தாக்கத்தை தீர்மானித்தல் மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவற்றிலிருந்து ஒட்டுமொத்தமாக விலக்கு அளித்து, 2013 ஆம் ஆண்டைய சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்யவில்லை.

    குறிப்பிடப்பட்ட 5 வகை நில எடுப்புக்கும் இந்த இரு அத்தியாயங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டுமா என்பதை, சம்பந்தப்பட்ட மாநில அரசே முடிவு செய்யலாம் என்னும் போது, அந்தந்த திட்டங்களுக்கு ஏற்ப, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு முடிவு செய்ய இயலும்.2013 ஆம் ஆண்டைய மூலச் சட்டத்தில், 13 மத்திய சட்டங்களுக்கு பொது விலக்கு அளிக்கப்பட்டுள்ளதே? அது போன்று பொது விலக்கு எதுவும், இந்த 5 வகை நில எடுப்புகளுக்கு தற்போது வழங்கப்படவில்லையே? மாநிலங்களுக்கு அதிகாரங்கள் வேண்டாம்; மத்திய அரசிடம் தான் இந்த அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்கிறாரா திரு.கருணாநிதி?

    எனது அறிக்கையில், முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை ஆதரித்து, தமிழக மக்களுக்கு எதிராக, திரு.கருணாநிதியும், திமுகவும், எவ்வாறு செயல்பட்டார்கள் என்று நான் எடுத்துக் காட்டியதை பொறுத்துக் கொள்ள முடியாத திரு.கருணாநிதி, 2013 மசோதாவை அஇஅதிமுக எதிர்த்து, தற்போது ஆதரவு அளித்தது இரட்டை நிலை என சொல்லியுள்ளார். இதில் எந்தவித இரட்டை நிலையும் இல்லை. மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் மசோதாவிற்கு 2013-ல் அஇஅதிமுக எதிர்ப்பு தெரிவித்தது.

    13 மத்திய சட்டங்களுக்கு, நில எடுப்பு ஷரத்துகளில் இருந்து விலக்கு அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே, மத்திய சட்டங்களின் படி, மத்திய அரசு நில எடுப்பு செய்வதை அஇஅதிமுக எதிர்த்தது. கெயில் நிறுவனம் போன்ற நிறுவனங்கள், மாநில அரசுகளை எதிர்த்து, விவசாயிகளுக்கு எதிராக செயல்பட வழிவகுத்த சட்ட மசோதாவை எதிர்த்தது. விவசாயிகளின் நலன் பாதிக்காமல், மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரம் வழங்கும் தற்போதைய சட்டத் திருத்தத்தை, அஇஅதிமுக ஆதரித்துள்ளது. இவை ஒரே நிலை தான். இரட்டை நிலை எதுவும் இல்லை.

    திரு. கருணாநிதி அறிக்கையில் மேலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்த உணவு பாதுகாப்பு மசோதாவை எதிர்த்த அஇஅதிமுக, தற்போது பா.ஜ.க அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தினை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். பாஜக அரசு புதிய உணவு பாதுகாப்பு சட்டத்தை எப்போது கொண்டு வந்தது? என்பதை திரு.கருணாநிதி தான் விளக்க வேண்டும்.

    அஇஅதிமுகவின் வேஷம் கலைந்து விட்டது என்பது விவசாயிகளுக்கு தெரியும் என திரு.கருணாநிதி தனது அறிக்கையில் கூறி, தமிழக விவசாயிகளை ஏமாற்றலாம் என மனப்பால் குடித்தால், அது ஒரு போதும் நிறைவேறாது. மீத்தேன் எரிவாயு திட்டத்தை அனுமதித்து, தஞ்சை தரணியை பாலைவனமாக்கத் துடித்த திரு. கருணாநிதி, விவசாயிகளின் நண்பனா? அல்லது மீத்தேன் எரிவாயு திட்டத்தை தடுத்து நிறுத்திய நான், விவசாயிகளின் நண்பனா? என்பது விவசாயிகளுக்கு தெரியும்.

    காவேரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்தை வஞ்சித்த திரு.கருணாநிதி, விவசாயிகளின் நண்பனா? அல்லது, உச்சநீதிமன்றத்தின் மூலம், காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை, மத்திய அரசிதழில் வெளியிடச் செய்த நான், விவசாயிகளின் நண்பனா? என்பது விவசாயிகளுக்குத் தெரியும்.

    முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில், முந்தைய மத்திய அரசுக்கு விசுவாசமாக செயல்பட்ட திரு. கருணாநிதி, விவசாயிகளின் நண்பனா? அல்லது உச்சநீதிமன்றத்தின் மூலம், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி, முதற்கட்டமாக, 142 அடி வரை முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் தேக்க, நடவடிக்கை எடுத்த நான், விவசாயிகளின் நண்பனா? என்பது விவசாயிகளுக்குத் தெரியும்.

    ஊட்டச்சத்து அடிப்படையிலான உர மானியக் கொள்கையை வகுத்து, உர விலை ஏற்றத்திற்கு வழிவகுத்த திரு.கருணாநிதி, விவசாயிகளின் நண்பனா? அல்லது உரத்திற்கான மதிப்புக் கூட்டு வரியை, முழுவதும் விலக்கிய நான், விவசாயிகளின் நண்பனா? என்பது விவசாயிகளுக்குத் தெரியும். கருணாநிதி பொய் அறிக்கைகள் மூலம் எவ்வளவு தான் முயன்றாலும், அதிமுகவிடமிருந்து விவசாயிகளை பிரிக்க முடியாது என தெரிவித்துக் கொள்கிறேன்."


    Mar 15,2015 02:47 pm
    Jayalalithaa
    http://www.halalgoogle.com/6/voting-to-narendra-modi-is-halal-or-haraam
    http://www.halalgoogle.com/6/voting-to-narendra-modi-is-halal-or-haraam


    Voting to Narendra Modi is Halal or Haraam? - حلال گوگل - Islamic Search Engine powered by Awliyā’
    www.halalgoogle.com
    Narendra Modi is declared as Presidential Candidate for India by Bhartiya Janta Party. I have dilema ... will be considered Haraam? What you feel?
    Mar 09,2015 10:52 pm
    Jayalalithaa
    அ.தி.மு.க பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதா அவர்கள் அறிவிப்பு - 9...
    அ.தி.மு.க பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதா அவர்கள் அறிவிப்பு - 9.3.2015
    ***********************************************************************************

    "கழகத்தின் கொள்கை–குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஒருவந்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் செல்ல.ராஜாமணி இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என கேட்டுக்கொள்கிறேன்."
    Mar 07,2015 03:06 pm
    Jayalalithaa
    மார்ச் 8 மகளிர் தினம்: அ.தி.மு.க பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலித...
    மார்ச் 8 மகளிர் தினம்: அ.தி.மு.க பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதா அவர்கள் வாழ்த்துச் செய்தி - 7.3.2015
    *************************************************************************************

    "கடந்த ஒரு நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக உலகப் பெண்கள் அரசியல், சமூகம், பொருளாதாரம், கலை என்று வாழ்வில் அனைத்து களங்களிலும் பெற்று வரும் மகத்தான வெற்றிகளை நினைவுபடுத்தவும், பெண்கள் வெற்றி கொள்ள வேண்டிய களங்களும், சவால்களும் இன்னும் ஏராளமாகக் காத்திருக்கின்றன என்பதைக் கருத்தில் கொள்ளவும் இந்நாள் மகளிர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

    பெண் இனம் அடைந்திருக்கும் வெற்றிகள் அனைத்திற்கும் என் பாராட்டுக்கள்; அடையப் போகும் வெற்றிகள் அனைத்திற்கும் என்றென்றும் நான் உறுதுணை.

    பெண் எப்பொழுதும் வெற்றியின் வடிவம்; பெண் தியாகத்தின் ஊற்று; பெண்மை இன்றி அமையாது உலகு. பெண்மை வாழ்க! பெண் இனம் வாழ்க! - என்று இந்த உலக மகளிர் தின நன்னாளில் இல்லத்தரசிகளாகவும்; பல்வேறு துறைகளில் பணிபுரியும் உழைக்கும் மகளிராகவும்; எதிர்காலத்தில் எத்தனையோ சாதனைகளை நிகழ்த்தும் கனவுகளுடன் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிலும் மாணவிகளாகவும்; இயன்றது அனைத்தையும் தம் குடும்பங்களுக்குத் தந்து, குடும்பத்தில் உள்ளோரின் உயர்விலும், மகிழ்ச்சியிலும் மன நிறைவு கொண்டு வாழும் தாய்மார்களாகவும் விளங்குகின்ற என் அன்புச் சகோதரிகளுக்கு எனது உளமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கடந்த காலங்களிலும்; அறிவியலும், நாகரீகமும் பெரும் வளர்ச்சியைப் பெற்றிருக்கும் இந்தக் காலத்திலும் ஒரு பெண் சமூகத்தில் சாதனையாளராக மட்டுமல்ல, சாமானியராக வாழ்வது கூட பெரும் சவாலாகத் தான் உள்ளது.

    இறைவன் ஆணையும், பெண்ணையும் அறிவிலும், ஆற்றலிலும் சமமாகத் தான் படைத்துள்ளார். வாய்ப்புகள் வெவ்வேறு வடிவங்களைப் பெறுவதாலும், பல நேரங்களில் பெண்ணுக்கு அவை மறுக்கப்படுவதாலும் சமூகத்தில் பெண்கள் தங்களுடைய முழு ஆற்றலையும் வெளிப்படுத்திக் கொள்ள இயலாமல் போயிற்று. ஆனால், பெண் இனம் சம வாய்ப்பும், சம மரியாதையும் பெற்றால் மட்டுமே ஒரு சமூகம் முழுமை பெற்ற சமூகமாகவும், வளர்ச்சி அடைந்த சமூகமாகவும் மாறும் என்பதை உலகம் உணரத் தொடங்கிவிட்டது. பெற்றிருக்கும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி, தங்கள் முழு ஆற்றலோடும், உற்சாகத்தோடும் உழைத்து, இன்னும் எண்ணற்ற வெற்றிகளை பெண் இனம் பெற வேண்டும் என்று மிகுந்த ஆவலோடு என்னுடைய நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சாதனைப் பெண்களைப் போற்றும் வகையில், வீர, தீரச் செயல் புரியும் பெண்களுக்கு "கல்பனா சாவ்லா விருது", சிறந்தப் பெண்மணிக்கு "அவ்வையார் விருது" ஆகியவை அதிமுக தலைமையிலான தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, தமிழ் நாட்டில் 10 இடங்களில் மகளிருக்கென மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. இவற்றில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயன் பெற்றிருக்கின்றனர் என்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

    மேலும், கழக மகளிர் அணியினர் ஏற்பாடு செய்திருக்கும் பேரணி, கருத்தரங்கம், பட்டிமன்றம் ஆகியவற்றிலும்; தலைமைக் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மகளிர் தின கொண்டாட்டத்திலும் மகளிர் அணியினர் பெருந்திரளான அளவில் பங்குபெற்று உலகப் பெண்களின் வெற்றியைக் கொண்டாடி மகிழுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    அது போலவே, உழைக்கும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவியருக்கு இனிப்பும், பூங்கொத்தும் வழங்குகின்ற நிகழ்ச்சியிலும் மகளிர் அணியினர் பெருந்திரளாகக் கலந்து கொண்டு பெண்மையை வாழ்த்திடுங்கள்.

    பெண்மை உயர உலகு உயரும். அனைவருக்கும் எனது மகளிர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்து மகிழ்கிறேன்."


    Mar 05,2015 06:40 pm
    Jayalalithaa
    Republic Day - 26.01.2015
    Republic Day - 26.01.2015


    Jan 26,2015 10:42 pm
    Jayalalithaa
    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தலைவி மக்களின் முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெ...
    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தலைவி மக்களின் முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களின் அறிவிப்பு - 14.01.2015
    *******************************************************************************

    "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, வரும் பிப்ரவரி 13 ந்தேதி நடைபெற உள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக, திருமதி எஸ். வளர்மதி, (திருச்சி மாநகர் மாவட்டக் கழக இணைச் செயலாளர்) தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
    Jan 16,2015 07:59 pm
    Jayalalithaa
    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிலைகளுக்குமான 4-வது கட...
    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிலைகளுக்குமான 4-வது கட்ட அமைப்புத் தேர்தல் பொறுப்பாளர்கள்
    *******************************************************************************

    விழுப்புரம் வடக்கு - அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத்தலைவர் ஆதிராஜாராம், விழுப்புரம் தெற்கு - மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுக மாணவர் அணி செயலாளருமான எஸ்.ஆர்.விஜயகுமார், தர்மபுரி - அதிமுக அமைப்பு சாரா ஒட்டுநர் அணி செயலாளர் கமலக்கண்ணன், சேலம் மாநகர்- அதிமுக வழக்கறிஞர் அணித்தலைவர் சேதுராமன், சேலம் புறநகர் - சுற்றுச்சூழல் அமைச்சரும் ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான தோப்பு வெங்கடாசலம், நீலகிரி- வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், திருச்சி மாநகர் - தொழில்துறை அமைச்சர் தங்கமணி, திருச்சி புறநகர் - நாடாளுமன்ற துணை சபாநாயகரும் அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரை, பெரம்பலூர்- அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் சின்னசாமி எம்.எல்.ஏ., அரியலூர் - பால்வளத்துறை அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பி.வி.ரமணா.
    Jan 11,2015 10:48 am
    Jayalalithaa
    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் அறிக்கை - 22.12.20...
    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் அறிக்கை - 22.12.2014
    *******************************************************************************

    "கழகத்தின் கொள்கை–குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும்வகையில் நடந்து கொண்டதாலும் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால் சேலம் புறநகர் மாவட்டத்தை சேர்ந்த சங்ககிரி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் எம்.கே.ராமச்சந்தர் ( ஐவேலி ஊராட்சி மன்றத்தலைவர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புக்கள் யாரும் அவருடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்."
    Dec 23,2014 11:04 pm
    Jayalalithaa
    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் அறிக்கை - 19.12.20...
    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் அறிக்கை - 19.12.2014
    *******************************************************************************

    "கழகத்தின் கொள்கை–குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கே.சங்கர் என்ற உதயசங்கர் (சேலம் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத் தலைவர்) பி.கே.மாதேஸ்வரன் (59-வது வட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர், கொண்டலாம்பட்டி பகுதி) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்."
    Dec 23,2014 10:45 pm
    Jayalalithaa
    அ.தி.மு.க தலைமை அலுவலக செய்திக்குறிப்பு - 19.12.2014 ***************************...
    அ.தி.மு.க தலைமை அலுவலக செய்திக்குறிப்பு - 19.12.2014
    ***************************************************************

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் இதய தெய்வம் 'பாரத் ரத்னா’ புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நம்மை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டு அமரர் ஆகிய நாள் 24.12.1987. அவரது 27-ஆவது ஆண்டு நினைவு நாளான 24 ந்தேதி காலை 10 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவைத் தலைவர் இ. மதுசூதனன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து, அவரது நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள்.
    Dec 23,2014 10:42 pm
    Jayalalithaa
    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தலைவி மக்களின் முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெ...
    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தலைவி மக்களின் முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் அறிவிப்பு - 16.12.2014
    *******************************************************************************

    "கழகத்தின் கொள்கை–குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தி்ன் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக்கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.கே.செல்லமுத்து (சேந்தமங்கலம் பேரூராட்சி கழக மாவட்ட பிரதிநிதி) அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த குணசேகரன் (சுன்னங்குடி கிளைக்கழக செயலாளர் திருமானார் ஒன்றியம்) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகின்றனர்.

    கழக உடன்பிறப்புகள் யாரும் இனி அவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்."
    Dec 16,2014 08:31 pm
    Jayalalithaa
    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தலைவி மக்களின் முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெ...
    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தலைவி மக்களின் முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் அறிவிப்பு - 10.12.2014
    *******************************************************************************

    "கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கு அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஒன்றியத்தை சேர்ந்த எஸ்.பாலச்சந்தர்( தட்டர்மடம் நடுவக்குறிச்சி கிளைக்கழக செயலாளர்) கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாலும் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.அவருடன் கழக தோழர்கள் எந்தவித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்."

    "கழகத்தின் கொள்கை–குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருப்பூர் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயமணி (திருப்பூர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை, உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்."
    Dec 10,2014 10:51 pm
    Jayalalithaa
    YE HAI HAMAARA TIRANGA JAI BHIM जय मूल िनवासी
    YE HAI HAMAARA TIRANGA

    JAI BHIM

    जय मूल िनवासी


    Dec 02,2014 07:49 pm
    Jayalalithaa
    िरहमिन देश दरेही...कुतता....
    िरहमिन देश दरेही...कुतता....


    Dec 02,2014 06:55 pm
    Jayalalithaa
    World AIDS day message of the Chief Minister Mr. O. Panneerselvam (Dt. 30-Nov-20...
    World AIDS day message of the Chief Minister Mr. O. Panneerselvam (Dt. 30-Nov-2014)
    *******************************************************************************

    "ஆண்டுதோறும் டிசம்பர் திங்கள் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. எய்ட்ஸ் இல்லாத சமூகத்தை உருவாக்கும் வகையில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே உலக எய்ட்ஸ் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

    தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வினை மக்களிடையே ஏற்படுத்திடும் வகையில் பல்வேறு கிராமிய கலைகள் மூலமாகவும், வளரிளம் பருவ பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் கல்வி மூலமாகவும் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 2458 செஞ்சுருள் சங்கங்கள் மூலமாகவும் எய்ட்ஸ் நோய் பற்றிய உண்மை விவரங்களை, அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    எச்.ஐ.வி. நோயை கண்டறிய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நம்பிக்கை மையங்கள், பொது கூட்டாண்மை மையங்கள், பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்கள் நிறுவப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கும் வகையில் 52 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள், 149 இணைக் கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் மற்றும் 16 சட்ட உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்குச் சென்று வர கட்டணமில்லா பேருந்து பயண அட்டை; எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் மாத ஓய்வூதியம்; முதியவர்களுக்கும், இளம் விதவைகளுக்கும் வயது வரம்பை தளர்த்தி ஓய்வூதியம்; எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்கள் பயன்பெறும் வகையில் பசுமை வீடு கட்டும் திட்டத்தில் முன்னுரிமை போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    எச்.ஐ.வி / எய்ட்ஸ் உள்ளோரை அரவணைப்போம்!
    அன்பு செலுத்துவோம்! மனித நேயம் வளர்ப்போம்!
    எய்ட்ஸ் இல்லாத சமுதாயத்தை உருவாக்கிடப் பாடுபடுவோம்!

    என்கிற உறுதிமொழியினை உலக எய்ட்ஸ் தினமான இன்று அனைவரும் ஏற்று, அதன்படி செயலாற்றிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்."
    Nov 30,2014 09:13 pm
    Jayalalithaa
    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தலைவி மக்களின் முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெ...
    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தலைவி மக்களின் முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் அறிவிப்பு - 28.11.2014
    **************************************************************************************

    "கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை துணைச்செயலாளர் பி.மனோகரன் 28.11.2014 முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்."
    Nov 30,2014 08:59 pm
    Jayalalithaa
    Statement of Chief Minister Mr. O. Panneerselvam on Karunanidhi's ''பினாமி'' con...
    Statement of Chief Minister Mr. O. Panneerselvam on Karunanidhi's ''பினாமி'' confabulation - 27.11.2014
    *******************************************************************************

    "தி.மு.க. தலைவர் கருணாநிதியும், தலைவர் பதவிக்கு, இலவு காத்த கிளியாய் காத்துக் கொண்டிருக்கும் தனயன் மு.க.ஸ்டாலினும் தற்போது நடைபெற்று வரும் அண்ணா தி.மு.க. அரசை, பினாமி அரசு என்று தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றனர். புரட்சித் தலைவி அம்மா, தமிழக மக்களின் நலன் காக்க எடுத்த நடவடிக்கைகளும், புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் இந்த அரசு, தொடர்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகளினாலும் ஏற்பட்டுள்ள பதற்றம், தி.மு.க.வின் உட்கட்சி தேர்தல்களில் ஏற்பட்டு வரும் உட்கட்சிப் பூசல், தனது தனயனே இல்லை என்று கருணாநிதியால் தலைமுழுகப்பட்டு விட்ட ஸ்டாலினின் தமயன் அழகிரி, தி.மு.க. விரைவிலேயே தேட வேண்டிய சூழ்நிலைக்கு சென்று விடும்” என்று கூறிவிட்ட கசப்பான உண்மை ஆகியவற்றால் ஏற்பட்ட குழப்பங்களின் காரணமாக இந்த அரசை ‘பினாமி அரசு’ என்று கருணாநிதியும், ஸ்டாலினும் கூறி வருகிறார்கள். குழப்பங்கள் சற்று தெளிந்தவுடன், ‘ஓ’ என்ற எழுத்துக்கும், பூஜ்யம் என்ற எண்ணுக்கும் இடையே இருந்த குழப்பம் எவ்வாறு தீர்ந்ததோ, அதே போல இந்தக் குழப்பமும் தீர்ந்து விடும் என நான் நம்பியிருந்தேன். ஆனால் ‘பினாமி அரசு’ என்னும் சொற்றொடர் குழப்பம் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இன்னமும் தீரவில்லையென்பதால், இதுபற்றிய விளக்கத்தை அளிப்பது எனது கடமையெனக் கருதுகிறேன்.

    தனது கேள்வி பதில் அறிக்கையில் கருணாநிதி,

    "அ.தி.மு.க.வினர், ‘‘தி.மு.க. அரசை மைனாரிட்டி தி.மு.க. அரசு” என்று இன்று வரை அழைத்ததற்கு, தற்போதுள்ள அண்ணா தி.மு.க. அரசை பினாமி அண்ணா தி.மு.க. அரசு” என்று தி.மு.கழகத்தினர் அழைத்து வருகிறார்கள். ஆனால் பினாமி அண்ணா தி.மு.க. அரசு என்பது எவ்வாறு பொருந்துகிறது? ” -

    என தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டு,

    ‘‘பினாமி” என்றால் உரிமை கொண்டாட ஒருவர் இருப்பார்; உண்மையான உரிமை வேறோருவரிடம் இருக்கும். தமிழகத்தில் தற்போதுள்ள முதலமைச்சர் அப்படித்தானே இருக்கிறார். முதலமைச்சர் தான் அப்படி என்றால், நிர்வாகத்திற்குத் தலைமையேற்று நடத்த வேண்டியவர் தலைமைச் செயலாளர். தற்போது தலைமைச் செயலாளர் பெயருக்குத் தான் இருக்கிறாரே தவிர, அதிகாரம் முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்து தற்போது ஆலோசகராக இருப்பவரிடம் தான் உள்ளது. அதுபோலத் தான், காவல்துறையைப் பொறுத்தவரை டி.ஜி.பி.தான் தலைமைப் பொறுப்பை வகித்து வந்தார். தற்போது அந்தத் துறையிலும் ஆலோசகர் ஒருவர் வந்துவிட்டார். எனவே ‘பினாமி அரசு’ என்பது பொருத்தமாகத்தானே உள்ளது. -

    என பதில் கூறி உள்ளார்.

    இதிலிருந்தே குடும்ப சண்டை சச்சரவு, குடும்பத்தினர் மீது உள்ள ஊழல் வழக்குகள், கட்சியினரிடையே உள்ள கோஷ்டிப் பூசல் ஆகியவற்றின் காரணமாக கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ள குழப்பத்தின் காரணமாகத் தான் அவர், இந்த அரசை பினாமி அரசு என்று கூறியுள்ளார் எனத் தெளிவாகிறது.

    பினாமி என்பதன் பொருள் வரையறை, “a sale or purchase made in the name of some one other than the actual vendor or purchaser” என்பதாகும். அதாவது உண்மையான விற்பனையாளர் அல்லது வாங்குபவர் அல்லாது வேறு ஒருவரின் பெயரில் செய்யப்படும் விற்பனை அல்லது வாங்குதல் என்பதாகும். எனவே, ‘பினாமி’ என்பதன் பொருள் என்ன என்பதை கருணாநிதி யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அரசு என்பதும், முதலமைச்சர் பதவி என்பதும் உரிமை பற்றியது அல்ல; அது கடமை பற்றியது என்பது கடமை உணர்வு உள்ளவர்களுக்குத் தான் புரியும். கருணாநிதி அதிகாரத்தைப் பற்றி அதாவது அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பது பற்றி தனக்கு கற்பனையாகத் தோன்றியுள்ளதை தெரிவித்துள்ளதால், அவர் ‘de facto’ மற்றும் ‘de jure’ என்று உள்ள சொற்களைத் தான் இவ்வாறு குழப்பமாக பயன்படுத்தியுள்ளார் போலும்! கருணாநிதிக்கு வழக்கமாக ஏற்படும் பல வகை குழப்பங்களில் இதுவும் ஒன்று. எனவே தான், ஆலோசகர்களிடம் அதிகாரம் இருப்பதாக தனது அறிக்கையில் கற்பனை செய்துள்ளார். ஆலோசகருக்கு உள்ள கடமைகள் வேறு; தலைமைச் செயலாளருக்கு உள்ள கடமைகள் வேறு; காவல் துறை தலைமை இயக்குநருக்கு உள்ள கடமைகள் வேறு; இந்த வித்தியாசங்கள் எல்லாம் தெரியாவிட்டால் இது போன்று தன்னையும் குழப்பிக்கொண்டு மற்றவர்களையும் குழப்ப எத்தனிக்கவேண்டும் தான்!

    தலைமைச் செயலாளர் என்னென்ன கோப்புகளைப் பார்க்க வேண்டும்? முதலமைச்சருக்கு கோப்புகளை எவ்வாறு அனுப்ப வேண்டும்? என்பது பற்றியெல்லாம் அரசின் அலுவல் விதிகள் மற்றும் தலைமைச் செயலகப் பணி விவரங்கள் ஆகியவற்றில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆலோசகர் என்பவர் அரசுக்கும், முதலமைச்சருக்கும் பல்வேறு கொள்கை முடிவுகளில் ஆலோசனை வழங்குபவர் ஆவார். அரசின் கோப்புகளை ஆலோசகர் பார்ப்பதும் இல்லை. அதில் கையெழுத்து இடுவதும் இல்லை. முதலமைச்சராக இருந்த போது இதைப் பற்றி அவர் கேட்டு தெரிந்திருந்தால் இது போன்ற ஒரு ஐயப்பாடு எழ வாய்ப்பில்லை.

    மத்திய அரசிலும் ஆலோசகர் பதவி இருப்பது கருணாநிதிக்கு தெரியுமா? தெரியாதா? தி.மு.க அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் ஆலோசகர் என்ற பதவிகள் இருந்தனவே. அமைச்சரவையின் செயலாளர் அதாவது Cabinet Secretary என்பவர் தான் இங்கே தலைமைச் செயலாளர் போன்று அரசின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர். அப்படியென்றால், அமைச்சரவை செயலர் அதிகாரம் இல்லாதவராகவும், ஆலோசகர் அதிகாரம் உள்ளவராக, பினாமியாக இருந்தார் என கருணாநிதி தெரிவிக்க விரும்புகிறாரா? அதே போன்று, பாதுகாப்பு செயலாளர் என்பவர் மத்திய அரசில் பாதுகாப்பு குறித்த மிக உயர்ந்த அதிகாரி ஆவார். அப்படி என்றால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அதாவது, National Security Adviser என்பவர் பினாமி அதிகாரி என்று கருணாநிதி சொல்கிறாரா?

    கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது 1989–ம் ஆண்டு ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி குகனை ஆலோசகராக நியமித்தாரே? அது எந்த அடிப்படையில் என்று கருணாநிதி விளக்குவாரா? அப்போது பினாமி அடிப்படையில் ஆலோசகர் பதவி ஏற்படுத்தப்பட்டது என்று கருணாநிதி சொல்கிறாரா? என்பதை அவர் தான் விளக்க வேண்டும். தன்னால் நியமிக்கப்பட்ட ஆலோசகர் தெரிவித்த ஆலோசனையின் பேரில் குடும்ப அட்டைகள் பெறத் தகுதியுடையவர்களை நிர்ணயிக்க கணக்கெடுப்பு படிவம் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதில் ஏற்பட்ட பிரச்சனைகளையெல்லாம் கருணாநிதி மறந்திருந்தால், அது பற்றி நினைவில் வைத்திருக்கும் அவரது கட்சியினரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

    30.11.1997 அன்று ஏ.கே.வெங்கட் சுப்ரமணியன் என்ற ஐஏஎஸ் அதிகாரி ஓய்வு பெற்றவுடன் 1.12.1997 முதல் முதலமைச்சர் அலுவலகத்தில் சிறப்புப் பணி அலுவலராக மறுபணி நியமனம் செய்யப்பட்டு 9 துறைகளின் பணிகளை மேற்பார்வை மற்றும் ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டார். துறைகளின் பணிகளை மேற்பார்வை மற்றும் ஆய்வு செய்வது தலைமைச் செயலாளரின் பணி தானே! அப்படியென்றால் சிறப்புப் பணி அலுவலர் என ஒரு பினாமி பதவியை கருணாநிதி ஏற்படுத்தினாரா?

    கே.ஏ.சுந்தரம் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒய்வு பெற்ற பின், அவரை Officer on Special Duty, அதாவது சிறப்புப் பணி அலுவலராக நியமனம் செய்தாரே கருணாநிதி, அதுவும் பினாமி பதவியா?

    ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.லெட்சுமி காந்தன் பாரதியை 1998ல் முதலமைச்சர் அலுவலகத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் பணிகள்; மக்கள் நலப் பணியாளர்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பணியாற்றிட ஒருங்கிணைப்பாளராக, அதாவது, Co-ordinator என நியமனம் செய்து கருணாநிதி ஆணை வெளியிட்டாரே? அப்படியெனில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு பினாமியாக ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது என்று சொல்கிறாரா கருணாநிதி?

    முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் பல்வேறு அதிகார மையங்கள் இருந்தன என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர். கருணாநிதியும், ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும், ஒவ்வொரு அதிகார மையங்களாக செயல்பட்டார்கள் என்பதும், இந்த அதிகார மையங்கள் காவல் துறையினருக்கே பல்வேறு முரண்பாடான உத்தரவுகளை பிறப்பித்தன என்பதும் நாடறிந்த உண்மை. அவ்வாறு கருணாநிதி ஆட்சி நடத்தியதால் தான் தமிழக மக்கள் தி.மு.க.வை தூக்கி எறிந்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். கருணாநிதியின் ஆட்சியில் பல்வேறு அதிகார மையங்கள் இருந்ததால் தான் அதே நினைவில் தற்போதும் அதிகாரங்கள் பற்றி கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.

    தனது தனயனுக்காக கருணாநிதி உருவாக்கிய துணை முதல்வர் என்ற பதவி இந்திய அரசமைப்புச் சட்டத்திலோ, அரசின் அலுவல் விதிகளிலோ இல்லையே? அப்படியென்றால் பினாமி முதல்வராக ஸ்டாலினை கருணாநிதி நியமித்தாரா? மூத்த அமைச்சர் க.அன்பழகன் கோப்புகளைப் பார்த்தபின் துணை முதல்வருக்கு கோப்புகள் சமர்ப்பிக்கப்படுவது பற்றி பிரச்சனை ஏற்பட்டு, சமாதான நடவடிக்கையாக நிதியமைச்சர் பார்க்க வேண்டிய கோப்புகளை துணை முதல்வர் பார்த்தபின் நிதியமைச்சருக்கு அனுப்பப்படலாம் என்ற வேடிக்கை உத்தரவை பிறப்பித்தவர் தான் கருணாநிதி.

    2006–ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியமைத்த போது 234 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றப் பேரவையில் தி.மு.க. உறுப்பினர்களின் எண்ணிக்கை 96 தான்.
    234 உறுப்பினர்களில் பாதி எண்ணிக்கை 117 ஆகும். எனவே, தனியாக ஒரு கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என்றால் அந்த கட்சிக்கு 118 உறுப்பினர்களாவது இருத்தல் வேண்டும். அப்போது தான் அதனை ஒரு மெஜாரிட்டி அரசு என்று கூற இயலும். 118 என்ற எண்ணிக்கைக்கு, மற்ற கட்சிகளுடன் அவை கூட்டணிக் கட்சிகளாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவைகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கப்பட்டால் அதை கூட்டணி ஆட்சி என்று கூறலாம். ஆனால் வெறும் 96 உறுப்பினர்களுடன் அமைக்கப்பட்ட தி.மு.க ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி என்று சொல்லாமல் வேறு என்ன என்று சொல்ல இயலும்? மைனாரிட்டி அரசு என்பதற்கான விளக்கம் பற்றி கருணாநிதிக்கும், தி.மு.க.விற்கும் இன்று வரை புரியாததால் தான் மைனாரிட்டி தி.மு.க. அரசு என்று நாங்கள் குறிப்பிடுவதை பற்றி வருத்தப்படுகிறார்கள்; கோபப்படுகிறார்கள்.

    2006ல் அமைக்கப்பட்ட தி.மு.க. அரசு ஏன் மைனாரிட்டி அரசு என்று புரட்சித் தலைவி அம்மா 2006 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் நடைபெற்ற திருத்திய வரவு செலவு திட்ட பொது விவாதத்தின் போது மிகக் தெளிவாகக் குறிப்பிட்டு பேசியுள்ளார். அந்த விவாதத்தின் போது மொத்தம் உள்ள 234 இடங்களில்
    163 இடங்களைப் பெற்றிருக்கிற கூட்டணி ஆட்சி என க.பொன்முடி தந்திரமாக சொல்லி தப்பிக்க முயன்ற போது, புரட்சித் தலைவி அம்மா, அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் ஆட்சியில் பங்கு கொண்டிருந்தால், கூட்டணி அரசாக அது இருந்திருந்தால் தான் கூட்டணி அரசு என்று சொல்ல முடியும் என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தார். கூட்டணி அரசாகவும் இல்லாமல், தனியே வெறும் 96 உறுப்பினர்களை கொண்டு ஆட்சியமைத்து, 34 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சியின் தயவில் ஆட்சி நடத்திய திமுக, மைனாரிட்டி அரசு தான் என்பதில் எவருக்கும் சந்தேகம் எழுந்ததில்லை. அண்ணா தி.மு.க.வைப் பொறுத்தவரை 2011ம் ஆண்டு புரட்சித் தலைவி அம்மா முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற போது அண்ணா தி.மு.க.வின் உறுப்பினர்கள் 150 பேர். இன்றைக்கும் அ.தி.மு.க.வின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 151. அன்றும், இன்றும், எங்களது அரசு ஒரு பெரும்பான்மை, அதாவது, மெஜாரிட்டி அரசு தான். அண்ணா தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களால் சட்டமன்றத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள என்னையும், அண்ணா தி.மு.க. அரசையும், பினாமி அரசு என்று கூறுவது காழ்ப்புணர்ச்சியால் தான் என்பது எவருக்கும் எளிதில் புரிந்து விடும்.

    மு.க.ஸ்டாலின் ஒரு விழாவில் பேசும் போது, வழக்கம் போல எதிர்கட்சிகளை வெளியே தூக்கிப் போடாமல், மக்கள் பிரச்சனை குறித்து பேச அனுமதி கிடைக்கும் என்று தான் நினைப்பதாகத் தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகளுக்கு உரிய மரியாதை அளித்து, அவர்களது வாதங்களை கேட்டு, அவர்களது வினாக்களுக்கு தகுந்த பதில் அளிப்பது; எதிர்கட்சியினரின் கருத்துகள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பின், அவற்றை ஏற்றுக் கொள்வது; என்ற மிக உயர்ந்த ஜனநாயக கோட்பாட்டில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர் புரட்சித் தலைவி அம்மா. எனவே தான் சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் நியாயமான ஆலோசனைகளை வழங்கியபோது சிறிதும் தாமதிக்காமல் உடனேயே அவற்றை ஏற்றுக் கொள்வதாக பல நேரங்களில் புரட்சித் தலைவி அம்மா அறிவித்துள்ளார். சட்டமன்றத்திற்கு வருவதே குழப்பம் விளைவிப்பதற்கும், சபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்துவதற்கும், பொய் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதற்கும், சட்டப் பேரவைத் தலைவர் இருக்கைக்கு முன் அமர்ந்து போராடுவதற்கும், சட்டப் பேரவைத் தலைவரின் ஆணைகளுக்கு கட்டுப்படாமல் மற்ற உறுப்பினர்களை பேச விடாமல், இடையூறு ஏற்படுத்தி கூச்சல் குழப்பம் விளைவிப்பதற்கும் தான் என்ற அடிப்படையில் செயல்படும் தி.மு.க. உறுப்பினர்களை சட்டப் பேரவைத் தலைவர் வெளியேற்றாமல், சட்டமன்றத்தை எவ்வாறு நடத்த இயலும்? சட்டமன்றத்தின் மற்ற உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பது எங்ஙனம்? சட்டமன்றத்திற்கே வராத கருணாநிதி தவிர்த்து எஞ்சிய தி.மு.க.வின் 22 உறுப்பினர்கள் சட்டமன்றத்தின் மாட்சிமையையே பிணையத்திற்கு உள்ளாக்கும் போது சட்டமன்றத்தின் மாட்சிமையை மீட்டு எடுக்க வேண்டியது சட்டப் பேரவைத் தலைவரின் கடமை அல்லவா?

    தற்போது நான் விரிவாக அளித்துள்ள விளக்கத்தை கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் நன்கு படித்து புரிந்து கொண்டால் அண்ணா தி.மு.க. அரசு, பெரும்பான்மை அரசு, அதாவது மெஜாரிட்டி அரசு என்பது புரிய வரும். சட்டப் பேரவையில் எவ்வாறு நடந்து கொள்வது என்பதை உணர்ந்து, அதற்கேற்ப விவாதங்களில் பங்கு பெற்றால், சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும். அவ்வாறு இல்லாமல் மற்ற உறுப்பினர்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், சட்டப் பேரவையின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், தி.மு.க.வினர் நடந்து கொண்டால் அதற்குரிய பலனைத் தான் அவர்கள் பெறுவர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
    Nov 27,2014 10:46 pm
    Jayalalithaa
    Statement of the Chief Minister Chief Minister Mr. O. Panneerselvam on Tamil Nad...
    Statement of the Chief Minister Chief Minister Mr. O. Panneerselvam on Tamil Nadu Assembly - 26.11.2014
    *******************************************************************************

    "தி.மு.க தலைவர்.கருணாநிதியும், அவருடன் பனிப்போர் தொடுத்திருக்கும் அவரது தனயன்.மு.க.ஸ்டாலினும் பேரவையைக் கூட்டுவது பற்றி தரம் தாழ்ந்த அறிக்கைகளை வெளியிடுவதும், விமர்சனங்கள் செய்வதையும் தொடர்ந்து வருகின்றனர். சட்டப் பேரவை நடவடிக்கைகள் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத திரு.கருணாநிதி, சட்டப் பேரவையைக் கூட்டாதது தமக்கு வருத்தமளிப்பதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தது பற்றி 22.11.2014 அன்று நான் ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளேன். அந்த அறிக்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை அரசால் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையிலிருந்து அவர்களைக் காப்பாற்ற தீர்மானம் நிறைவேற்றிடவும், மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதைத் தடுப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றவும் சட்டப் பேரவையைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு விளக்கம் அளித்திருந்தேன்.

    இலங்கை அரசால் பொய் வழக்கு தொடுக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களின் வழக்கினை நடத்த புரட்சித் தலைவி அம்மா அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் பற்றியும், வாழ்வாதாரம் இழந்து நிற்கும் அவர்களது குடும்பத்தினைரைக் காப்பாற்ற செய்த உதவிகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்ததோடு, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழியில் நடைபெறும் அஇஅதிமுக அரசு, 5 மீனவர்கள் உயிர் காக்க விரைந்து செயல்பட்ட விவரங்களையெல்லாம் நான் விரிவாக எடுத்துக் கூறினேன். அது போன்றே, மேகதாது பிரச்சனையில் விரைந்து எடுக்கப்பட வேண்டிய உரிய நடவடிக்கை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது தான் என்பதையும் நான் விளக்கியிருந்தேன். அந்த அடிப்படையில் மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடு அரசு 18.11.2014 அன்று உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்ததையும் எனது அறிக்கையில்.கருணாநிதிக்கு நினைவூட்டி, சட்டமன்றத்திற்கு வருவது என்பது திரு.கருணாநிதியைப் பொறுத்த வரையில் சட்டமன்றத்தின் தாழ்வாரத்தில் உள்ள வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இடுவது தான், சட்டமன்ற உறுப்பினரின் தலையாயப் பணி என்பதை திரு.கருணாநிதி ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியதிலிருந்து மேற்கோள் காட்டி நான் விளக்கியிருந்தேன். ‘கேள்வியும் நானே, பதிலும் நானே’ என்ற அடிப்படையில்.கருணாநிதி கேள்வி-பதில் அறிக்கையில் நான் பிதற்றியிருப்பதாக தரம் தாழ்ந்து விமர்சித்ததோடு சட்டமன்றத்தைக் கூட்ட நான் பதற்றப்படுவதாகத் தெரிவித்து, ‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு என்ன விலை?’ என்பது போல் பருப்பு வாங்கும் டெண்டரில். ராமதாஸ் கேள்விக்கு பதில் கூறட்டும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். பருப்பு பற்றி.ராமதாஸ் கேள்விக்கு உணவுத் துறை அமைச்சர் ஏற்கெனவே பதிலளித்துவிட்டார். ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு ஒன்றையும் அவர் தொடுத்துள்ளார் என்பதை கருணாநிதிக்கு இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.

    தனது கேள்வி-பதில் அறிக்கையில், சட்டப் பேரவைக்கு தான் ஏன் வருவதில்லை என்பதை 2013 ஆம் ஆண்டில் ஒரு முறையும், 2014 ஆம் ஆண்டில் ஒரு முறையும் தான் விளக்கிவிட்டதாகவும், தனக்கு முறையான இட வசதி செய்து தரவில்லை என்று ஒரு புதிய கயிறு திரிக்க முனைந்துள்ளார். சட்டமன்றத்திற்கு.கருணாநிதி வருவது பற்றி, ‘வசதிப்படி பார்ப்போம்’ என்று 25.8.2011 அன்று நடைபெற்ற தி.மு.க பொதுக் கூட்டத்தில்.கருணாநிதி பேசியதை நான் ஏற்கெனவே சுட்டிக் காட்டினேன். அதே கூட்டத்தில், ‘சட்டமன்றத்திற்குச் சென்று கையெழுத்துப் போடாவிட்டால், நம்முடைய கையொப்பம் பதிவாகாமல் போய் விட்டால், சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிபோய் விடும்’ என்று சட்டமன்ற உறுப்பினரின் பணி பற்றி, கடமை பற்றி, தன்னல விளக்கம் கொடுத்த.கருணாநிதியைப் பற்றி நான் தோலுரித்துக் காட்டியிருந்தேன்.
    தற்போதும், திருவாருர் தொகுதி மக்களின் பிரதிநிதி என்ற முறையில் சட்டமன்றத்திற்கு வந்து விவாதங்களில் பங்கேற்பது தனது கடமை என்பதை வசதியாக மறந்து விட்டு, ஆளும் கட்சியினர் என்னென்ன உறுதிமொழிகளை அளித்தால் இவர் தனது காலடியை சட்டமன்றத்திற்குள் பதிய வைப்பார் என்பதை சொல்லியிருக்கிறார்.கருணாநிதி. புரட்சித் தலைவி அம்மா அவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், சட்டமன்றத்திற்கு வந்து பேசும் போது, தி.மு.க உறுப்பினர்கள் கட்டுப்பாடு காத்து, அமைதியாக இருந்து அம்மாவின் உரையைக் கேட்டதாகவும், அப்போது தி.மு.க உறுப்பினர்கள் கடைபிடித்த கண்ணியத்தைப் போல, இப்போது அஇஅதிமுக உறுப்பினர்கள் நிச்சயம் கடைபிடிப்பார்கள் என்ற உறுதிமொழியை அளித்தால், சட்டப் பேரவைக்கு வருவதற்கு தாம் தயாராக இருப்பதாக.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

    தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, முதலமைச்சர் திரு.கருணாநிதியும், தி.மு.க அமைச்சர்களும், தி.மு.க உறுப்பினர்களும் எப்படிப்பட்ட கண்ணியத்தைக் கடைபிடித்தார்கள் என்பதை இந்த நாடே நன்கறியும். புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பேசும் போது எப்படியெல்லாம் குறுக்கீடுகள் செய்தார்கள் என்பதும், எவ்வளவு கீழ்த்தரமான விமர்சனங்களை செய்தார்கள் என்பதும், பேசவே விடாமல் எத்தகைய அராஜகத்தில் ஈடுபட்டார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரியும். தமிழக மக்கள் இவற்றையெல்லாம் மறந்து விடுவார்கள் என்று திரு.கருணாநிதி நினைப்பாரேயானால், அவர் ஏமாற்றம் தான் அடைவார். தி.மு.க அரசு நடைபெற்றபோதெல்லாம், அமைச்சர்களும், தி.மு.க உறுப்பினர்களும் நடந்து கொண்ட இது போன்ற இழி செயல்களைத் தான், ‘கண்ணியம்’ என்று.கருணாநிதி குறிப்பிடுவாரேயானால், அது போன்று நாங்களும் இழிவாக நடந்து கொள்வோம் என்ற உறுதிமொழியை நிச்சயம் எங்களால் அளிக்க இயலாது என்பதை திரு.கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் சரி, எதிர்கட்சியாக இருந்தாலும் சரி, சட்டப் பேரவையின் கண்ணியத்திற்கும், மாண்பிற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் எந்த அளவுக்கு இழிவாக நடந்து கொள்ளமுடியுமோ, அந்த அளவுக்கு தி.மு.க.வினர் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற ஒரு சில நிகழ்வுகளின் மூலம் திரு.கருணாநிதிக்கு நினைவுபடுத்துவது அவசியம் என்று கருதுகிறேன்.

    25.3.1989 அன்று தமிழக சட்டப்பேரவையில் அன்றைய முதலமைச்சர் மற்றும் நிதியமைச்சராக இருந்த.கருணாநிதி பட்ஜெட் தாக்கல் செய்ய முற்பட்ட போது, ஒரு உரிமை மீறல் பிரச்சனையை எடுத்துக் கொள்ளும்படி புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். ஜனநாயக ரீதியாக புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வைத்த கோரிக்கைக்கு திமுக அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் எப்படி நடந்து கொண்டார்கள், புரட்சித் தலைவி அம்மா அவர்களையும், அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களையும் எவ்வாறு தாக்கினார்கள், புரட்சித் தலைவி அம்மா அவர்களை எவ்வாறு மானபங்கப்படுத்த முயற்சித்தார்கள் என்பதையெல்லாம் தமிழக மக்கள் என்றைக்கும் மறந்து விட மாட்டார்கள். 25.3.1989 அன்று பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கும் போது, அப்போது சட்டமன்றத்தில் இந்திரா காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்த திரு.குமரி அனந்தன் ‘அவை மீறல் குறித்து ஒரு தீர்மானம் கொண்டு வந்திருந்தேன், அதற்கு அனுமதியும் கோரியிருக்கிறேன்’ என்று குறிப்பிட்டார். அதனையடுத்து, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் எழுந்து பேசினார்கள். அப்போது தனது தனிப்பட்ட உரிமையும், சட்டமன்ற உறுப்பினர் என்ற உரிமையும், எதிர்கட்சி தலைவர் என்கிற உரிமையும் மீறப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சரின் தூண்டுதலின் பேரில் காவல்துறையின் அத்து மீறல்கள் நடந்துள்ளன என்றும்; தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுகின்றன என்றும் தெரிவித்து உரிமை மீறல் பிரச்சனையை எழுப்பினார்கள். அப்போது முதல்வர் திரு.கருணாநிதி பட்ஜெட் உரையை படிக்க துவங்கியதும், அதனை ஆட்சேபித்து, உரிமை மீறல் பிரச்சனையை உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்திய போது, அன்றைய முதல்வர் திரு.கருணாநிதி ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி ஆவேசமாகக் கத்தினார். அதையடுத்து தி.மு.க அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் புரட்சித் தலைவி அம்மா அவர்களையும், அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களையும் நோக்கி ஆபாச வார்த்தைகளை சொல்லிக் கொண்டே பாய்ந்து தாக்கினார்கள். மேஜை, நாற்காலிகள், பட்ஜெட் உரையின் நகல்கள், புத்தகங்கள், செருப்புகள், பேப்பர் வெயிட்கள் ஆகியவையும் புரட்சித் தலைவி அம்மா அவர்களை நோக்கி வீசப்பட்டன. தி.மு.க அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் இவ்வாறு தாக்குவதை இந்திரா காங்கிரஸ் தலைவர்.மூப்பனாரும், துணைத் தலைவர்.குமரி அனந்தனும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரும் தடுக்க முயற்சித்தார்கள். அப்போது. மூப்பனார் மீதும் செருப்புகள் வீசப்பட்டன. தொடர்ந்து சபையிலிருந்தால் கொல்லப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் புரட்சித் தலைவி அம்மா அவர்களும் மற்றும் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் சபையை விட்டு வெளியேற முற்பட்டபோது,.கருணாநிதி அருகிலிருந்த திரு.துரைமுருகன் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புடவையை இழுத்து மானபங்கம் செய்ய முயற்சித்தார். தி.மு.க அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் இந்த நடவடிக்கையைத் தான் தி.மு.க உறுப்பினர்கள் கடைபிடிக்கும் கண்ணியம் என்று.கருணாநிதி குறிப்பிடுகிறாரா? என்பதை அவர் தான் தெளிவுபடுத்த வேண்டும்.

    2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரு மைனாரிட்டி அரசை தி.மு.க அமைத்தது. அப்போது ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது 26.5.2006 அன்று அஇஅதிமுக உறுப்பினர்கள் அனைவரும் அந்த சட்டமன்றக் கூட்டத் தொடர் முடியும் வரை நீக்கப்படும் உத்தரவை அன்றைய பேரவைத் தலைவர் பிறப்பித்தார். அன்றைய கூட்டத்தில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கலந்து கொள்ளாததால், அவர் மட்டும் சட்டமன்றக் கூட்ட தொடர் நடவடிக்கையில் இருந்து நீக்கம் செய்யப்படவில்லை. சட்டப் பேரவையில் அஇஅதிமுகவின் கருத்துகள் பதியப்படவேண்டும் என்பதால் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 27.5.2006 அன்று சட்டப் பேரவைக்கு வருகை புரிந்து, பேசுவதற்கு அனுமதி கேட்டு ஆளுநர் உரை மீது ஒரு சில கருத்துகளை எடுத்துரைத்தார்கள். அப்பொழுது ஆளுநர் உரையில் உண்மைக்கு மாறாக தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கான விளக்கங்களை எடுத்துரைத்தார்கள். அப்போது, முதலமைச்சர் திரு.கருணாநிதியும், தி.மு.க அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து குறுக்கீடுகள் செய்த காரணத்தால் ஒரு சில கருத்துகளை மட்டுமே புரட்சித் தலைவி அம்மா அவர்களால் எடுத்து வைக்க முடிந்தது. ஒரு கருத்தை சொல்லி முடிக்கும் முன்பாகவே, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று கூட கேட்காமலேயே தி.மு.க அமைச்சர்கள் குறுக்கிட்டு, குறுக்கிட்டு பேசினார்கள். விவசாயிகளின் கடன் தள்ளுபடி பற்றி, தேசிய வங்கிகளில், இதர வணிக வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கும் கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கோரிக்கை வைத்த போது, அப்போதைய நிதியமைச்சர்.க.அன்பழகன், ‘விவசாயிகள் மாமன், மச்சான்களிடத்திலே வாங்கிய கடன்கள் எல்லாம் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்படவில்லை’ என்று சம்பந்தமே இல்லாமல் கண்ணியக் குறைவாக பேசினார். மேலும், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அஇஅதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத் தொடர் முடியும் வரை நீக்கப்பட்ட நிலையில், ஆளுநர் உரையின் மீதான விவாதத்தின் இறுதி நாளான 30.5.2006 அன்று பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படுமா என்று கேட்ட போது, ‘அது பற்றி பின்னிட்டுத் தான் யோசிக்கப்படும்’ என்று பேரவைத் தலைவர் தெரிவித்து விட்டார். புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணித்தரமான வாதங்களை நேருக்கு நேர் எதிர் கொள்ள இயலாத.கருணாநிதி அவரது அலுவலகத்தில் இருந்த கோப்புகளையெல்லாம் சட்டமன்றத்திற்கு கொண்டு வரச் செய்து அவற்றை அவரது மேஜையின் மீது குவித்து வைத்து, தன் முகத்தையே மறைத்து கொண்டதையெல்லாம் நாடு நன்கு அறியும்.

    அஇஅதிமுகவின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதற்காகவும், மக்கள் பிரச்சனைகள் பற்றி ஆக்கபூர்வமான விவாதங்களில் பங்கு பெற வேண்டும் என்பதற்காகவும், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அஇஅதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராகவும் பொறுப்பேற்க இசைந்தார்கள். அதற்கான தீர்மானம் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டு, 29.5.2006 அன்று மதியமே அனுப்பப்பட்டும், இரவு 12 மணிக்கு தான் எதிர்கட்சி தலைவர் என புரட்சித் தலைவி அம்மா அவர்களை அங்கீகரித்து சட்டப்பேரவைத் தலைவர் ஆணையிட்டார். ஆனால், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பேசுவதற்கான அனுமதியை வழங்காமல், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரின் உரை இல்லாமலேயே, 2006 ஆம் ஆண்டு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் முடிவு பெற்று முதலமைச்சர் திரு.கருணாநிதி பதில் அளித்திருக்கிறார். இவ்வாறு ஒரு மோசமான புதிய வரலாற்றை படைத்த திரு.கருணாநிதி, தி.மு.க கடைபிடித்த கண்ணியத்தை பற்றி பேசுவது வேதனையான ஒன்று.

    2006 ஆம் ஆண்டு நடைபெற்ற திருத்திய வரவு செலவுத் திட்ட அறிக்கையின் பொது விவாதத்தின் போது, எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தமிழக மக்களுக்கு மைனாரிட்டி தி.மு.க அரசு இழைக்கும் நம்பிக்கை துரோகங்களை நிதி நிலை அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது என்று தெரிவித்து, அது குறித்து விரிவாக பேசும் போது, 65 முறை திமுக அமைச்சர்கள் குறுக்கீடு செய்து, பேசவே விடாத அளவு இடையூறு ஏற்படுத்தினார்கள். அப்போது அமைச்சராக இருந்த.எ.வ.வேலு எப்படி பேசுவது என எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு அறிவுரை வழங்கிய போது, ‘ஒரு பெண் அரசு அதிகாரியின் அழகை வர்ணித்து பேசிய இந்த அமைச்சர் வேலுவின் யனஎiஉந-ஐ கேட்டு அவரிடம் பேசக் கற்றுக் கொண்டால் இந்த நாடு தாங்காது’ என்று புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தெரிவித்தார்கள். தி.மு.க.வின் அவை முன்னவர்.க.அன்பழகன் அதற்கும் குறுக்கிட்டு, ‘அரிசியினுடைய நிறம் சிகப்பு, கருப்பு’ என்பதற்கு, ‘அவரைப் போல சிகப்பு; என்னைப் போல கருப்பு என்று சொன்னார். அது ஒரு பெண்ணினுடைய அழகை வர்ணிப்பதா? சிகப்பெல்லாம் அழகா? … அது எந்தப் பெண் அதிகாரியையும் வர்ணிப்பதும் அல்ல; வர்ணிக்கிற வயதிலேயும் அவர் இல்லை.’ என்று சொல்லியிருக்கிறார். இது எவ்வளவு கண்ணியமான பேச்சு என்பதை தமிழக மக்களே முடிவு செய்து கொள்ளட்டும்.

    2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற ஆளுநர் உரையின் மீதான விவாதத்தின் போது, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஒரு பொருள் குறித்து ‘கற்றறிந்த, திறமையான வழக்கறிஞர்கள், சட்ட நிபுணர்கள் குழுவிலே ஆராயப்படும்’ என்று அன்றைய முதலமைச்சர் திரு.கருணாநிதி தெரிவித்ததற்கு மாறாக அமைச்சர்களுடனும், அ
    Nov 26,2014 11:25 pm
    Jayalalithaa
    Nov 25,2014 06:54 pm
    Jayalalithaa
    Statement of the Chief Minister Mr. O. Panneerselvam on Neonatal deaths in Dharm...
    Statement of the Chief Minister Mr. O. Panneerselvam on Neonatal deaths in Dharmapuri District Hospital and Monitoring Strategy - 18.11.2014
    ***********************************************************************************

    "தருமபுரி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பச்சிளங்குழந்தை தீவிரசிகிச்சைப் பிரிவில், (Neonatal Intensive Care Unit) தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பச்சிளம் குழந்தைகளில் 11 பச்சிளம் குழந்தைகள் 14.11.2014 முதல் இன்று வரை இறந்துள்ளனர் என்பதை அறிந்து, இது குறித்த ஒரு ஆய்வுக் கூட்டம் இன்று (18.11.2014) நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், கே. ராமானுஜம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறைச் செயலாளர் பெ.மு. பஷீர் அஹமது, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சிறப்புச் செயலாளர் முனைவர் ப. செந்தில் குமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் இயக்குநர் என். மதிவாணன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    தர்மபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் இறப்புகள் அனைத்தும் பல்வேறு இயற்கையான காரணங்களால் தான் நிகழ்ந்துள்ளது என்பதும், இதில் சிகிச்சை குறைபாடு எதுவும் இல்லை என்பதும் எடுத்துரைக்கப்பட்டது.

    பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் உயிருடனும், நல்ல வளச்சியுடனும் பிறப்பதை உறுதி செய்யும் பொருட்டு, தமிழகத்தில் பல்வேறு முன்னோடி திட்டங்களை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் செயல்படுத்தியுள்ள காரணத்தால் இந்தியாவிலேயே குறைந்த குழந்தை இறப்பு விகிதத்தில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடம் என்ற உயர் நிலையை எட்டியுள்ளது. அகில இந்திய அளவில் 1000 உயிருடன் பிறக்கும் குழந்தைகளில் 40 குழந்தைகள் இறப்பு என்று உள்ள நிலையில் தமிழ்நாட்டில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு 21 தான். தருமபுரி மாவட்டத்தைப் பொறுத்தவரை இந்த பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் 19 தான். தருமபுரி மாவட்டத்தில் 77 விழுக்காடு பிரசவங்கள் அரசு மருத்துவ நிலையங்களிலேயே நடைபெறுகின்றன.

    மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தொலைநோக்கு திட்டங்களின் காரணமாகத் தான் தமிழ்நாட்டில் சிசு மரண விகிதம் மிக குறைவாக உள்ளது. தாய் மற்றும் சேய் நலன் காக்கும் வகையில் 12000 ரூபாய் வழங்கப்பெறும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டம், ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் நிலைப்படுத்தும் பிரிவுகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகள், பிரசவ உடனாளர் திட்டம், தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து அளிப்பது போன்ற பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சிசு மரண விகிதத்தை மேலும் குறைக்கும் பொருட்டு தற்போது 64 பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை மையங்களும், 114 பச்சிளங்குழந்தைகள் நிலைப்படுத்தும் பிரிவுகளும் மாநிலம் முழுவதிலும் செயல்பட்டு வருகின்றன.

    தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 14ஆம் தேதியன்று
    5 பச்சிளங்குழந்தைகள் இறந்தன என்று தெரிந்தவுடன், சென்னையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையிலிருந்து பச்சிளங்குழந்தைகள் தீவிர கண்காணிப்புப் பிரிவு ஒருங்கிணைப்பு அலுவலர், டாக்டர் சீனிவாசன் உடனடியாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது ஆய்விலிருந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எந்தவொரு மருத்துவ ரீதியான குறைபாடுகளும் காணப்படவில்லை. தற்போதும் 73 பச்சிளங்குழந்தைகள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி தலைமையில் பச்சிளங்குழந்தை நிபுணர்கள் டாக்டர் நாராயண பாபு, டாக்டர் சீனிவாசன் மற்றும் டாக்டர் குமுதா ஆகியோர் தர்மபுரி மருத்துவமனையில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    இறந்த 11 பச்சிளம் குழந்தைகளில் 7 குழந்தைகள் இரண்டரை கிலோ எடைக்கு குறைவாக இருந்தன. அதில் 5 பச்சிளம் குழந்தைகள் 1.2 முதல் 1.75 கிலோ எடை மட்டுமே இருந்தன. இந்த குழந்தைகள் குறைப் பிரசவத்தில் பெற்றெடுக்கப்பட்டுள்ளனர். சராசரியாக 37 வார கர்ப்ப காலத்திற்குப் பதிலாக 28 லிருந்து 34 வாரத்தில் குறைப்பிரசவம் நடைபெற்றுள்ளது. இறந்த 11 பச்சிளம் குழந்தைகளில், 8 குழந்தைகள் இதர மருத்துவமனைகளில் இருந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். கடந்த நான்கு நாட்களில் 11 குழந்தைகளின் இறப்புக்குக் காரணம், மிக இளம் வயது தாய்மார்கள், முந்தைய பிரசவத்திற்கும் தற்போதைய பிரசவத்திற்கும் மிகக் குறைந்த இடைவெளி இருந்தது, குறைப் பிரசவம், பிறந்த குழந்தை மிகக் குறைவான எடை கொண்டிருந்தது ஆகியவையே ஆகும்.

    தர்மபுரி மாவட்டத்தில் சிசு மரண விகிதம் 19 என உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் சராசரியாக மாதமொன்றுக்கு 2050 உயிருள்ள குழந்தைகள் பிறக்கின்றன; 39 சிசு மரணங்கள் ஏற்படுகின்றன. அந்த விகிதாச்சார அடிப்படையிலேயே நடப்பு மாதமும் சிசு இறப்பு ஏற்பட்டிருந்தாலும், நான்கு நாட்களில் சிறிதளவு அதிக இறப்பு ஏற்பட்டுள்ளதால் தொடர் கண்காணிப்புக்காக கீழ்க்காணும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:-

    • மருத்துவக் கல்லூரி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி தலைமையில் மருத்துவ நிபுணர் குழு அனுப்பப்பட்டு தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    • தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அனைத்து பச்சிளங்குழந்தைகளுக்கும் தொடர் கண்காணிப்பு மற்றும் சிறப்பு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

    • தருமபுரி மாவட்டத்தில் பிரசவம் நடைபெறும் 36 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் சிக்கலான பிரசவங்களை உரிய நேரத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • கர்ப்பகால பராமரிப்பை கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் கூட்டு முயற்சியுடன் மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    • இணை இயக்குநர் சுகாதாரம், துணை இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மூலம் எடை குறைவான தாய்மார்களை தீவிரமாக கண்காணித்து மேல் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது."
    Nov 18,2014 07:12 pm
    Jayalalithaa
    Text of the D.O. Letter dated 8.11.2014 addressed by Thiru O. Panneerselvam, Chi...
    Text of the D.O. Letter dated 8.11.2014 addressed by Thiru O. Panneerselvam, Chief Minister of Tamil Nadu to Shri Narendra Modi, Prime Minister of India on the move of Kerala government to construct a dam across Pambar river- 8.11.2014
    *******************************************************************************

    “I would like to draw your kind attention to disconcerting reports appearing in the media about the Government of Kerala’s Plan to construct a Dam with a storage capacity of about 2 TMC ft. of water across the river Pambar at Pattisserry in Kerala at an estimated cost of Rs.26 crores.

    I would also like to point out that the river Pambar, is a tributary of the river Amaravathy, which in turn is a tributary of the river Cauvery. It has also been reported that the Chief Minister of Kerala had laid the foundation stone for this project recently and preliminary works have been taken up. This has caused anxiety, deep anguish and uncertainty amongst the farmers of Tamil Nadu. It is apprehended that the irrigation and drinking water supply in the entire area dependent on the Amaravathy river, will be totally affected, if the Government of Kerala is allowed to build the Dam and obstruct the flow of water to Amaravathy Reservoir.

    The proposed plan of the Government of Kerala in taking up new projects in the Pambar sub-basin is in violation of the Final Order of the Cauvery Water Disputes Tribunal dated 5.2.2007. Any new project should have the approval of the Cauvery Management Board and the specific consent of the downstream State of Tamil Nadu.

    My Leader Puratchi Thalaivi Amma has repeatedly been urging the
    Government of India to constitute the Cauvery Management Board and the Cauvery Water Regulation Committee for the effective
    implementation of the Final Order of the Cauvery Water Disputes Tribunal dated 5.2.2007. This request of my Leader has not been
    favourably considered till now. In the absence of an appropriate mechanism viz., the Cauvery Management Board, it will not be
    possible to monitor the execution of new projects by the party States.

    A visit by the Engineers of Public Works Department to the site on 7.11.2014 has indicated that though work has not yet started, it was ascertained that Government of Kerala may start the work very soon in view of the reports regarding laying of the foundation stone.

    May I, therefore, request you to advise the Government of Kerala not to proceed with the proposed construction of the Dam across the river Pambar at Pattisserry or any other scheme on the river Pambar? I also request you to advise the Government of Kerala to furnish full details of the schemes proposed by the Government of Kerala in the Pambar sub-basin and further request Kerala not to proceed with any
    of the projects, in any manner, till the Cauvery Management Board is constituted and the consent of the Government of Tamil Nadu obtained.

    I request your immediate intervention in this matter to protect the interests of Tamil Nadu and also to constitute the Cauvery Management Board and the Cauvery Water Regulation Committee for the effective implementation of the Final Order of the Cauvery Water Disputes Tribunal.”
    Nov 08,2014 03:08 pm
    Jayalalithaa
    மூத்த வழக்கறிஞர் பி. குமாரின் துணைவியார் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் புரட்ச...
    மூத்த வழக்கறிஞர் பி. குமாரின் துணைவியார் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா அவர்கள் அனுப்பியுள்ள இரங்கல் கடிதம் - 6.11.2014
    -------------------------------------------------------------------------------------------------------------

    "திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தங்களது துணைவியார் டாக்டர் சாந்திகுமார் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். இது போன்ற சூழ்நிலையில் எப்படிப்பட்ட வார்த்தைகளை சொல்லி ஆறுதல் கூறினாலும் அது உண்மையில் போதுமானதாக இருக்காது என்றாலும் எனது ஆழ்ந்த இரங்கலை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தை சேர்ந்த அனைவருக்கும் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். இது தனிப்பட்ட முறையில் உங்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு. அதை தாங்கி கொள்ளும் வலிமையை இறைவன் உங்களுக்கு தர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். அன்னாரது ஆத்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் வேண்டுகிறேன்."
    Nov 06,2014 09:11 pm
    Jayalalithaa
    அ.தி..மு.க. தலைமை கழக அறிக்கை - 4.11.2014 **************************************...
    அ.தி..மு.க. தலைமை கழக அறிக்கை - 4.11.2014
    ****************************************************

    அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான செல்வி ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட துயரத்தைத் தாங்கிக் கொள்ள இயலாமல் அகால மரணமடைந்த 219 பேரில், 100 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வீதம், 3 கோடி ரூபாய் குடும்ப நல நிதியுதவியாக வழங்கப்பட்ட நிலையில், 4வது நாளான இன்று மேலும், 32 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வீதம் 96 லட்சம் ரூபாய், மக்களின் முதல்வர் ஆணைப்படி நேரில் வழங்கப்பட்டது. இதன்மூலம் இதுவரை 132 பேரின் குடும்பங்களுக்கு 3 கோடியே 96 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக்கு ஏற்பட்ட துயரத்தைத் தாங்கிக் கொள்ள இயலாமல் தீக்குளித்தும், தூக்கிட்டும், விஷம் அருந்தியும், பேருந்து முன்பு பாய்ந்தும், ரயில் முன் பாய்ந்தும், ஆற்றில்; நீர் வீழ்ச்சியில் குதித்தும், மின் கம்பியைப் பிடித்தும், வீட்டு மாடியில் இருந்து கீழே குதித்தும், அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டும் தாய்மார்கள்; பொதுமக்கள்; கழக உடன்பிறப்புகள்; மாணவச் செல்வங்கள் என மொத்தம் 219 பேர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர் என்ற செய்தியையும், தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் செயலில் ஈடுபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் உள்ளிட்ட தகவல்களையும் அறிந்த, கழகப் பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான புரட்சித் தலைவி அம்மா ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தார். மேலும், அகால மரணமடைந்த 219 பேரின் குடும்பங்களுக்கு, குடும்ப நல நிதியுதவியாக தலா 3 லட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரின் மருத்துவ சிகிச்சைக்கு தலா 50,000 ரூபாயும், ஆக மொத்தம் 6 கோடியே 58 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், அ.இ.அ.தி.மு.க. சார்பில் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

    தமிழ்நாட்டு மக்கள் மீதும், கழகத் தொண்டர்கள் மீதும் மிகுந்த பேரன்பு கொண்டுள்ள கழகப் பொதுச் செயலாளர் `மக்கள் முதல்வர்’ புரட்சித் தலைவி அம்மா, தமக்காக அகால மரணமடைந்தவர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு தமது சார்பில் ஆறுதல் தெரிவித்து, குடும்ப நல நிதியுதவியை வழங்க வேண்டும் என்று கழக நிர்வாகிகளுக்கு ஆணையிட்டிருந்தார். அதன்படி, சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், வாரியத் தலைவர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர், அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் `மக்கள் முதல்வர்’ புரட்சித் தலைவி அம்மா சார்பாக, நேற்று வரை மூன்று கட்டங்களாக 100 குடும்பங்களுக்கு குடும்பநல நிதியுதவியாக தலா 3 லட்சம் ரூபாய் வீதம் 3 கோடி ரூபாய்க்கான வரைவோலைகளை சம்பந்தப்பட்டவர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று வழங்கி ஆறுதல் கூறினார்கள்.

    இதனைத்தொடர்ந்து, 4-வது நாளான இன்று 32 குடும்பங்களுக்கு, குடும்பநல நிதியுதவியாக தலா 3 லட்சம் ரூபாய் வீதம் 96 லட்சம் ரூபாய்க்கான வரைவோலைகள் நேரில் வழங்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஒன்றியம், காச்சக்காரன்பட்டியைச் சேர்ந்த மறைந்த திரு. K. மாரியப்பனின் மனைவி திருமதி லட்சுமியை, கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினரும், திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சருமான திரு. நத்தம் இரா. விசுவநாதன், கழக மாணவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் சோலை இரா. கண்ணன், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. M. உதயகுமார், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திரு. V. மருதராஜ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து குடும்ப நல நிதியுதவியை வழங்கி ஆறுதல் கூறினர்.

    தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், பட்டுக்கோட்டை நகரம், லெட்சத்தோப்புவைச் சேர்ந்த மறைந்த திருமதி. ஜெ. அமிர்தத்தின் மகள், திருமதி. ஜெ. செல்வியை, கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான திரு. ஆர். வைத்திலிங்கம், கழக விவசாயப் பிரிவுச் செயலாளரும் தமிழ் நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய தலைவருமான திரு. கு. தங்கமுத்து, தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. எம். ரெங்கசாமி, எம்.எல்.ஏ., தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. கு. பரசுராமன், மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. R.K. பாரதிமோகன், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் திருமதி சாவித்திரிகோபால் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து, மக்களின் முதல்வர் சார்பில், குடும்ப நல நிதியுதவியை வழங்கி ஆறுதல் கூறினர்.

    சேலம் புறநகர் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியம், அ. புதூரைச் சேர்ந்த மறைந்த திரு. எஸ். ரவியின் மனைவி, திருமதி. ஆர். ராஜாத்தியை, கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினரும், சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சருமான திரு. எடப்பாடி K. பழனிசாமி, கழக அமைப்புச் செயலாளர் திரு. செ. செம்மலை, கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் திரு. K.A.K. முகில், சேலம் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. M.K. செல்வராஜூ எம்.எல்.ஏ., சேலம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. V. பன்னீர்செல்வம், கழக மக்களவை குழு செயலாளர் டாக்டர் க. காமராஜ் எம்.பி., சேலம் மாநகராட்சி மேயர் திரு. எஸ். சவுண்டப்பன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து, குடும்ப நல நிதியுதவியை வழங்கி ஆறுதல் கூறினர்.

    விழுப்புரம் வடக்கு மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், குயிலாப்பாளையத்தைச் சேர்ந்த மறைந்த திரு. எம். சக்கரவர்த்தியின் மனைவி, திருமதி ச. பத்மாவதி மற்றும் விழுப்புரம் வடக்கு மாவட்டம், கோலியனூர் ஒன்றியம், பிடாகம் கிராமத்தைச் சேர்ந்த மறைந்த திருமதி என். கிருஷ்ணவேணியின் மகள், செல்வி என். சந்திரலேகா ஆகியோரை விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், ஊரகத் தொழில் மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சருமான திரு. ப. மோகன், கழக வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் திரு. V.S. சேதுராமன். தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத் தலைவர் திருமதி சரஸ்வதி ரெங்கசாமி, விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் டாக்டர் R. லட்சுமணன், M.P., கழக மக்களவை குழு செயலாளர் டாக்டர் க. காமராஜ் எம்.பி., ஆரணி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. செஞ்சி வெ. ஏழுமலை, விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. S. ராஜேந்திரன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து குடும்ப நல நிதியுதவியை வழங்கி ஆறுதல் கூறினர்.

    தென் சென்னை தெற்கு மாவட்டம், சைதாப்பேட்டை பகுதி, வாழைத்தோப்புவைச் சேர்ந்த மறைந்த திரு. பழம் ஆர். நடராஜனின் மனைவி, திருமதி என். சாந்தியை, கழக இலக்கிய அணிச் செயலாளரும், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சருமான திருமதி பா. வளர்மதி, கழக அமைப்புச் செயலாளரும், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவருமான டாக்டர் திருமதி விசாலாட்சி நெடுஞ்செழியன், கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளரும், கழக மாநிலங்களவை குழுத் தலைவருமான திரு. A. நவநீதகிருஷ்ணன், கழக மாணவர் அணிச் செயலாளர் திரு. S.R. விஜயகுமார் M.P., தென்சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. V.P. கலைராஜன் எம்.எல்.ஏ., தென்சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், தமிழ்நாடு பஞ்சாலைக் கழகத் தலைவருமான திரு. விருகை V.N. ரவி, சென்னை மாநகராட்சி மேயர் திரு. சைதை சா. துரைசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. A. வில்லியம் ரபி பெர்னார்ட், சென்னை தெற்கு நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் டாக்டர் ஜெ. ஜெயவர்தன் ஆகியோர் நேரில் சந்தித்து, குடும்ப நல நிதியுதவியை வழங்கி ஆறுதல் கூறினர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி ஒன்றியம், சோக்காடி மேல்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த மறைந்த திரு. பி. முருகனின் மனைவி, திருமதி எம். மஞ்சுளாவை கழக தலைமை நிலையச் செயலாளரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான திரு. P. பழனியப்பன், கழக அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் திரு. ஆர். கமலகண்ணன், கழக மகளிர் அணி துணைச் செயலாளர் திருமதி டி. சகுந்தலா, கிருஷ்ணகிரி மாவட்டக் கழகச் செயலாளர் திரு. V. கோவிந்தராஜ், தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளர் திரு. பூக்கடை M. முனுசாமி, கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. K. அசோக்குமார் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து குடும்ப நல நிதியுதவியை வழங்கி ஆறுதல் கூறினர்.

    மதுரை புறநகர் மாவட்டம், திருமங்கலம் ஒன்றியம், ஆலம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த மறைந்த திரு. பி. செல்வத்தின் மனைவி, திருமதி எஸ். சீதாபேபியை, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் திரு. எம்.எஸ். பாண்டியன், கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு பொருளாளர் திரு. ஜான் மகேந்திரன், மதுரை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. ம. முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., மதுரை மாநகராட்சி மேயர் திரு. V.V. ராஜன் செல்லப்பா, மதுரை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. இரா. கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து குடும்ப நல நிதியுதவியை வழங்கி ஆறுதல் கூறினர்.

    திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியம், பள்ளிவாரமங்கலத்தைச் சேர்ந்த மறைந்த திரு. அ. செல்வத்தின் மனைவி, திருமதி எஸ். ராணியை, திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், உணவுத் துறை அமைச்சருமான திரு. ஆர். காமராஜ், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் திரு. அஸ்பயர் K. சுவாமிநாதன், கழக மகளிர் அணி துணைச் செயலாளரும், தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவருமான செல்வி சி.ஆர். சரஸ்வதி, நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் டாக்டர் K. கோபால், உள்ளிட்டோர் நேரில் சந்தித்து குடும்ப நல நிதியுதவியை வழங்கி ஆறுதல் கூறினர்.

    நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பேரூராட்சி, மஞ்சஉடையார் தெருவைச் சேர்ந்த மறைந்த திரு. சம்ரூத் பாட்ஷாவின் மனைவி, திருமதி எஸ். தில்சாத்தை, நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், தொழில் துறை அமைச்சருமான திரு. P. தங்கமணி, கழக மகளிர் அணி இணைச் செயலாளர் டாக்டர் வெ. சரோஜா, அண்ணா தொழிற்சங்கப் பேரவை இணைச் செயலாளர் திரு. R. சிவஞானம், நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. P.R. சுந்தரம் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து மக்களின் முதல்வர் சார்பில் குடும்ப நல நிதியுதவியை வழங்கி ஆறுதல் கூறினர்.

    கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி, தவளபாளையம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த மறைந்த திரு. ஜீவா என்ற எஸ். பாக்கியராஜின் மனைவி, திருமதி பி. ரேகாவை, கழக கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான டாக்டர் மு. தம்பிதுரை, கரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான திரு. V. செந்தில்பாலாஜி, கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைத் தலைவர் திரு. சிந்தை A.M.D. இஸ்மாயில் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து குடும்ப நல நிதியுதவியை வழங்கி ஆறுதல் கூறினர்.

    கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் நகரம், தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த மறைந்த திரு. ஜெ. விஸ்வகேதுவின் மனைவி, திருமதி ஜெ. கலா என்ற பிரபாவதியை கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சருமான திரு. எம்.சி. சம்பத், கழக மீனவர் பிரிவுச் செயலாளர் திரு. K.K. கலைமணி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் திரு. சொரத்தூர் இரா. ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கழக இலக்கிய அணி துணைச் செயலாளர் திரு. நத்தம் ஜி. கோபு என்கிற ரகுராமன், கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. A. அருண்மொழிதேவன் எம்.பி., உள்ளிட்டோர் நேரில் சந்தித்து குடும்ப நல நிதியுதவியை வழங்கி ஆறுதல் கூறினர்.

    கோவை புறநகர் மாவட்டம், குனியமுத்தூர் நகரத்தைச் சேர்ந்த மறைந்த திரு. அ. பாப்புவின் மனைவி, திருமதி பா. கந்தம்மாளை கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சருமான திரு. S.P. வேலுமணி, அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் திரு. ஆர். சின்னசாமி எம்.எல்.ஏ., கழக அமைப்புச் செயலாளரும், கழக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினருமான திரு. A.K. செல்வராஜ் M.P., கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் திரு. சி.எம். விஷ்ணுபிரபு, கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், மாநகராட்சி மேயருமான திரு. கணபதி ப. ராஜ்குமார், கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. A.P. நாகராஜன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து குடும்ப நல நிதியுதவியை வழங்கி ஆறுதல் கூறினர்.

    காஞ்சிபுரம் மத்திய மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம், உய்யாலிகுப்பத்தைச் சேர்ந்த மறைந்த திருமதி ஊ. தேசப்பட்டுவின் மகள், செல்வி C. மீனா மற்றும், காஞ்சிபுரம் மத்திய மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம், குழிப்பாந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த மறைந்த திரு. K. ஆறுமுகத்தின் மனைவி, திருமதி கே. ரூபாவதி ஆகியோரை காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான திரு. T.K.M. சின்னையா, காஞ்சிபுரம் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் திரு. C.V.N. குமாரசாமி, காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. வாலாஜாபாத் பா. கணேசன் எம்.எல்.ஏ., கழக மக்களவை குழு கொறடா திரு. K.N. ராமச்சந்திரன், காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் திருமதி. மரகதம் குமரவேல் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து குடும்ப நல நிதியுதவியை வழங்கி ஆறுதல் கூறினர்.

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, மெலசெம்பொன்மாரியைச் சேர்ந்த மறைந்த திரு. கே.ஆர். கருப்பையாவின் மனைவி, திருமதி K.R. புஷ்பவள்ளியை கழக அமைப்புச் செயலாளரும், கழக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினரும், கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சருமான திருமதி எஸ். கோகுல இந்திரா, அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைச் செயலாளர் திரு. K. பாண்டுரங்கன், கழக மீனவர் பிரிவு இணைச் செயலாளர் திரு. வெண்பாவூர் தேவராஜன், கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைத் தலைவர் திரு. பூலாங்கால் H. சித்திக், சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர் திரு. P.R. செந்தில்நாதன் M.P., உள்ளிட்டோர் நேரில் சந்தித்து, குடும்ப நல நிதியுதவியை வழங்கி ஆறுதல் கூறினர்.

    ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் நகரம், வெளிப்பட்டினத்தைச் சேர்ந்த மறைந்த திரு. மு. நாகேஷ்வரனின் மனைவி. திருமதி என். தீபா ரமணியை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் டாக்டர். எஸ். சுந்தரராஜ், கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் திரு. அ. அன்வர்ராஜா எம்.பி., கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் திரு. சதன்பிரபாகர், கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர் திரு. ஆலந்தூர் எம்.எம். பஹீம், ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. R. தர்மர் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து குடும்ப நல நிதியுதவியை வழங்கி ஆறுதல் கூறினர்.

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், காட்டாத்தியைச் சேர்ந்த மறைந்த திரு. பெ. பழனியப்பனின் மனைவி, திருமதி பி. லெட்சுமியை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குட
    Nov 04,2014 08:55 pm
    Jayalalithaa
    அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்கள் அறிக்கை - 3.11.2014 ********************...
    அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்கள் அறிக்கை - 3.11.2014
    *****************************************************************************

    "திருச்சி புறநகர் மாவட்ட இலக்கிய அணி செயலாளரும், அதிமுக தலைமை கழக பேச்சாளருமான இடிமின்னல் எல். கோவிந்தராஜ் உடல்நலக் குறைவால் மரணமடைந்து விட்டார் என்று செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தமுற்றேன். அதிமுக கழகத்தின் மீதும், தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்ப கால கழக உடன்பிறப்பு கோவிந்தராஜ் தலைமை கழக பேச்சாளராக கழகத்தின் கொள்கைகளையும், கழக அரசின் சாதனைகளையும், எதிர்க்கட்சியினரின் பொய் பிரச்சாரங்களையும் நாட்டு மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைத்தவர். அன்பு சகோதரர் இடிமின்னல் கோவிந்தராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்."
    Nov 03,2014 11:19 pm
    Jayalalithaa
    அ தி.மு.க. தலைமைக்கழகம் செய்தி குறிப்பு - 3.11.2014 ****************************...
    அ தி.மு.க. தலைமைக்கழகம் செய்தி குறிப்பு - 3.11.2014
    ************************************************************

    அ தி.மு.க.வின் தலைமைக்கு ஏற்பட்ட துயரத்தைத் தாங்கிக் கொள்ள இயலாமல் தீக்குளித்தும், தூக்கிட்டும், விஷம் அருந்தியும், பேருந்து முன்பு பாய்ந்தும், ரயில் முன் பாய்ந்தும், ஆற்றில்; நீர் வீழ்ச்சியில் குதித்தும், மின் கம்பியைப் பிடித்தும், வீட்டு மாடியில் இருந்து கீழே குதித்தும், அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டும் தாய்மார்கள்; பொதுமக்கள்; கழக உடன்பிறப்புகள்; மாணவச் செல்வங்கள் என மொத்தம் 219 பேர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர் என்ற செய்தியையும், தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் செயலில் ஈடுபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் உள்ளிட்ட தகவல்களையும் அறிந்த, அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் மக்கள் முதல்வர் ஜெயலலிதா ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்ததோடு, அ தி.மு.க.வின் சார்பில் அகால மரணமடைந்த 219 பேர்களின் குடும்பங்களுக்கு குடும்ப நல நிதியுதவியாக தலா 3 லட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர்களின் மருத்துவ சிகிச்சைக்கு தலா 50,000 ரூபாயும், ஆக மொத்தம் 6 கோடியே 58 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

    அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் மக்கள் முதல்வர் ஜெயலலிதா, தனக்காக அகால மரணமடைந்தவர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு தனது சார்பில் ஆறுதல் தெரிவித்து, குடும்ப நல நிதியுதவியை வழங்குமாறு அ தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஆணையிட்டிருந்தார்.

    அதன்படி, சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், வாரியத் தலைவர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர், அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் மக்கள் முதல்வர் ஜெயலலிதா சார்பாக, 3ந்தேதி திங்கட் கிழமை 32 குடும்பங்களுக்கு குடும்ப நல நிதியுதவியாக தலா 3 லட்சம் ரூபாய் வீதம் 96 லட்சம் ரூபாய்க்கான வரைவோலைகளை சம்பந்தப்பட்டவர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று வழங்கி ஆறுதல் கூறினார்கள்.

    அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் மக்கள் முதல்வர் ஜெயலலிதா சார்பாக கழக நிர்வாகிகள், அகால மரணமடைந்தவர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று, 1–ந்தேதி அன்று 34 பேருக்கு ரூ. 1 கோடியே 2 லட்சம் நிதி உதவியும், 2–ந்தேதி அன்று 34 பேருக்கு ரூ. 1 கோடியே 2 லட்சம் நிதி உதவியும், 3–ந்தேதி 32 பேருக்கு ரூ.96 லட்சம் நிதி உதவியும் வழங்கினார்கள்.

    இதுவரை 100 பேர்களுக்கு 3 கோடி ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கி உள்ளனர். தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்து வாடும் தங்களின் இக்கட்டான சூழ்நிலையை அறிந்து, கழக நிர்வாகிகளை தங்களுடைய இல்லங்களுக்கே அனுப்பி வைத்து குடும்ப நல நிதியுதவியை வழங்கியுள்ள அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர், தமிழக மக்களின் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும் காவல் தெய்வம், மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் கருணை உள்ளத்தை எண்ணி, நிதியுதவியினை பெற்றுக் கொண்டவர்கள் நெஞ்சம் நெகிழ தங்களது குடும்பங்களின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

    அ தி.மு.க.வின் தலைமைக்கு ஏற்பட்ட துயரத்தைத் தாங்கிக் கொள்ள இயலாமல் அகால மரணமடைந்தவர்களின் இல்லங்களுக்கே மாவட்ட வாரியாக அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகளை அனுப்பி வைத்து நிதியுதவிகளை வழங்கச் செய்த ஜெயலலிதாவின் தாயுள்ளத்தைக் கண்டு பொதுமக்கள் அனைவரும் வியந்து பாராட்டினார்கள்.
    Nov 03,2014 11:16 pm
    Jayalalithaa
    Statement of Chief Minister Mr. O. Panneer Selvam on Granites - 2.11.2014 ******...
    Statement of Chief Minister Mr. O. Panneer Selvam on Granites - 2.11.2014
    **************************************************************************************

    " ‘‘சகாயம் ஐ.ஏ.எஸ். விசாரணையில் தாமதம்!" என்று தலைப்பிட்டு, உடனடியாக சகாயம், ஐ.ஏ.எஸ். விசாரணைக் குழுவினை செயல்படுத்துவதற்கான ஆணைகளைப் பிறப்பிப்பதோடு, எதிர்காலத்தில் இப்படிப்பட்ட காழ்ப்புணர்வுகளைக் கைவிட்டு மனிதநேயத்தோடு நடந்து கொள்ள வேண்டும்" என கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருப்பது, ‘‘தான் திருடி, பிறரை நம்பான்" என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. கூட்ட நெரிசலில் பிக்பாக்கெட் அடிக்கும் பேர்வழி ‘திருடன், திருடன்’ என்று கத்திக் கொண்டு கூட்டத்தில் ஓடி மறைவதைப் போல" இந்த அறிக்கை அமைந்துள்ளது.

    கிரானைட் முறைகேடு யாருடைய ஆட்சிக் காலத்தில் நடந்தது? இந்த முறைகேட்டில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது? இந்த முறைகேட்டின் மூலம் பலனடைந்தவர்கள் யார்? இந்த முறைகேடு குறித்து முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பதை எல்லாம் முற்றிலும் மறைத்து, ஒன்றுமே தெரியாதது போல் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு இருப்பது ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும், பேனும்" என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது.

    இந்தத் தருணத்தில், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில், கருணாநிதி இந்த கிரானைட் முறைகேட்டை எவ்வாறு மூடி மறைத்தார் என்பது குறித்தும், அம்மா கிரானைட் முறைகேட்டினை வெட்ட வெளிச்சமாக்கவும், தவறு செய்தவர்கள் மீது என்னென்ன நடவடிக்கைகளை எடுத்தார் என்பது குறித்தும் எடுத்துக் கூற விரும்புகிறேன்.

    கர்நாடக மாநிலத்தை மிஞ்சும் வகையில் மதுரை அருகே மூன்று கிராமங்களில் மட்டும் 7000 கோடி ரூபாய்க்கு மேல் சுரங்க ஊழல்" என்ற தலைப்பு உள்பட பல்வேறு தலைப்புகளில் 2010ம் ஆண்டு ஜூலை மாத இறுதியில் ஒரு காலை நாளிதழில் செய்திகள் வெளி வர ஆரம்பித்தவுடன் இந்த ஊழல் முறைகேட்டை தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க முன் வந்தாரா கருணாநிதி என்றால் நிச்சயம் இல்லை. மாறாக, அந்தச் செய்தியை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர், அவரது மகன் மற்றும் அவரது நண்பர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைத்தார் கருணாநிதி. கருணாநிதியின் அராஜகச் செயலைக் கண்டித்து அம்மா கண்டன அறிக்கை வெளியிட்டதுடன், பத்திரிகையாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து, அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இருந்தாலும், கிரானைட் முறைகேட்டினை வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுக்காமல், அதை மூடிமறைக்கும் வகையிலான நடவடிக்கைகள் தான் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசால் எடுக்கப்பட்டது.

    தமிழ் நாளிதழில் இந்தச் செய்தி வெளியான அன்றே தமிழக அரசின் தொழில் துறையால் முதலமைச்சருக்கு ஒரு சுற்றோட்டக் குறிப்பு அனுப்பப்பட்டு உள்ளது. அதில், புவியியல் மற்றும் சுரங்கத் துறை, வருவாய்த் துறை, நிலம் மற்றும் நில அளவைத் துறை மற்றும் பொதுப் பணித் துறை ஆகிய துறைகளின் அதிகாரிகள் மூலம் குழு அமைக்கப்பட்டு கூட்டாக ஆய்வு செய்தபிறகு அரசிற்கு இறுதி அறிக்கை அனுப்புவதாக புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்தக் குறிப்பில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் 6.8.2010 அன்று கையெழுத்திட்டு உள்ளார். அந்தக் கோப்பு முதலமைச்சர் பார்வையிடாமலேயே முதலமைச்சர் அலுவலகத்தால் துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. அதன் பின்னர் எந்தவித ஆய்வும் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசால் 2011ம் ஆண்டு மே மாதம் வரை எடுக்கப்படவில்லை.

    இந்தப் பத்திரிகைச் செய்தி குறித்து 30.7.2010 அன்றே, இரண்டே நாட்களில் அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரால் அரசுக்கு அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அறிக்கையில், 28.7.2010 நாளிட்ட செய்தித்தாளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் காணவில்லை என கற்பனையாக வெளியிட்ட செய்திகள் முற்றிலும் தவறானது என்றும், அரசுக்கு கிரானைட் குவாரிகள் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கப் பெறும் நிலையிலும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வரும் நிலையிலும், செய்தித்தாளில் பொய்யான செய்திகள் வெளியிட்டு தொழிலாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால் மேற்படி செய்தித்தாளில் வரும் செய்திகளை நிராகரிக்கலாம்" என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிக்கை உண்மையிலேயே விசாரணை நடத்தியதன் அடிப்படையில் அளிக்கப்பட்ட அறிக்கையா அல்லது கருணாநிதியின் பேரனை காப்பாற்றுவதற்காக அனுப்பப்பட்ட அறிக்கையா என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் அறிந்து கொள்வார்கள்.

    அம்மா 2011ம் ஆண்டு மே மாதம் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், கிரானைட் முறைகேடு குறித்து விரிவான அறிக்கை பெறப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவிற்கிணங்க, மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்குமாறு மதுரை மாவட்ட ஆட்சியர் நேரடியாகவும், புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் மூலமாகவும் 3.8.2011, 4.8.2011, 15.9.2011, 22.9.2011, 13.1.2012, 27.1.2012, 8.2.2012, 19.4.2012 மற்றும் 11.5.2012 நாளிட்ட அரசு கடிதங்கள் வாயிலாக தொடர்ச்சியாக கேட்டுக் கொள்ளப்பட்டார். இதன் அடிப்படையில், மதுரை மாவட்ட ஆட்சியர் 19.5.2012 அன்று ஓர் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில், பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ், ஒலிம்பஸ் கிரானைட்ஸ், சிந்து கிரானைட்ஸ் ஆகிய மூன்று குவாரிகளை மட்டும் மாதிரிக்குத் தெரிவு செய்து ஆய்வு செய்ததாகவும், இந்த கிரானைட் குவாரிகளில் ஏற்பட்ட வருவாய் இழப்பீடு மற்றும் கள்ளத்தனமாக வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்களுக்கான சந்தை விலை ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிட்டால், மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள குவாரிகளில் 16,000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

    இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள ஒலிம்பஸ் கிரானைட்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் கருணாநிதியின் பேரன் துரை தயாநிதி, வி.எஸ். சூடாமணி மற்றும் அவரது மகன் எஸ். நாகராஜன் ஆகியோர் ஆவர். கருணாநிதி குடும்பத்திற்கு சொந்தமான இந்த நிறுவனத்தை ஆய்வு செய்த சகாயம், ஐ.ஏ.எஸ், தனது அறிக்கையில், 1.5.2012 அன்று வருவாய் கோட்டாட்சியர், மதுரை துணை ஆட்சியர் (பயிற்சி), வட்டாட்சியர், மேலூர் மற்றும் கனிமவளத் துறை உதவி புவியியலர் ஆகியோருடன் கீழவளவில் இருந்த ஒலிம்பஸ் நிறுவனத்தின் கிரானைட் குவாரியையும், கீழையூர் கண்மாயையும் தணிக்கை செய்தேன். ஒலிம்பஸ் நிறுவனம் சட்டத்திற்கு விரோதமாக கிரானைட் எடுத்திருந்ததை உறுதி செய்தேன்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் நடத்தப்பட்ட விசாரணையில் முறைகேடே நடைபெறவில்லை என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இது குறித்து அம்மாவின் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் தான் முறைகேடு நடந்துள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதிலிருந்தே கிரானைட் முறைகேட்டிற்கு எந்த ஆட்சி துணை போனது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

    இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் உள்ள 175 கிரானைட் குவாரிகளையும் ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் பணிக்கப்பட்டதை அடுத்து, 18 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு முழுமையான ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், மொத்தமுள்ள 175 கிரானைட் குவாரிகளில் தனியாருக்கு குத்தகைக்கு அளிக்கப்பட்ட 84 கிரானைட் குவாரிகளில் முறைகேடுகள் நடந்துள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தமுள்ள 84 தனியார் குவாரிகளில், ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்திற்கு சொந்தமான குவாரியின் உரிமம் ஏற்கெனவே இந்த அரசால் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டது. இது குறித்த வழக்கு இன்னமும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 77 குவாரிகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. மீதமுள்ள 6 குவாரிகள் நீதிமன்ற உத்தரவின் கீழ் உள்ளன. இந்தத் தற்காலிக ரத்து ஆணைகளுக்கு எதிராக குவாரி உரிமையாளர்கள் 57 நீதிப் பேராணை மனுக்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து தடையாணைகளை பெற்றனர். இந்த வழக்குகள் அனைத்தும் தொகுப்பு வழக்குகளாக மாற்றப்பட்டு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நிலுவையில் உள்ளன.

    83 தனியார் கிரானைட் நிறுவனங்களால் முறைகேடாக வெட்டியெடுத்துச் செல்லப்பட்ட கிரானைட் கற்களின் சந்தை மதிப்பை வசூல் செய்யும் வகையில், 13,748 கோடி ரூபாய் செலுத்துமாறு மதுரை மாவட்ட ஆட்சியரால் 83 நிறுவனங்களுக்கும் குறிப்பாணைகள் 2013ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அனுப்பப்பட்டன. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 62 நீதிப் பேராணை மனுக்கள் குவாரி உரிமையாளர்களால் தாக்கல் செய்யப்பட்டு தடையாணைகள் பெறப்பட்டன. இவற்றில் வாதங்கள் முடிவுற்று 57 வழக்குகளை உயர் நீதிமன்றம் 2.9.2014 அன்று தள்ளுபடி செய்தது. மீதமுள்ள 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக 90 முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பி.ஆர்.பி. நிறுவனத்தின் மீது மட்டும் 50 முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உயர் நீதிமன்ற மதுரை கிளை 24 முதல் தகவல் அறிக்கைகளுக்கு தடையாணை பிறப்பித்துள்ளது. இதனை நீக்கக் கோரும் மனு தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அரசு புறம்போக்கு நிலங்களின் 121 புல எண்களில் அனுமதி பெறாமல் இருப்பில் உள்ள மொத்தம் 24,751 கிரானைட் கற்களை கையகப்படுத்த 21.4.2013 மற்றும் 27.2.2014 ஆகிய தினங்களில் மதுரை மாவட்ட ஆட்சியரால் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட அறிவிக்கைகளை எதிர்த்து ஆறு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அந்த மனுக்களின் மீதான விசாரணை 8.8.2014 அன்று முடிவுற்று, சென்னை உயர் நீதிமன்ற நீதியரசரால் தீர்ப்பிற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அரசு புறம்போக்கு நிலங்களில் அனுமதி பெறாமல் இருப்பு வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்துண்டங்களை கையகப்படுத்தி ஏலம் விடும் முயற்சியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

    இது தவிர, பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவனத்தார் தங்களுடைய நிறுவனங்கள் முடக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்து சாதகமான தீர்ப்பினைப் பெற்றனர். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டதில் தமிழ்நாடு அரசுக்கு சாதகமான தீர்ப்பு பெறப்பட்டது. இதனை எதிர்த்து நிறுவனங்களின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட போது, அதனை எதிர்த்து வாதாடி அரசுக்கு சாதகமான தீர்ப்பு பெறப்பட்டது. கிரானைட் முறைகேட்டினை சட்டப்பூர்வமாக தகர்த்தெறிய தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்தவர் அம்மா.

    இந்த விவரங்களில் இருந்தே, உரிமங்கள் ரத்து, அனுமதி பெறாமல் இருப்பில் உள்ள 24,751 கிரானைட் கற்களை கையகப்படுத்தி ஏலம் விடுதல், முறைகேடாக வெட்டியெடுத்துச் செல்லப்பட்ட கிரானைட் கற்களின் சந்தை மதிப்பை வசூல் செய்தல், குற்ற வழக்கு தாக்கல் செய்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் அம்மா தலைமையிலான அண்ணா தி.மு.க. அரசு எடுத்தது என்பது தெளிவாகிறது. எனவே தான், உயர் நீதிமன்றமும் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளைப் பற்றி எவ்வித அபிப்ராயத்தையும் தெரிவிக்கவில்லை. மதுரை மாவட்ட ஆட்சியரின் ஆய்வு அறிக்கை சரிதானா என்பதை ஆய்ந்து அறிக்கை தாக்கல் செய்யத்தான் சகாயத்தை, (ஐ.ஏ.எஸ்.) சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் கிரானைட் முறைகேடு குறித்து அரசு எடுத்த நடவடிக்கை தொடர்பாக எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை, எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

    கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்ட தனது பேரன் பல மாதங்கள் ஓடி ஒளிந்து கொண்டபோது வாய் திறக்காத கருணாநிதிக்கு, பேரனை கைது செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்தபோது பழிவாங்கும் நடவடிக்கை என்று விமர்சனம் செய்த கருணாநிதிக்கு, கிரானைட் முறைகேட்டில் நியாயமாகவும், நேர்மையாகவும் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு இருக்கின்ற அம்மாவின் வழியில் செயல்படும் அரசுக்கு அறிவுரை கூறும் அருகதை இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கருணாநிதி சுட்டிக்காட்டும் சென்னை உயர் நீதிமன்றத்தின் 28.10.2014 நாளைய தீர்ப்பில், "It is not as if we were unaware of the contents of the counter affidavit, but the fact remains that the scam remained undetected till report was submitted by Mr. U. Sagayam, I.A.S. If the Government acted in an efficient manner, such a situation ought not to have come to pass. This is not some minor issue to remain undetected. … It is only when these irregularities were brought to notice by an officer with the State Government, that action was sought to be taken. … It (Executive) failed to perform qua the irregularities that arose right under its nose over a long period of time. …" என்று குறிப்பிட்டு இருக்கிறது. அதாவது, உ. சகாயத்தால் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்படாமலேயே இருந்தது என்பதுதான் உண்மை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறது. அம்மாவின் அரசு தொடர்ந்து அறிக்கை அனுப்பும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க, அப்போது மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த உ. சகாயத்தால் 19.5.2012 அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் தான், மதுரை மாவட்டத்தில் 16,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முழு முதற் காரணமாக விளங்கியவர் அம்மா தான். முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் முறைகேட்டை மூடிமறைக்கும் முயற்சி தான் நடைபெற்றது என்பது சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தெள்ளத் தெளிவாகி இருக்கிறது.

    ‘‘மடியில் கனமிருந்தால் தான் வழியில் பயம்" என்று ஒரு பழமொழி உண்டு. அம்மாவின் வழியில் செயல்படும் அரசைப் பொறுத்தவரையில், மடியில் கனமில்லை, இந்த கிரானைட் முறைகேட்டை கண்டு அஞ்சவும் தேவையில்லை. கிரானைட் முறைகேட்டை வெளியே கொண்டு வருவதற்கான அனைத்து விசாரணைகளும் முடிந்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் எல்லாம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், புதிதாக ஒருவர் விசாரணை செய்தால் ஏற்கெனவே எடுத்த நடவடிக்கைகளில் காலதாமதம் ஏற்படும் என்பதன் அடிப்படையில் தான் சகாயத்தின் நியமனம் அவசியம் இல்லை என்று தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ததே தவிர, வேறு எந்தவித அச்சமும் தமிழ்நாடு அரசுக்கு இல்லை என்பதையும், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசால் மூடி மறைக்கப்பட்ட கிரானைட் முறைகேட்டினை வெட்ட வெளிச்சமாக்கியதே அம்மாவின் அரசு தான் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அம்மாவின் வழியில் செயல்படும் அரசுக்கு அறிவுரை கூறி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடலாம் என்று கருணாநிதி நினைக்கிறார். ‘‘கங்கையில் மூழ்கினாலும் காகம் அன்னம் ஆக முடியாது" என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல, எவ்வளவு நடித்தாலும் கருணாநிதி உத்தமர் ஆக முடியாது. ‘‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரிந்துவிடும்" என்பதற்கேற்ப விரைவில் கருணாநிதியின் ‘‘குட்டு" வெளிப்பட்டு விடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
    Nov 02,2014 10:45 pm
    Jayalalithaa
    அ.தி.மு.க. தலைமைக் கழக அறிவிப்பு - 26.10.2014 **********************************...
    அ.தி.மு.க. தலைமைக் கழக அறிவிப்பு - 26.10.2014
    ******************************************************

    தேவர் திருமகனாரின் 107ஆவது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு 30-ந்தேதி காலை 10 மணி அளவில், சென்னை, நந்தனம், அண்ணா சாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உருவச் சிலைக்கு, அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

    நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள்.
    Oct 26,2014 05:52 pm
    Jayalalithaa
    Statement of Chief Minister Mr. O. Panneer Selvam on milk procurement price - 25...
    Statement of Chief Minister Mr. O. Panneer Selvam on milk procurement price - 25.10.2014
    ******************************************************************************************

    "மனிதனுக்கு தேவைப்படும் உணவுப் பொருட்களில் முக்கியமானதாக கருதப்படுவதும், கிராமப்புற விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுமான பாலினை உற்பத்தி செய்வோருக்கு ஆதாய விலை கிடைக்கச் செய்தல், மக்கள் சேவையினை திறம்பட செய்து கொண்டிருக்கும் ஆவின் நிறுவனத்தை மேம்படுத்துதல் மற்றும் நுகர்வோருக்கு தரமான பால் தங்கு தடையின்றி நியாயமான விலையில் அளித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் அரசு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயலாற்றி வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு.

    முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் போது, ஆவின் நிறுவனத்தின் செயல்பாடு அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. கொள்முதல் செய்த பாலுக்கு 45 நாட்கள் கழித்து கூட பணம் அளிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல், தனது கொள்முதலையே குறைத்துக் கொள்ளும் அவல நிலைக்கு ஆவின் நிறுவனம் தள்ளப்பட்டது. இப்படி தள்ளாடிக் கொண்டிருந்த ஆவின் நிறுவனத்தை மீட்டெடுக்க, கிட்டத்தட்ட 6 மாதம் வரையில் மாதா மாதம் 17 கோடி ரூபாய் நிதி உதவியை வழங்கி அதனை ஒரு ஸ்திரத் தன்மைக்கு கொண்டு வந்த பெருமைக்குரியவர் ஜெயலலிதா. இதுவரை, 192 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி உதவி தமிழ்நாடு அரசால் ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

    பால் உற்பத்தியாளர்கள், பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்று சென்ற ஆண்டு ஆவின் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்த போது, அதனை பரிசீலித்த தமிழ்நாடு அரசு, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் என 1.1.2014 முதல் உயர்த்தி வழங்கியது. அதே சமயத்தில் பாலின் விற்பனை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    இந்தச் சூழ்நிலையில், கறவை மாடுகளின் விலை, பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் ஆகியவற்றின் விலை, இதர இடுபொருட்களின் விலை ஆகியவை கணிசமாக உயர்ந்துள்ளன என்று தெரிவித்து, பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையை பால் உற்பத்தியாளர்கள் வைத்துள்ளனர்.

    பால் விற்பனை, கிராமப் பொருளாதார மேம்பாட்டில் ஒரு முக்கிய பங்கு வகிப்பதினையும், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தினையும், தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதையும் கருத்தில் கொண்டு; கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 22.5 லட்சத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையிலும், பால் கூட்டுறவு சங்கங்களின் நலனை உறுதிப்படுத்தும் வகையிலும், பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 23 ரூபாயிலிருந்து 28 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தவும்; எருமை பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 31 ரூபாயிலிருந்து 35 ரூபாயாக, அதாவது 4 ரூபாய் உயர்த்தவும் அரசு முடிவு செய்துள்ளது. இந்த பால் கொள்முதல் விலை உயர்வு 1.11.2014 முதல் அமலுக்கு வரும்.

    விற்பனை விலையை பொறுத்தவரையில், தனியார் பால்பண்ணை மற்றும் இதர மாநில கூட்டுறவு இணையங்களின் பால் விற்பனை விலையோடு ஆவின் பால் விற்பனை விலையை ஒப்பிடும் போது, ஆவின் பால் விற்பனை விலை மிகவும் குறைவாகும். பொதுவாக, பால்பண்ணை தொழிலில் நுகர்வோர்களிடமிருந்து பெறப்படும் பால் விற்பனை தொகையில், 75 விழுக்காடு முதல் 80 விழுக்காடு வரை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டும், கூட்டுறவு நிறுவனங்களின் பொருளாதார நிலை மற்றும் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பால் பணப் பட்டுவாடா எவ்விதத்திலும் பாதிப்படையக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டும், அதே சமயத்தில் நுகர்வோர்களுக்கு நல்ல தரமான பால் தொடர்ந்து விநியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் வகையிலும், கடந்த மூன்று ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே, பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் பதப்படுத்தும் செலவுகளை ஈடு செய்ய, சமன்படுத்திய பால் அட்டை விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய், அதாவது லிட்டர் ஒன்றுக்கு 24 ரூபாயிலிருந்து 34 ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. இந்த விலை உயர்வுக்கு பிறகும் கூட, ஆவின் பால் விற்பனை விலை, தனியார் பால்பண்ணைகள் மற்றும் இதர மாநில கூட்டுறவு இணையங்கள் பால் விற்பனை விலையை விட குறைவானதே ஆகும்."
    Oct 25,2014 12:45 pm
    Jayalalithaa
    Condolence Message on the demise of Actor Thiru. S. S. Rajendran from AIADMK Gen...
    Condolence Message on the demise of Actor Thiru. S. S. Rajendran from AIADMK General Secretary Honble Puratchi Thalaivi Selvi J Jayalalithaa - 24.10.2014
    *****************************************************************************************

    "பழம்பெரும் திரைப்பட நடிகரும், எஸ்.எஸ்.ஆர் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவருமான "லட்சிய நடிகர்" திரு. எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி தனது 86-வது அகவையில் இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

    மேடை நாடகங்கள் மூலம் திரையுலகிற்குள் நுழைந்து, முதலில் சிறு சிறு கதா பாத்திரங்களை ஏற்று நடித்த திரு. எஸ்.எஸ்.ராஜேந்திரன் "முதலாளி" என்ற திரைப்படம் தான் முகவரி பெற்றுத் தந்தது. "குமுதம்", "சாரதா", "சிவகங்கை சீமை", "தை பிறந்தால் வழி பிறக்கும்" உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் மூலம் தமிழக மக்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் திரு.எஸ்.எஸ்.ராஜேந்திரன். தனது தெளிவான தமிழ் வசன உச்சரிப்பால் அனைவரையும் கவர்ந்தவர். ரசிகர்களால் "லட்சிய நடிகர்" என்று அழைக்கப்பட்ட திரு. எஸ்.எஸ்.ராஜேந்திரன் தலைமுறை தாண்டி தற்போதைய இளம் தலைமுறை நடிகர்களுடனும் நடித்த பெருமைக்குரியவர். திரையுலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும் தடம் பதித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராகவும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றியவர்.

    திரு. எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாகும். தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்த திரு. எஸ்.எஸ்.ராஜேந்திரனின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது.

    திரு. எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்."
    Oct 24,2014 05:30 pm
    Jayalalithaa
    People's Leader AMMA in Chennai - 18.10.2014
    People's Leader AMMA in Chennai - 18.10.2014


    Oct 18,2014 08:42 pm
    Jayalalithaa
    Text of the D.O. letter addressed by the Chief Minister Mr. O. Panneer Selvam to...
    Text of the D.O. letter addressed by the Chief Minister Mr. O. Panneer Selvam to the Prime Minister on release of the 75 Indian fishing boats - dated 16.10.2014
    *******************************************************************************

    “I write to you to bring to your notice the alarming situation that has been developing over the past few months and is now seriously threatening the livelihood of Indian fishermen from Tamil Nadu caused by the vindictive and vengeful action of the Sri Lankan Navy. Our beloved leader Puratchi Thalaivi Amma had written to you several times indicating that the Sri Lankan Government has been pursuing a devious and sinister strategy of not releasing the apprehended fishing boats in successive incidents where such boats along with Indian fishermen were harassed and arrested while pursuing their peaceful avocation of fishing in their traditional fishing waters in the Palk Bay.

    The Government of Tamil Nadu reiterates its firm commitment to the restoration of the traditional fishing rights of our fishermen in the Palk Bay and the retrieval of Katchatheevu which had been an integral part of India since time immemorial. The Government of India should also not treat the International Maritime Boundary Line (IMBL) with Sri Lanka as a settled issue as the constitutionality of the 1974 and 1976 agreements have been challenged on extremely valid and legal grounds by the Government of Tamil Nadu and our beloved leader Puratchi Thalavi Amma in the Hon’ble Supreme Court of India.

    In my letter dated 8.10.2014, I had requested the release of 24 fishermen from Tamil Nadu apprehended by the Sri Lankan Navy. They continue to be in Sri Lankan custody. In addition, at present 75 boats belonging to the Tamil Nadu fishermen apprehended by the Sri Lankan Navy after May, 2014, continue to languish in Sri Lankan custody. The Sri Lankan side has deliberately and deviously hardened their stance and adopted this harsh approach of not releasing boats.

    Fishermen Associations have represented that fishermen families are despondent and in desperate straits due to the non-release of boats for a prolonged period. Their livelihood is severely affected and the ensuing Deepavali festival may be bleak and cheerless for them. They requested me to take up the matter of non-release of boats with the Government of India urgently and seek an early resolution to the issue. Their well-founded apprehension is that with the North East monsoon due to hit the Sri Lankan and Tamil Nadu coast shortly, their impounded boats which have been precariously berthed in the open, exposed to the elements and with no regular maintenance on the Sri Lankan coast, are likely to suffer irretrievable damage if they are not released at once. Even now, it is reported that disuse and lack of maintenance has led to their deterioration. The high velocity winds expected with the monsoon will damage these precariously anchored boats beyond redemption. I therefore urge you to immediately instruct the concerned Ministry to take up the matter of the safe berthing of these 75 boats pending release with the Sri Lankan authorities.

    In parallel, the immediate release of these boats must also be taken up. Being deprived of their boats which are their essential means of earning their livelihood has led to considerable loss of income and reduced many fishermen families to a stage of penury, poverty and to a state of utter despondency. I implore you to kindly intervene in the matter personally and ensure the immediate release of the 75 Indian fishing boats that are still in Sri Lankan custody.”
    Oct 16,2014 05:58 pm
    Jayalalithaa
    Asian Games Medal Winners - Chief Minister Mr. O. Panneer Selvam announcement -...
    Asian Games Medal Winners - Chief Minister Mr. O. Panneer Selvam announcement - 9.10.2014
    *******************************************************************************

    "ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி தங்க பதக்கம் வென்றுள்ளதை அறிந்து மகிழ்கிறேன். அந்த அணியில் நீங்களும் ஒரு முக்கிய நபர் என்பதால், தமிழக மக்களின் சார்பாக எனது வாழ்த்துகள்.

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்க பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அம்மா ஏற்கனவே அறிவித்தார் . அது உங்களுக்கு தெரியும். அதன்படி ரூ.50 லட்சத்தை பெற தகுதியுள்ளவர் நீங்கள். அம்மாவின் அறிவிப்புபடி அந்த தொகை வழங்கப்படும். தமிழக அரசின் சார்பாக உங்களுக்கு எங்களின் பாராட்டுகள். எதிர்காலத்திலும் இந்த சாதனை தொடரட்டும்."

    இதேபோல் ஊக்கத்தொகை பெற்ற வீரர்களும் அவர்களுக்கான பரிசுத் தொகையும் வருமாறு:

    1. வீராங்கனை வர்ஷ கௌதம் - 20 லட்சம்

    2. வீராங்கனை ஐஸ்வர்யா நெடுஞ்செழியன் - 20 லட்சம்

    3. வீரர் ராஜீவ் ஆரோக்யா - 20 லட்சம்

    4. வீரர் குஷ்குமார் - 50 லட்சம்

    5. ஹரீந்தர் பால்சிங் - 50 லட்சம்

    6. செளரவ் கோஷல் - 50 லட்சம்

    7. அபரஷிதா பாலமுருகன் - 30 லட்சம்

    8. அனகா அலங்கமோனி - 30 லட்சம்

    9. ஜோஷ்னா சின்னப்பா - 30 லட்சம்

    10. தீபிகா பல்லிகல் - 30 லட்சம்.
    Oct 09,2014 07:49 pm
    Jayalalithaa
    Text of the D.O. letter addressed by the Chief Minister Mr. O. Panneer Selvam to...
    Text of the D.O. letter addressed by the Chief Minister Mr. O. Panneer Selvam to the Prime Minister on fishermen issues dated 8th October 2014
    *******************************************************************************

    "This is to bring to your notice, one more incident, wherein 4 fishermen in a fishing boat bearing registration No. IND-TN-10-MM-468 who set sail from Rameswaram fishing base of Ramanathapuram District on 6.10.2014 have been apprehended by the Sri Lankan Navy. The boat drifted to Delft Island, Sri Lanka and was grounded due to an engine snag following which the 4 fishermen were arrested and handed over to Delft Island Police, by the Sri Lankan Navy.

    This new trend of apprehending fishermen in boats that develop mechanical snag by the Sri Lankan Navy is a matter of concern for my Government. An immediate intervention at the highest level is sought to arrest this new trend.

    I would like to remind you that 20 fishermen and 75 boats of the fishermen of Tamil Nadu continue to be in Sri Lankan custody. The Sri Lankan strategy of not releasing the boats of our fishermen is causing great frustration amongst the fishermen of Tamil Nadu. Without their livelihood base, these fishermen are in a state of despondency. I urge you to take this up with the highest authorities of the Sri Lankan Government and ensure the immediate release of the precariously berthed boats as the impending monsoon poses grave danger to them.

    Nearly 10 lakh fisherfolk in Tamil Nadu depend on marine fishing as their only source of livelihood. As our leader, Puratchi Thalaivi Amma had indicated earlier, the Government of Tamil Nadu under her leadership had taken a number of steps towards diversification of their avocation to minimize the pressure on the marine ecosystem. A two pronged approach is necessary at this juncture to solve this chronic problem. One is the financial package that our Leader had requested from the Central Government, which would go a long way in improving the socio economic status of the fishermen. The second is the abrogation of the 1974 and 1976 agreements and restoration of the traditional and historical fishing grounds of the Palk Bay and Katchatheevu which has been challenged on extremely valid and
    legal grounds by our Leader Puratchi Thalaivi Amma in her personal capacity and also by the Government of Tamil Nadu in the Hon’ble Supreme Court of India. Denying our fishermen, the right to peaceful fishing in their traditional waters of the Palk Bay to which they have a historical claim is causing considerable angst amongst the fisherfolk of Tamil Nadu. I request your personal intervention to immediately resolve this long pending issue by retrieving Katchatheevu and restoring the traditional fishing rights of our fishermen as has been demanded by our beloved leader Puratchi Thalaivi Amma.

    May I request you to instruct the concerned Ministry to take urgent steps to secure the immediate release of 24 fishermen who are languishing in Sri Lankan jails and the release of 75 boats in Sri Lankan custody?"
    Oct 08,2014 05:05 pm
    Jayalalithaa
    Bakrid Greetings of the Chief Minister Mr. O. Panneer Selvam- Dated 5-Oct-2014 *...
    Bakrid Greetings of the Chief Minister Mr. O. Panneer Selvam- Dated 5-Oct-2014
    *********************************************************************************************

    "இறைக் கட்டளையை ஏற்று தன் தனையனையே இறைவனுக்கு அர்ப்பணிக்க துணிந்த இறைத் தூதர் இப்ராஹிமின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் பக்ரீத் பண்டிகையினை கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுவதன் நோக்கமே, இறைத் தூதரின் தியாகங்களை எண்ணிப் பார்த்து அவருடைய வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான்.

    நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் தடைக் கற்களாகத் திகழ்கின்ற அதர்மம், அநீதி, சூழ்ச்சி, வன்மம் ஆகியவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்து, நற்சிந்தனைகளும், நன்னெறிகளும் வெற்றி பெற எண்ணற்ற தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் தேவைப்படும். இறைத் தூதரின் தியாகங்களை மனதில் நிலைநிறுத்தி, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் நாம் உறுதி ஏற்போம்.

    விட்டுக் கொடுத்தலும், ஈகை புரிதலும், மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்க வேண்டும்; அனைவர் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்ற என்னுடைய அவாவினைத் தெரிவித்து, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்."
    Oct 05,2014 07:23 am
    Jayalalithaa
    Condolence Message of the CM Mr. O. Panneer Selvam on the demise of Thiru. Polla...
    Condolence Message of the CM Mr. O. Panneer Selvam on the demise of Thiru. Pollachi N Mahalingam - 3.10.2014
    **************************************************************************************

    "பிரபல தொழில் அதிபரும், இராமலிங்க அடிகளார் தொண்டரும், சிறந்த காந்தியவாதியுமான திரு. பொள்ளாச்சி மகாலிங்கம் 2.10.2014 அன்று சென்னையில் காந்தி வள்ளலார் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது மயக்கமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வழியிலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன்.

    திரு. பொள்ளாச்சி மகாலிங்கம் சக்தி குழும நிறுவனங்களின் தலைவராயிருந்து எண்ணற்ற நிறுவனங்களை தனது கடும் உழைப்பால் உருவாக்கி பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தந்ததோடு பல இளம் தலைமுறை தொழில் முனை வோர்களுக்கு வழிகாட்டியாகவும், உந்து சக்தியாகவும், ஊக்க சக்தியாகவும் விளங்கியவர். "ஓம் சக்தி" என்ற பெயரில் ஆன்மிக இதழை நடத்தி மக்களிடையே ஆன்மிக உணர்வையும், அறிவியல் உணர்வையும் ஒரு சேர வளர்த்தவர்.

    தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக மூன்று முறை திறம்பட மக்கள் பணியாற்றியுள்ளார். காந்தியத்தை வாழ்வின் லட்சியமாகக் கொண்டு தனது இறுதி மூச்சு வரை காந்திய பாதையிலேயே பயணித்து, வள்ளலார் காட்டிய நெறியில் வாழ்ந்து மறைந்துள்ளார். வள்ளலார் மார்க்கமான சமரச சுத்த சன்மார்க்கத்துக்காக பல அளப்பரிய பணிகளை ஆற்றி அவர் வழியில் ஏழை, எளிய மக்கள் மீது அன்பு காட்டியுள்ளார்.

    திரு. பொள்ளாச்சி மகாலிங்கம் பத்மபூஷன் விருது பெற்றுள்ளார்.

    மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா, காந்திய வழியிலும், வள்ளலார் காட்டிய நெறியிலும் வாழ்ந்த திரு. பொள்ளாச்சி மகாலிங்கம் மீது அளப்பறிய அன்பும், பாசமும் கொண்டிருந்தார்கள்.

    மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா, தமிழக சட்டமன்ற பேரவை வைர விழாவின் போது, முதல் சட்டமன்ற பேரவை உறுப்பினராக விளங்கி மக்கள் பணியாற்றிய திரு. பொள்ளாச்சி மகாலிங்கத்தை கெளரவித்தார்கள்.

    திரு. பொள்ளாச்சி மகாலிங்கத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்."
    Oct 03,2014 07:42 pm
    Jayalalithaa
    Text of the D.O. letter addressed by the Chief Minister to the Prime Minister on...
    Text of the D.O. letter addressed by the Chief Minister to the Prime Minister on fishermen issues dated 1st October 2014
    *******************************************************************************

    “Due to the untiring and relentless efforts of our beloved leader Puratchi Thalaivi Amma, 76 Indian fishermen languishing in Sri Lankan jails were released by the Sri Lankan court today (30.9.2014). Out of these 76 fishermen, 72 are from Tamil Nadu. No boats have been released. I appreciate the efforts of the Government of India under your leadership in securing the release of fishermen who were apprehended by the Sri Lankan Navy but unfortunately 71 fishing boats of these fishermen have not yet been released by the Sri Lankan Government and are falling apart from disuse there itself. The impending advent of the North East Monsoon mandates their immediate release to prevent further damage and deterioration.

    I would like to bring to your notice yet another incident, wherein 4 fishermen in a mechanised fishing boat who set sail for fishing from Rameswaram fishing base of Ramanathapuram District on 27.9.2014, were drifting due to a technical snag and were apprehended by the Sri Lankan Navy on 28.9.2014 and taken to Kankesanthurai, Sri Lanka. The 4 fishermen were produced before the Magistrate’s Court, Kayts on 29.9.2014 and have been remanded till 10.10.2014.

    In another incident on 29.9.2014, 4 fishing boats from Kottaipattinam fishing base, Pudukkottai District with 16 fishermen ventured into the sea for fishing. While fishing, they were apprehended in the early hours of 30.9.2014 by the Sri Lankan Navy and taken to Kankesanthurai, Sri Lanka.

    The traditional rights of fishermen from Tamil Nadu to fish in the waters of Palk Bay is continuously being infringed upon by the Sri Lankan Navy. The IMBL itself is a matter that is sub judice in the Supreme Court of India wherein the Government of Tamil Nadu and our beloved leader Puratchi Thalaivi Amma in her personal capacity as General Secretary of AIADMK has challenged the unconstitutional ceding away of Katchatheevu by the 1974 and 1976 Agreements.

    The Government of Tamil Nadu strongly reiterates the need to restore the traditional rights of our fishermen by annulling the ill-advised Indo-Sri Lankan agreements of 1974 and 1976 urgently. I am confident that your Government will find suitable mechanisms to resolve this long pending fishing dispute between India and Sri Lanka by retrieving Katchatheevu and restoring the traditional fishing rights of our fishermen.

    I request the Government of India to take positive and concrete steps to secure the immediate release of 20 fishermen and 75 boats still in custody of the Sri Lankan authorities.”
    Oct 01,2014 06:48 pm
    Jayalalithaa
    Statement of the Honble Chief Minister on Golden Jubilee Celebration of Edappadi...
    Statement of the Honble Chief Minister on Golden Jubilee Celebration of Edappadi Municipality - 26.9.2014
    *************************************************************************************

    "நெசவுத் தொழிலுக்கு பெயர் பெற்ற எடப்பாடி நகரம் 1.4.1965 அன்று மூன்றாம் நிலை நகராட்சியாக தோற்றுவிக்கப்பட்டு தற்போது முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, இந்த ஆண்டு தனது பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

    28.22 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட எடப்பாடி நகரின் மையப் பகுதியில் சரபங்கா நதியும், நஞ்சுண்டேஸ்வரர் சிவாலயமும் அமைந்துள்ளன. இந்த நகராட்சியில், 30 வார்டுகள்; 105.75 கிலோ மீட்டர் நீள சாலைகள்; 2,441 தெரு விளக்குகள்; 2 பூங்காக்கள்; 15 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள்; ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஒரு அரசு மருத்துவமனை உள்ளன.

    கடந்த மூன்று ஆண்டுகளில், எடப்பாடி நகராட்சியில் 27 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், கட்டடங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட 92 அடிப்படை வசதிப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அவற்றில் பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள எடப்பாடி நகராட்சியின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு அந்தப் பகுதி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வரப் பெற்றுள்ளன.

    எடப்பாடி நகராட்சி தனது பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்தத் தருணத்தில், பொன் விழா ஆண்டினை நினைவுகூரும் வகையில், எடப்பாடி நகராட்சியின் குடிநீர் விநியோக மேம்பாடு, தார்சாலை மேம்பாடு, சிமெண்ட் சாலைகள் அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், தெரு விளக்குகள் பொருத்துதல், திடக்கழிவு மேலாண்மை, புதிய கழிப்பிடங்கள் அமைத்தல், குளங்களை சீரமைத்தல், பேருந்து நிலைய மேம்பாடு, அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, எடப்பாடி நகராட்சிக்கு சிறப்பு உதவித் தொகையாக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தப் பணிகள், எடப்பாடி நகராட்சியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்த வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
    Sep 26,2014 09:02 pm
    Jayalalithaa
    Honble Chief Minister chaired the Second Board meeting of the Tamil Nadu Infrast...
    Honble Chief Minister chaired the Second Board meeting of the Tamil Nadu Infrastructure Development Board (TNIDB) - 23.9.2014
    *******************************************************************************

    The Hon’ble Chief Minister of Tamil Nadu Selvi J Jayalalithaa chaired the Second Board meeting of the Tamil Nadu Infrastructure Development Board (TNIDB) held at the Secretariat on Tuesday (23.9.2014).

    The TNID Board reviewed the progress of various infrastructure projects and initiatives undertaken by various departments and agencies of Government of Tamil Nadu including the projects identified in Phase 2 of the Vision Tamil Nadu 2023. The Board noted that considerable progress has been made on 217 projects/programmes identified under Vision Tamil Nadu 2023, Phase 2. 173 projects/programmes are at various stages of preparation and implementation with work having commenced on 64 projects/programmes.

    The TNID Board under the Chairpersonship of Hon’ble Chief Minister of Tamil Nadu Selvi J Jayalalithaa approved the 24×7 Water Supply Project for Coimbatore. The project is to be developed at an approximate cost of Rs.556.57 crore would improve and revamp the present feeder mains and distribution system of Coimbatore. The project would provide 24×7 water supply to 1.5 lakh households in Coimbatore with 100% household coverage. The project would be implemented on a Build-Transfer-Operate basis under the public private partnership mode with an innovative staggered annuity model of financing.

    The Board under the Chairpersonship of Hon’ble Chief Minister of Tamil Nadu Selvi J Jayalalithaa approved setting up of two desalination Sea Water Reverse Osmosis (SWRO) plants with a capacity of 400 MLD and 150 MLD to be located at Perur and Nemmeli, respectively. The 400 MLD desalination plant at Perur would be built at a cost of about Rs. 4,070 crore while the project cost for the 150 MLD plant at Nemmeli would be about Rs.1,371 crore. Both these projects would be built on Design-Build-Operate (DBO) basis. These projects would enable Chennai to secure the supply of high quality drinking water which would be available even during the dry season. It would also provide an alternative source of water, diversifying the supply and making it less vulnerable to interruptions. Central Government grant financing is being sought for the project.

    The Board under the Chairpersonship of Hon’ble Chief Minister of Tamil Nadu Selvi J Jayalalithaa approved the project structure for the proposed Madurai-Thoothukudi Industrial (MTI) Corridor. 29 projects spanning the southern districts of the State namely, Madurai, Sivaganga, Virudunagar, Thoothukudi, Tirunelveli, Ramanathapuram and Kanyakumari have been planned along the industrial corridor. The total outlay envisaged for this mega project is about Rs.1,83,819 crore which is 12 % of the total investment envisaged in the Vision Tamil Nadu 2023. The MTI Corridor Project would improve business activity and facilitate economic development in the southern region of the State. The core nodes of development would be spread across 4 Manufacturing and Business Investment Regions (MBIR), 2 Manufacturing and Business Investment Areas (MBIA), 1 Agri Business Investment Region (ABIR), 2 Knowledge Hubs and 3 Special Tourism Investment Zones. In addition, the corridor would have an 800 MW thermal power project at Thoothukudi; a greenfield port in the Manappad region, an entrepreneurship development centre for small and medium enterprises and a world class medi city at Madurai. The MTI Corridor is envisioned to attract additional industrial investments of about Rs.1,90,000 crore from private sector over a period of 10 years.

    The Tamil Nadu Vision 2023 envisages huge investment requirement in various Infrastructure projects to the tune of Rs.15,00,000 crore. New Financing mechanisms are needed to tap into private and institutional financial resources through infrastructure financing options. Recent regulatory changes enable new and innovative Infrastructure Finance Vehicles (IFVs). The Hon’ble Chief Minister Selvi J Jayalalithaa has pioneered and nurtured many financial initiatives and placed Tamil Nadu in the forefront of setting up financial institutions contemporaneous to the needs of State’s development. Keeping in mind the financing needs of infrastructure projects envisaged under Tamil Nadu Vision 2023, the Board under the Chairpersonship of Hon’ble Chief Minister of Tamil Nadu Selvi J Jayalalithaa approved the establishment of the Tamil Nadu Infrastructure Fund Management Company Limited (TNIFMC). The TNIFMC will be enabled to roll out and manage new Infrastructure Finance Vehicles (IFV) viz., Infrastructure Debt Fund (IDF), Alternative Investment Fund (AIF) and Infrastructure Investment Trust (InvIT) as per SEBI guidelines.

    This would be a fourth generation financial institution in Tamil Nadu and will be set-up in partnership with Banks, Insurance Companies and reputed Private Financial Institutions. These funds would be used to lend to/invest in public projects, PPPs and private projects. The potential investor groups identified for IFVs are Sovereign Wealth Funds, Banks and Financial Institutions, Multilateral/Bilateral Institutions, Pension Funds, Insurance Funds, Impact Funds, Endowments / Foundations, Family Trusts, Foreign Portfolio Investors, High Networth Individuals (HNIs), Overseas Corporate Bodies, Private Equity, Fund of Funds and other investors with KYC compliance. The Board under the Chairpersonship of Hon’ble
    Chief Minister of Tamil Nadu Selvi J Jayalalithaa accepted draft Phase 3 of the Vision Tamil Nadu 2023 Document, which details the policy and administrative action plan for Infrastructure Development in State. The Document was referred to the Executive Committee to consider the specific recommendations for appropriate follow up action. The Board under the Chairpersonship of Hon’ble Chief Minister of Tamil Nadu Selvi J Jayalalithaa approved budget of Rs.2000 crore for the Tamil Nadu Infrastructure Development Fund and Rs.200 crore for project preparatory fund (PPF) of TNIDB for the Financial Year 2014-15.

    The meeting was attended by the Hon’ble Minister for Finance and Public Works, Hon’ble Minister for Electricity, Prohibition and Excise, Hon’ble Minister for Housing and Urban Development, Minister for Highways and Minor Ports, Hon’ble Minister for Rural Industries and Labour, Hon’ble Minister for Higher Education, Hon’ble Minister for Industries, Hon’ble Minister for Transport, Hon’ble Minister for Municipal Administration, Rural Development, Law, Courts and Prisons, Hon’ble Minister for Tourism, Hon’ble Minister for Health, Government of Tamil Nadu; Chief Secretary to Government of Tamil Nadu and Member Secretary, TNIDB; Adviser to Government and other senior officials.
    Sep 23,2014 07:36 pm
    Jayalalithaa
    Text of the D.O. letter addressed by the Honble Chief Minister to Honble Prime M...
    Text of the D.O. letter addressed by the Honble Chief Minister to Honble Prime Minister of India, with regard to the three other fishermen who have been arrested by the Qatar Coast Guard - 23.9.2014
    *******************************************************************************

    “I write to bring to your kind attention a tragic incident which took place in the seas off the coast of Bahrain and Qatar in which a fisherman Thiru Karthikeyan S/o. Thiru Thangarasu from Thiruppalaikudi Village, Ramanathapuram District of Tamil Nadu, currently based in Bahrain was shot dead by the Qatari Coast Guard while fishing along with three other persons. The three other fishermen, Thiru Aiyyappan, Thiru Raju and Thiru Samayamuthu, also from Ramanathapuram District of Tamil Nadu, have been arrested by the Qatar Coast Guard. These fishermen from Ramanathapuram District in Tamil Nadu were working in Bahrain on contract basis when this unfortunate incident took place in the early hours of 21st September, 2014.

    It has been ascertained that these four fishermen, in the course of their fishing activities, inadvertently strayed into Qatari waters when the Qatar Coast Guard opened fire killing one fisherman and arresting three others. The other three fishermen have been detained in the Doha Jail, Qatar. It is learnt that the body of the deceased fisherman is also in the custody of Qatari authorities.

    These poor, innocent fishermen who strayed inadvertently into Qatari waters had gone to Bahrain to earn a meager livelihood and support their families. The family of the deceased fisherman is shattered and seek the early return of his body. The arrested fishermen are the sole breadwinners of their families and if their immediate release is not secured the fishermen and their families will be put to great financial and mental hardship.

    I request you to direct the Indian Embassies in Qatar and Bahrain to take urgent steps to arrange for the transportation of the body of the deceased fisherman Thiru Karthikeyan and also secure the early release of the other three fishermen. I also request you to kindly direct the Indian Embassy at Bahrain to take up this matter with the employer company and to ensure that the terminal monetary benefits due to Thiru Karthikeyan are released to the family without any delay.”
    Sep 23,2014 07:22 pm
    Jayalalithaa
    Statement of the Honble Chief Minister on Electricity issues in the State - 23.9...
    Statement of the Honble Chief Minister on Electricity issues in the State - 23.9.2014
    *******************************************************************************

    "மின்சாரம் என்றாலே வாழ்வாதாரம் என்னும் சொல்லும் அளவுக்கு, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் மின் உற்பத்தியின் வளர்ச்சி பின்னிப் பிணைந்துள்ளது என்பதை கருத்தில் கொண்ட எனது தலைமையிலான அரசு, 2011-ல் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, கடந்த மூன்று ஆண்டு காலமாக மின் உற்பத்தியைப் பெருக்கவும், சீர்குலைந்து கிடந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தை சீர்திருத்தவும் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வந்து கொண்டிருக்கிறது.

    இதன் காரணமாக, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மின்தடை முழுமையாக ரத்து செய்யப்பட்டதோடு, கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் சீரான மின்சாரம் தங்கு தடையின்றி தமிழக மக்களுக்கு கிடைத்து வருகிறது.

    மின் உற்பத்தி என்று எடுத்துக் கொண்டால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2,793 மெகாவாட் மின் நிறுவு திறன் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், நடுத்தரக் கால அடிப்படையில், 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதுவன்றி, கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அலகிலிருந்து தற்போது 562 மெகாவாட் மின்சாரமும்; நீண்டகால கொள்முதல் ஒப்பந்தங்கள் மூலம் 224 மெகாவாட் மின்சாரமும் தமிழ்நாட்டிற்கு கிடைக்கின்றது. மொத்தத்தில், 4,079 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கூடுதலாக கிடைத்து வருகிறது. புதிய மின் திட்டங்கள் மூலமாக 1,430 மெகாவாட் மின்சாரம்; நீண்ட கால கொள்முதல் ஒப்பந்தங்கள் மூலம் 776 மெகாவாட் மின்சாரம் என மொத்தம் 2,206 மெகாவாட் மின்சாரம் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் நமக்கு மேலும் கிடைக்க இருக்கிறது.

    முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் சீர்குலைந்து கிடந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தை மீட்டெடுப்பதற்காக 25,255 கோடி ரூபாய் நிதியுதவியினை எனது தலைமையிலான அரசு செய்துள்ளது. இதில், மின் நுகர்வோருக்கான மின் கட்டண மானியமாக 11,149 கோடி ரூபாயை எனது தலைமையிலான அரசு வழங்கியுள்ளது. மேலும், 2014-2015 ஆம் ஆண்டிற்கு 10,575 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மின்சாரம் தயாரிப்பதற்கு ஏற்படும் எரிபொருள் செலவு, தமிழ்நாடு மின்சார வாரியத்தால் பெறப்பட்ட கடனுக்கான வட்டித் தொகை மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டண விகித மாறுதல் கேட்டு அதற்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சமர்ப்பிக்க வேண்டும் என்று 2005 ஆம் ஆண்டு மின் கட்டண ஒழுங்குமுறை விதிகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அவ்வாறு சமர்ப்பிக்காவிட்டால், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தன்னிச்சையாக மின் கட்டண நிர்ணயத்தை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஒழுங்குமுறை ஆணைய விதிகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மின்சார மேல் முறையீட்டு தீர்ப்பாயமும், தனது 11.11.2011 நாளிட்ட தீர்ப்பில், மின்பகிர்வு உரிமைதாரர்கள் மின் கட்டண நிர்ணயத்திற்கான மனுவினை சமர்ப்பிக்காமல் ஒரு மாதத்திற்கு மேல் தாமதம் செய்தால், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் தன்னிச்சையாக மின் கட்டணங்களை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. மத்திய பாஜக கூட்டணி அரசால் இயற்றப்பட்ட 2003 ஆம் ஆண்டு மின்சார சட்டமும், மின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான அதிகாரத்தை மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அளித்துள்ளது.

    இந்த நிலையில், 2003 ஆம் ஆண்டைய மத்திய மின்சார சட்டம், 2005 ஆம் ஆண்டைய மின் கட்டண நிர்ணய விதிகள் மற்றும் மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவு ஆகியவற்றின் அடிப்படையில், மின் கட்டணங்களை மாற்றி அமைக்கும் விதமாக, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொது அறிவிப்பு ஒன்றினை இன்று (23.9.2014) வெளியிட்டுள்ளது. உள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியின் விலை டன் ஒன்றிற்கு தற்போது 3,298 ரூபாய் என உயர்ந்துள்ளதையும்; வெளிநாட்டு நிலக்கரியின் விலை 6,896 ரூபாய் என உயர்ந்துள்ளதையும்; பணியாளர் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கான செலவு நடப்பு ஆண்டில் 4,370 கோடி ரூபாய் என உயர்ந்துள்ளதையும்; தமிழ்நாடு மின்சார வாரியத்தால் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான மேம்பாட்டுப் பணிகளுக்காக பெறப்பட்ட கடன்களின் மீதான வட்டிச் செலவினம் 8,463 கோடி ரூபாய் என உள்ளதையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் நுகர்வோர்களுக்கான உத்தேச மின் கட்டணத்தை நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    மேற்படி அறிவிப்பு வெளியிடப்பட்ட பின், அதன் மீது பொதுமக்கள் மற்றும் நுகர்வோரின் கருத்துகள் கேட்கப்பட்டு; நுகர்வோர் நலன், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நலன், எதிர்கால மின் திட்டங்கள் மற்றும் கட்டமைப்பிற்கான செலவினங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டண நிர்ணயம் குறித்த இறுதி அறிவிக்கையை வெளியிடும்.

    மின் நுகர்வோர்களுக்கான கட்டணத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எப்படி நிர்ணயித்தாலும், அதன் காரணமாக, ஏழை, எளிய மக்கள் எந்த விதத்திலும் பாதிப்படையாத வகையில், அதற்குத் தேவைப்படும் கூடுதல் மானியத்தை எனது தலைமையிலான அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
    Sep 23,2014 04:28 pm
    Jayalalithaa
    அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அவர்களின் நன்றி அறிவி...
    அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அவர்களின் நன்றி அறிவிப்பு - 22.9.2014
    *******************************************************************************

    "திருநெல்வேலி மாநகராட்சி மேயர், நான்கு நகராட்சித் தலைவர்கள், ஒரு பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பல உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் போட்டியின்றி ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர், தூத்துக்குடி மாநகராட்சி மேயர், நான்கு நகராட்சித் தலைவர்கள், ஆறு பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பல்வேறு பதவியிடங்களுக்கு 18.9.2014 அன்று நடைபெற்ற இடைத் தேர்தலில், எனது தலைமையிலான அரசின் மூன்றாண்டு சாதனைத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும், தொலைநோக்குத் திட்டங்களையும் நிலை நிறுத்தி; என்னுடைய அன்பான வேண்டுகோளினை ஏற்று; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களை அமோக வெற்றி பெறச் செய்து, உங்களுக்காகவே உழைத்துக் கொண்டிருக்கும் என்னை ஊக்கப்படுத்தி, எனது கரங்களை மேலும் வலுப்படுத்தி, நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கிய எனது அருமை வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களின் வெற்றிக்காக, அல்லும் பகலும் அயராது அரும்பாடுபட்ட என் உயிரினும் மேலான எனது அருமை கழக உடன்பிறப்புகளுக்கும், அமைச்சர்களுக்கும், தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும், மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும், தோழமைக் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
    Sep 22,2014 05:30 pm
    Jayalalithaa
    Statement of the Honble Chief Minister on Water Release from Amaravathi Dam - 21...
    Statement of the Honble Chief Minister on Water Release from Amaravathi Dam - 21.9.2014
    ***************************************************************************

    "திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதி அணையிலிருந்து, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள அமராவதி பாசன அமைப் பின்கீழ் உள்ள புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு 22.9.2014 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

    இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்."
    Sep 21,2014 10:37 am
    Jayalalithaa
    Statement of the Honble Chief Minister on Crop insurance to farmers - 20.9.2014...
    Statement of the Honble Chief Minister on Crop insurance to farmers - 20.9.2014
    *******************************************************************************

    "வேளாண் தொழிலுக்குத் தேவையான பயிர்க் கடன் வழங்குதல், விதைகள் மற்றும் உரங்களை மானிய விலையில் வழங்குதல், விவசாய உபகரணங்களை மானிய விலையில் வழங்குதல் உட்பட பல்வேறு விவசாய உதவித் திட்டங்களின் மூலம் வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்தவும் முனைப்பான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

    மழையையே பெரிதும் நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் திட்டமாக விளங்குவது பயிர்க் காப்பீட்டுத் திட்டம். இயற்கைச் சீற்றங்களால் பயிர்கள் அழியும் போது விவசாயிகளுக்கு ஏற்படும் பேரழிவை போக்கிடும் திட்டமாக தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வந்தது.

    இந்தத் திட்டத்தின்படி, காப்பீடு செய்யப்படும் தொகைக்கான காப்பீட்டுக் கட்டணம், அதாவது பிரிமியம், பயிர் மற்றும் பருவத்திற்கு ஏற்றாற் போல் இரண்டு விழுக்காடு முதல் 3 புள்ளி ஐந்து விழுக்காடு வரை இருந்தது. இந்தக் காப்பீட்டுக் கட்டணத்தில், 50 விழுக்காடு தொகையை தமிழ்நாடு அரசே செலுத்தி வந்தது. மீதமுள்ள தொகையை விவசாயிகள் செலுத்தி வந்தனர். இந்தத் திட்டத்தின்படி, விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய பயிர் இழப்பீட்டுத் தொகை, காப்பீட்டு நிறுவனங்களால் வசூல் செய்யப்பட்ட காப்பீட்டுக் கட்டணத்திற்குள் இருந்தால், அந்தத் தொகையை காப்பீட்டு நிறுவனங்களே விவசாயிகளுக்கு வழங்கிவிடும். வழங்கப்பட வேண்டிய மொத்த இழப்பீட்டுத் தொகை, காப்பீட்டுக் கட்டணத்தை விட கூடுதலாக இருந்தால், தேவைப்படும் அந்த கூடுதல் இழப்பீட்டுத் தொகையை மத்திய, மாநில அரசுகள் சரிசமமாக பகிர்ந்து கொண்டு, காப்பீட்டு நிறுவனம் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கும். இந்தத் திட்டத்தை ஒரு முழுமையான காப்பீட்டுத் திட்டமாக கருத இயலாது என்றாலும், மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடனான இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு பயனுள்ள திட்டமாகவே இருந்தது.

    விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருந்த இந்தத் திட்டத்தை, மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் முந்தைய மத்திய கூட்டணி அரசு, கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென ரத்து செய்து, அதற்குப் பதிலாக தேசிய பயிர் காப்பீட்டுத் திட்டம் என்னும் புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம், திருத்திய தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம், வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம் என்ற இரு அம்சங்களை கொண்டதாகும். திருத்திய தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அந்தந்த இடங்களில் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்பின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகையும், காப்பீட்டுக் கட்டணமும் நிர்ணயம் செய்யப்படுகின்றன. உதாரணமாக, திருவாரூர் மாவட்டத்தில் சம்பா நெற் பயிருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள காப்பீட்டுத் தொகை ஒரு ஹெக்டேருக்கு 6,440 ரூபாய் மட்டுமே. இதற்கான காப்பீட்டுக் கட்டணம் 3,349 ரூபாய் ஆகும். இதில், மத்திய, மாநில அரசுகள் தலா 1,256 ரூபாய் செலுத்த வேண்டும். மீதமுள்ள 837 ரூபாயை விவசாயி செலுத்த வேண்டும். இழப்பீடு ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகை முழுவதையும் காப்பீட்டு நிறுவனமே அளிக்கும். பயிர் இழப்பு ஏற்படும் நேரங்களில் தனது பங்காக வழங்கப்பட வேண்டிய தொகையை குறைக்கும் வகையில், இத்தகைய ஒரு பயனற்ற காப்பீட்டுத் திட்டத்தை முந்தைய மத்திய கூட்டணி அரசு அறிமுகம் செய்தது.

    இந்தப் புதிய திட்டம், 'குறைந்த இழப்பீடு, அதிக கட்டணம்' என்பதை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட திட்டம் என்பதை உணர்ந்த நான், உடனடியாக அப்போதைய பாரதப் பிரதமருக்கு, கடந்த ஜனவரி மாதம் 5-ம் தேதி கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில், ஏற்கெனவே இயற்கைச் சீற்றங்களால் இன்னலுற்று கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளுக்கு மேலும் கூடுதல் சுமையைக் கொடுக்கக் கூடியதாக புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் உள்ளது என்றும்; இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டம் வேளாண் தொழிலை கடுமையாக பாதிக்கும் என்றும்; இந்த புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய விவசாயிகள் முன்வருவது சந்தேகமே என்றும் தெரிவித்து; இந்தச் சுமையை விவசாயிகள் மேல் திணிக்காமல், இரண்டு விழுக்காட்டிற்கு மேல் உள்ள காப்பீட்டுக் கட்டணத்தை மத்திய அரசும், மாநில அரசும் சமமாக பகிர்ந்து கொள்ளலாம் என்றும் ஆலோசனை தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன். ஆனால், முந்தைய மத்திய அரசு இந்தக் கருத்துருவை நிராகரித்துவிட்டது.

    'குறைந்த இழப்பீடு, அதிகக் கட்டணம்' என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட புதிய காப்பீட்டுத் திட்டத்திற்கு பதிலாக, பழைய காப்பீட்டுத் திட்டமான தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள விவசாயப் பிரதிநிதிகள் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து தற்போது மீண்டும் மத்திய அரசுக்கு ஒரு கருத்துருவை எனது தலைமையிலான அரசு அனுப்பி, அதன் அடிப்படையில், இந்த ஆண்டிற்கு மட்டும் பழைய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    எனவே, வேளாண் பெருங்குடி மக்களின் இன்னலைக் கருத்தில் கொண்டு, 2014 ஆம் ஆண்டு சம்பா, தாளடி, பிசானம் பருவத்தில் பயிரிடப்படும் நெல் மற்றும் ரபி பருவத்தில் பயிரிடப்படும் இதர பயிர்களுக்கு புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டமான தேசிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்குப் பதிலாக, பழைய பயிர்க் காப்பீட்டுத் திட்டமான தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்."
    Sep 20,2014 01:25 pm
    Jayalalithaa
    Statement of the Honble Chief Minister on release of water from Veeranam Lake fo...
    Statement of the Honble Chief Minister on release of water from Veeranam Lake for Irrigation - 19.9.2014
    *******************************************************************************

    "கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள பாசன பகுதிகளுக்கு சாகுபடிக்காக கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து சாகுபடிக்காக 21.9.2014 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

    இதனால், கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 1,31,903 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்."
    Sep 19,2014 06:39 pm
    Jayalalithaa
    Condolence message from the Honble Chief Minister on the sudden demise of the Ma...
    Condolence message from the Honble Chief Minister on the sudden demise of the Mandolin U Srinivas - 19.9.2014
    *******************************************************************************

    "பிரபல கர்நாடக இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ், உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

    மாண்டலின் என்ற இசைக் கருவியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திய பெருமைக்குரியவர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ். இசைக் குடும்பத்தில் பிறந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ் தன்னுடைய மாண்டலின் இசைக் கருவி மூலம் பாடல்களை ஒலிக்கச் செய்து, இசை ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்.

    மத்திய அரசின் “பத்மஸ்ரீ”, “சங்கீத ரத்னா” உள்பட பல விருதுகளைப் பெற்றவர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் அவர்கள்.

    மாண்டலின் ஸ்ரீனிவாஸ் மறைவு கர்நாடக இசைத் துறைக்கு மிகப் பெரிய இழப்பாகும். இவர் விட்டுச் சென்ற இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது.

    மாண்டலின் ஸ்ரீனிவாசை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்."
    Sep 19,2014 06:31 pm
    Jayalalithaa
    Statement of the Honble Chief Minister on the circular of UGC on Hindi Language...
    Statement of the Honble Chief Minister on the circular of UGC on Hindi Language - 18.9.2014
    *******************************************************************************

    "இந்தி மொழியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி, இந்தி மொழியை மத்திய அரசு திணிப்பதாக தி.மு.க. சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் . வைகோ மற்றும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் குற்றம்சாட்டி, இந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்தச் சுற்றறிக்கை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு மட்டும் 16.9.2014 அன்று கிடைக்கப் பெற்றுள்ளது.

    இந்தச் சுற்றறிக்கையைப் படித்துப் பார்க்கும் போது, அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் செயல் அமைப்பான கேந்திரிய இந்தி சமிதியின் 30-வது கூட்டம் 28.7.2011 அன்று அன்றைய பாரதப் பிரதமர் தலைமையில் நடைபெற்றதும், அந்தக் கூட்ட நடவடிக்கை குறிப்பின்படி, பட்டப் படிப்பில் ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் ஒரு முதன்மைப் பாடமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும்; சட்டம் மற்றும் வணிகவியல் பட்டப் படிப்பு பயில்வோருக்கு கட்டாயமாக ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும் என்று இருப்பது போல், இந்தியும் கற்பிக்கப்பட வேண்டும் என்பதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்கள் குறித்த அறிக்கையை பல்கலைக்கழகங்களிடம் பல்கலைக்கழக மானியக் குழு கோரியுள்ளதும் தெரிய வருகிறது.

    28.7.2011 அன்று நடைபெற்ற கூட்டத்தில், குஜராத் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் ஆங்கிலம் அல்லது இந்தி படித்து பட்டம் பெறுகின்றனர் என்றும், இதன் காரணமாக மத்திய அரசு அலுவலகங்களின் செயல்பாட்டிற்கு தேவையான மொழி பெயர்க்கும் திறன் அவர்களுக்கு ஏற்படாது என்றும் தெரிவித்து; குஜராத்தில் பயிலும் மாணவ, மாணவியர் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டும் படிப்பதை பல்கலைக்கழக மானியக் குழு உறுதி செய்ய வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவுரைகளின்படி, சட்டம் மற்றும் வணிகவியல் பட்டப் படிப்புகளில் ஆங்கிலம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது போல், இந்தியும் கற்பிக்கப்பட வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.

    இதிலிருந்து, இந்தி மொழி திணிக்கும் முயற்சிக்கு அடிப்படைக் காரணம், அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் செயல் அமைப்பான கேந்திரிய இந்தி சமிதி 28.7.2011 அன்று எடுத்த முடிவுகள் தான் என்பது தெரிய வருகிறது. அப்போது மத்தியிலே ஆட்சியில் இருந்தது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. அந்த கூட்டணி அரசிலே அங்கம் வகித்த கட்சி தி.மு.க. இப்படிப்பட்ட ஒரு முடிவை முந்தைய மத்திய அரசு எடுத்த போது வாய் திறக்காத தி.மு.க. தலைவர் . கருணாநிதி, தற்போது டி.கே.எஸ். இளங்கோவன் மூலம் பெயரளவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அப்போது, "இந்தி மொழி" பற்றி கூறினால் "கனிமொழி" ஜாமீனில் வெளிவர முடியாது என்று பயந்து வாய்மூடி மவுனியாக இருந்தவர், இன்று இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இருப்பது தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாட்டைத் தான் எடுத்துக் காட்டுகிறது. இதிலிருந்து, கனிமொழிக்காக தமிழ் மொழியை . கருணாநிதி அடமானம் வைத்தது அம்பலமாகி உள்ளது.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில், இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்படக் கூடாது என்பதிலும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை எதிர்த்து முறியடிப்பதிலும் உறுதியாக உள்ளது.

    1963 ஆம் ஆண்டைய அலுவல் மொழிகள் சட்டத்தில், இந்தி மொழி பேசாத மாநிலங்களின் மீது இந்தி மொழியை திணிக்கக் கூடாது என்று தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. இந்தச் சட்டத்தின் 3-வது பிரிவில், இந்தியை அலுவல் மொழியாக பின்பற்றாத மாநிலங்களைப் பொறுத்த வரையில், மத்திய - மாநில அரசுகளுக்கிடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கில மொழியில் தான் இருக்க வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்தச் சட்டத்தின்படி வகுக்கப்பட்ட 1976 ஆம் ஆண்டைய அலுவல் மொழிகள் (மத்திய அரசின் அலுவலகப் பயன்பாடு) விதிகளின்படி, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் மற்றும் சண்டிகர், டாமன், டையூ, தாத்ரா மற்றும் நகர்ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்கள் "மண்டலம் B" என வகைப்பாடு செய்யப்பட்டுள்ளன. "மண்டலம் B"-ன் கீழ் வரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடனான மத்திய அரசின் தகவல் பரிமாற்றம் சாதாரணமாக இந்தி மொழியில் இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலத்தில் அனுப்பப்பட்டால் அத்துடன் இந்தி மொழி பெயர்ப்பும் அனுப்பப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், தமிழ்நாடு மற்றும் சில மாநிலங்கள் "மண்டலம் C" என வகைப்பாடு செய்யப்பட்டுள்ளன. "மண்டலம் C"-ன் கீழ் வரும் மாநிலங்களுடனான தகவல் பரிமாற்றம் ஆங்கிலத்தில் மட்டுமே இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    எனவே, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு, பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்தச் சுற்றறிக்கை அறவே பொருந்தாது.

    தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை நான் வலியுறுத்திக் கொண்டிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில்; ஆங்கிலத்துடன் இந்தியையும் முதன்மை பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்றும்; சட்டம் மற்றும் வணிகவியல் பட்டப் படிப்புகளில் ஆங்கிலம் கற்பிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது போல், இந்தியும் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு கேட்டுக் கொள்வது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று என்பதோடு மட்டுமல்லாமல், சட்டத்திற்கும் புறம்பானது ஆகும்.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் அல்லது இதர மொழிகள் முதல் பகுதியாகவும், ஆங்கிலம் இரண்டாம் பகுதியாகவும், சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுகள் மூன்றாம் பகுதியாகவும் தொடர்ந்து இருக்கும் என்பதையும்; 28.7.2011 அன்று நடைபெற்ற கேந்திரிய இந்தி சமிதி கூட்ட முடிவுகள் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தாது என்பதையும் பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அறிவுரை வழங்க தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
    Sep 18,2014 06:09 pm
    Jayalalithaa
    Arignar Anna 106th Birthday Celebrations - Statement of Honble CM and ADMK Supre...
    Arignar Anna 106th Birthday Celebrations - Statement of Honble CM and ADMK Supremo Selvi J Jayalalithaa - 14.9.2014
    ******************************************************************************

    "தமிழ் மக்களின் பல்லாயிரம் ஆண்டு வரலாற்றில் குன்றாப் புகழுடைய மனிதராக நிலைத்து நிற்கும் மகத்தான தலைவராம் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 106-வது பிறந்த நாள் என்னும் மகிழ்ச்சியான இந்தத் தருணத்தில், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய உங்கள் அனைவரையும் இந்த மடல் வழியாக சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

    உலக மொழிகளில் மிகவும் தொன்மை வாய்ந்த மொழி நம் தமிழ் மொழி. தமிழ்ச் சமூகம் உலகின் மற்ற மானுட குழுக்களுக்கு வழிகாட்டியாகவும், எடுத்துக் காட்டாகவும் வாழுகின்ற வாய்ப்பினைப் பெற்ற சமூகம். இலக்கியம், இலக்கணம், அறிவியல் கருத்துகள், நவீன சிந்தனைகள், புரட்சி கரமான சமூகப் பார்வை, எளியோருக்கும், நலிவடைந்தோருக்கும் உயர்வையும், சம வாய்ப்பையும் தர வேண்டும் என்ற அறநெறி ஆகியவற்றை தமிழ்ச் சமூகம் பல்லாயிரம் ஆண்டுகளாக தன் வாழ்க்கை முறையாகக் கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறது.

    இத்தகைய புகழுக்குரிய உயர்ந்த நம் இனத்தில் பெருமைக்குரிய பிறப்பாக வந்து தோன்றியவர்தான் பேரறிஞர் அண்ணா. பல்வேறு சிறப்புகளையும் தனித் தன்மைகளையும் கொண்ட தமிழ்ச் சமூகம் காலப்போக்கில் பல வகைகளிலும் பின்தங்கி அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக அமைப்பு ரீதியாகவும் பெரிதும் நலிவுற்ற சமூகமாக மாறிக் கிடப்பதைக் கண்டு மனம் வருந்தினார் நம் பேரறிஞர் அண்ணா.

    இந்த நிலையை மாற்றிட வேண்டும்; தமிழர்கள் இழந்த புகழை ஈட்டிட வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்திற்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்து அதற்கான பாதையாகவும், வழிகாட்டியாகவும், தந்தை பெரியாரின் நெறிகளை ஏற்று அதன் வழி நடை போட்டார் பேரறிஞர் அண்ணா. விடுதலை பெற்ற இந்தியாவில் மாற்றங்களையும், புரட்சிகளையும் தேர்தல் வழியாக வன்முறை இன்றி செய்து முடிக்க முடியும் என்ற அசைக்க முடியாத ஜனநாயக உணர்வுகளைக் கொண்ட பேரறிஞர் அண்ணா, கொட்டும் மழை யில் மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தொடங்கினார்.

    உயர்ந்த சிந்தனைகளும், சமூக சமத்துவத்தின் மீது நம்பிக்கையும் கொண்ட மனிதாபிமானம் மிக்க பல தலைவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையை ஏற்று அவர் கண்ட இயக்கத்தை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்த்து வந்தனர். அண்ணாவின் இயக்கம் மிகக் குறுகிய காலத்தில் மக்களின் மனதில் நிரந்தர இடம் பெற்றது. ‘இது வரலாற்றில் ஒரு புதுமை!’ என்று எல்லோரும் வியக்கும் வகையில் 1967–ல் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றது. பேரறிஞர் அண்ணாவின் அரசியல் வெற்றி ஒவ்வொன்றிலும் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் கொள்கை மாறா உழைப்பும், கொண்டதையெல்லாம் அள்ளித்தரும் கொடை உள்ளமும் பெரும் பங்கு வகித்தன.

    அண்ணாவின் மறைவிற்குப் பிறகு புரட்சித் தலைவரின் இரக்க சிந்தனை, பழகியதால் ஏற்பட்ட பரிதாபம், கெஞ்சி நிற்பவர்க்கு இல்லை என்று சொல்ல முடியாத தெய்வ குணம் காரணமாக ஒரு தீய சக்தி அண்ணாவின் இயக்கத்தைக் கைப்பற்றியது; முதலமைச்சர் பதவிக்கும் வந்தது. அந்தத் தீய சக்தி எத்தகைய தீய குணங்கள் நிறைந்தது என்பதை அதனுடைய செயல்களே உலகிற்கு உணர்த்தும் நிலையையும், ‘விதைத்ததை அறுக்காமல் விளையாட்டு முடிவதில்லை’ என்ற அடிப்படை பெளதீக உண்மையையும் வெளிக்காட்டும் வகையில், இன்று அந்தத் தீய சக்தி அரசியல் சதுரங்கத்தில் தப்பிக்க வழியில்லாமல் மாட்டிக் கொண்டிருப்பதை உலகமே பார்த்து பரிதாபத்தோடு சிரிக்கிறது.

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மேற்கொண்ட பெருமுயற்சியின் காரணமாக தீய சக்தியின் பிடியில் இருந்து அண்ணாவின் இயக்கம் காப்பாற்றப்பட்டது. தமிழ் மக்களின் உயர்வுக்காகவும், தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும் உருவான திராவிட இயக்கம் ‘அ.தி.மு.க.’ என்ற தன்னலமற்ற மாபெரும் மக்கள் இயக்கமாக நாட்டு மக்கள் நெஞ்சில் இடம் பெற்றிருக்கிறது.

    பேரறிஞர் அண்ணாவின் அறிவு, ஆற்றல், உழைப்பு, மனிதாபிமானம், ஜனநாயகப் பண்பு, சமூக நீதிக்கான வேட்கை ஆகியவற்றின் மீது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வழியில் நடைபோடும் உங்கள் அன்புச் சகோதரியாகிய நான், பேரறிஞர் அண்ணாவின் பன்முக ஆற்றலைக் கண்டு பெரிதும் வியந்திருக்கிறேன். தமிழ்நாட்டிற்கு சில காலம் மட்டுமே முதலமைச்சராகப் பணியாற்றிய போதும், பேரறிஞர் அண்ணா அந்தக் குறுகிய காலத்தில் மக்களுக்கு செய்திட்ட சாதனைகளை எனக்கு ஏற்ற வழிகாட்டும் நெறிகளாகக் கொள்கிறேன்.

    பேரறிஞர் அண்ணாவின் கொள்கை விளக்கப் பேரிகையாக விளங்கியது ‘காஞ்சி’ என்னும் இதழ். அந்த இதழின் வளர்ச்சிக்கென நிதி திரட்ட எனது ‘காவிரி தந்த கலைச்செல்வி’ நாட்டிய நாடக நிகழ்ச்சியை நடத்தினேன். இந்த நிகழ்ச்சிக்கும், பின்னர் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் நடைபெற்ற எனது ‘காவிரி தந்த கலைச்செல்வி’ நாட்டிய நிகழ்ச்சிக்கும் அன்றைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா தலைமை ஏற்று நிகழ்ச்சியை முழுமையாகக் கண்டு களித்ததோடு, என்னைப் பற்றி மிகுந்த அன்புடன் பாராட்டி உரையாற்றினார். அந்த இரண்டு உரைகளிலும் என்னைப் பற்றியும், நாட்டிய நிகழ்ச்சியின் தரம் பற்றியும் பல்கலை மேதையான பேரறிஞர் அண்ணா கூறிய புகழுரைகளை இன்றும் பசுமையாக நினைவில் கொண்டிருக்கிறேன்.

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நல்லாசியோடு, உங்கள் அன்புச் சகோதரி யாகிய நான் நடத்தி வரும் ஆட்சி, அண்ணா வழியிலான ஆட்சி. மக்கள் அனைவரும் அனைத்து நலன்களும், வளங்களும் பெற்று எந்நாளும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்பதற்காக என்னுடைய அரசு எண்ணற்ற மக்கள் நலப்பணிகளைத் தொடர்ந்து ஆற்றி வருகிறது.

    சட்டமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சி மன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் மற்றும் பல்வேறு இடைத் தேர்தல்களிலும் தமிழக மக்கள் அ.தி.மு.க.விற்கு அளித்து வரும் பேராதரவு, என்னுடைய ஆட்சிக்கு அளிக்கப்படும் நற்சான்றாக விளங்குகிறது. மக்களின் இந்த அன்பும், ஆதரவும் எந்நாளும் தொடர பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை மனதில் ஏற்று, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காட்டிய வழியில் மக்கள் தொண்டில் முழு மனதோடு பாடுபட, பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான இப்பொன்னாளில் சூளுரை ஏற்போம்.

    பேரறிஞர் அண்ணா நம் இயக்கத்தின் உயிர் மூச்சு; தமிழ்ச் சமூகத்தின் உயர்வுக்கென வாழ்ந்த மாபெரும் தலைவர்; என்றென்றைக்கும் நம் அனைவரது நன்றிக்கும், வணக்கத்திற்கும் உரியவர். இத்தகைய போற்றுதலுக்கும், சிறப்புக்கும் உரிய நம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான 15.9.2014 அன்று ஆங்காங்கே நிறுவப்பட்டிருக்கும் அண்ணாவுடைய திருவுருவச் சிலைகளுக்கும், வழக்கம்போல கழக உடன்பிறப்புகள் தங்கள் பகுதிகளில் நிறுவ இருக்கும் பேரறிஞர் அண்ணா வின் படங்களுக்கும் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாகக் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறேன்."
    Sep 14,2014 08:22 am
    Jayalalithaa
    அ. தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை அறிவிப்பு - 13.9.2014 *************...
    அ. தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை அறிவிப்பு - 13.9.2014
    **********************************************************************************

    "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய அறிவிப்பிற்கு இணங்க, 'பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 106-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்' 23.9.2014 முதல் 25.9.2014 வரை மூன்று நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

    பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள் மற்றும் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

    மாவட்டக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழக நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் தொடர்புகொண்டு, பேரறிஞர் அண்ணா அவர்களுடைய பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விவரங்களை தலைமைக் கழகத்திற்கும், கழக நாளேடான `டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.' நாளிதழுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

    அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் பேசுவோர் விவரம் -

    23–ந்தேதி செவ்வாய்கிழமை

    இ. மதுசூதனன் (அவைத் தலைவர்)– பெரம்பூர்

    சி. பொன்னையன் (அமைப்புச் செயலாளர்) – சோளிங்கர் கிழக்கு

    அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (பொருளாளர்)– திருப்பூர்

    டாக்டர் பி.எச். பாண்டியன் (அமைப்புச் செயலாளர்) – துறைமுகம்

    அ. தமிழ்மகன் உசேன் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர், தமிழ் நாடு வக்ப் வாரிய தலைவர் ) – ஆலந்தூர்

    விசாலாட்சி நெடுஞ்செழியன் (அமைப்புச் செயலாளர்) – குன்றத்தூர்

    ஈ.வெ.கி. சுலோச்சனா சம்பத் (அமைப்புச் செயலாளர்) – வளசரவாக்கம்

    மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு. தம்பிதுரை (கொள்கைப் பரப்புச் செயலாளர்), அமைச்சர் வி. செந்தில்பாலாஜி – கரூர்

    துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஏ. ஜெயராமன் – பல்லடம்

    செ. செம்மலை (அமைப்புச் செயலாளர்) – எழும்பூர்

    துரை கோவிந்தராஜன் (விவசாயப் பிரிவுத் தலைவர்) – பேராவூரணி

    அமைச்சர் பா.வளர்மதி– மதுரவாயல்

    அமைச்சர் பி. பழனியப்பன் – தருமபுரி

    கு. தங்கமுத்து (விவசாயப் பிரிவுச் செயலாளர்) – சிதம்பரம்

    தாடி ம. ராசு (அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர்) – ஆம்பூர்

    ஆர். சின்னசாமி, எம்.எல்.ஏ. (அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர்) – பீளமேடு

    அ. அன்வர்ராஜா, எம்.பி., (சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர்) அமைச்சர் எஸ். சுந்தரராஜ் – ராமநாதபுரம்

    ஆர்.பி. உதயகுமார் (ஜெயலலிதா பேரவைச் செயலாளர்) – வேளச்சேரி

    அமைச்சர் எஸ். கோகுல இந்திரா (அமைப்புச் செயலாளர்), நடிகர் எம்.எஸ். அருள்மணி – காஞ்சிபுரம்

    ஏ.கே. செல்வராஜ், எம்.பி. (அமைப்புச் செயலாளர்) – கேரள மாநிலம்

    பி.வேணுகோபால், எம்.பி. (மருத்துவ அணிச் செயலாளர்) – பூவிருந்தவல்லி

    ஏ. நவநீதகிருஷ்ணன், எம்.பி., (வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்) – ஆந்திரா மாநிலம்

    ஆர். கமலக்கண்ணன் (அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்), ஆர். வனரோஜா, எம்.பி.– தண்டராம்பட்டு

    நாஞ்சில் சம்பத் (கொள்கை பரப்பு துணைச் செயலாளர்) – திருப்போரூர்

    எல். சசிகலா புஷ்பா, எம்.பி., (மகளிர் அணிச் செயலாளர்), ஜெ. ஜெயவர்தன், எம்.பி., திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் – பரங்கிமலை கிழக்கு

    ப. குமார், எம்.பி. (பாசறை செயலாளர்) – ஈரோடு

    எஸ்.ஆர். விஜயகுமார், எம்.பி., (மாணவர் அணிச் செயலாளர்) –செங்கல்பட்டு

    ஏ. அலெக்சாண்டர் (எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்)– ஆர்.கே. நகர்

    ஆதிராஜாராம் (அமைப்புச் செயலாளர்) – மயிலாப்பூர்

    அமைச்சர்கள் நத்தம் இரா. விசுவநாதன், எஸ்.பி. சண்முகநாதன் – தூத்துக்குடி

    அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் – தென்காசி

    அமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி, பரிதி இளம்வழுதி (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) – விருதுநகர்

    அமைச்சர் ப. மோகன், நடிகர் வையாபுரி – கடலூர்

    அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, அ. மில்லர் (சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர்) – தேனி-அல்லி நகரம்

    அமைச்சர் ஆர். காமராஜ், நடிகர் ஆனந்தராஜ்– திருவாரூர் நகரம்

    அமைச்சர் பி. தங்கமணி – கிருஷ்ணகிரி நகரம்

    அமைச்சர் பி.வி. ரமணா– சோழவரம்

    அமைச்சர் எம்.சி. சம்பத் – சின்ன சேலம் ஒன்றியம்

    அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, நடிகர் தியாகு – திருப்பத்தூர் (வேலூர்)

    அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, நிர்மலா பெரியசாமி–ஊட்டி

    அமைச்சர் டி.கே.எம். சின்னையா, நடிகர் ஜெயகோவிந்தன் – வேலூர்

    அமைச்சர் பி. செந்தூர்பாண்டியன் – ராஜபாளையம்

    அமைச்சர் ந. சுப்ரமணியன், நடிகை கே. வாசுகி – குண்டாண்டார்கோவில் ஒன்றியம்

    அமைச்சர் கே.ஏ. ஜெயபால்–நாகப்பட்டினம்

    அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியன், நடிகர் மனோஜ்குமார் – விழுப்புரம்

    கே.டி. ராஜேந்திரபாலாஜி

    அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, அனிதா குப்புசாமி – திருத்தங்கல்

    அமைச்சர் கே.சி. வீரமணி –திருவண்ணாமலை

    அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் – பொள்ளாச்சி நகரம்

    அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் – நாமக்கல்

    அமைச்சர் டி.பி. பூனாட்சி –குளித்தலை ஒன்றியம்

    அமைச்சர் எஸ். அப்துல் ரஹீம், ஜே.சி.டி. பிரபாகர், எம்.எல்.ஏ. (சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர்), நடிகர் பொன்னம்பலம் – ஆவடி

    அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், நடிகர் ராமராஜன் – புதுக்கோட்டை

    எஸ்.டி.கே. ஜக்கையன் (தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி), நடிகை பபிதா ஜெஸ்டி – ஆனையூர்

    வரகூர் அ. அருணாசலம் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றப் பொருளாளர்), பி.ஆர். சுந்தரம், எம்.பி. – ராசிபுரம்

    சதன் என். பிரபாகர் (எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்) – மதுரை வடக்கு 1-ம் பகுதி

    சக்தி கோதண்டம் (மகளிர் அணி இணைச் செயலாளர்) –திருச்செந்தூர்

    சி.ஆர். சரஸ்வதி (மகளிர் அணி துணைச் செயலாளர்) – குடியாத்தம்

    டாக்டர் சோலை இரா. கண்ணன் (மாணவர் அணி துணைச் செயலாளர்) – மேலப்பாளையம்

    எஸ். கோவிந்தராஜ் (அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைத் தலைவர்) நடிகர் பாலு ஆனந்த் – பள்ளிபாளையம்

    க. சிங்காரவேல் (அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைத் தலைவர்) – ரெட்டியார்சத்திரம்

    கே. பாண்டுரங்க (அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைச் செயலாளர்) – ராணிப்பேட்டை

    டாக்டர் எம்.எஸ். வடிவேல் (மருத்துவ அணிப் பொருளாளர்) – திருமங்கலம்

    பி.எம். செங்குட்டுவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) – பாபநாசம்

    கே.என். ராமச்சந்திரன், எம்.பி., திரைப்பட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் – பல்லாவரம்

    திருத்தணி கோ. அரி, எம்.பி.–அரக்கோணம்

    ஏ.பி. நாகராஜன், எம்.பி. –கணபதி பகுதி

    வசந்தி முருகேசன், எம்.பி.–கடையநல்லூர்

    டாக்டர் வா. மைத்ரேயன், எம்.பி.–மஹாராஷ்டிர மாநிலம்

    பி.எச். மனோஜ் பாண்டியன், எம்.பி. – புதுடெல்லி மாநிலம்

    ரபி பெர்னார்ட், எம்.பி.– அந்தமான் மாநிலம்

    கே.ஆர். அர்ச்சுனன், எம்.பி. –கர்நாடக மாநிலம்

    விஜிலா சத்தியானந்த், எம்.பி., நடிகை குயிலி – புதுச்சேரி மாநிலம்

    சைதை சா. துரைசாமி (சென்னை மாநகராட்சி மேயர்) – ராயபுரம்

    வி.வி. ராஜன்செல்லப்பா (மதுரை மாநகராட்சி மேயர்) – மதுரை மத்திய 2-ம் பகுதி

    உடுமலை கே. ராதாகிருஷ்ணன் (தலைவர், தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம்) – மலைக்கோட்டை

    டாக்டர் வைகைச்செல்வன், எம்.எல்.ஏ.– காரைக்குடி நகரம்

    ஜி.வி. மார்க்கண்டேயன், எம்.எல்.ஏ. – விளாத்திகுளம் ஒன்றியம்

    பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் (முன்னாள் அமைச்சர்) – உள்ளகரம்-புழுதிவாக்கம்

    அ.ம. பரமசிவம் (முன்னாள் அமைச்சர்) – ஆண்டிபட்டி

    ஆர். ஜீவானந்தம் (முன்னாள் அமைச்சர்) – குறிஞ்சிப்பாடி

    ப.வெ. தாமோதிரன் (முன்னாள் அமைச்சர்) பவானிசாகர்

    வ.து. நடராஜன் (முன்னாள் அமைச்சர்) – உசிலம்பட்டி ஒன்றியம்

    ப. அண்ணாவி (முன்னாள் அமைச்சர்) – அரியலூர் ஒன்றியம்

    எஸ். முத்துமணி (முன்னாள் மாநிலங்கள் அவை உறுப்பினர்) –மதுரை தெற்கு 3-ம் பகுதி

    திரைப்பட இயக்குநர் லியாகத் அலிகான் – உடுமலைப்பேட்டை

    நடிகர் சரவணன் – திருமங்கலம்

    திரைப்பட தயாரிப்பாளர் அ.செ. இப்ராகிம் ராவுத்தர் – செங்கம் ஒன்றியம்

    நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா – தஞ்சாவூர்

    நடிகர் கே.ஆர். சிங்கமுத்து – குனியமுத்தூர்

    நடிகை ஆர்த்தி –கொண்டலாம்பட்டி

    24–ந்தேதி புதன் கிழமை

    அமைப்புச் செயலாளர் சி. பொன்னையன் – அம்பத்தூர்

    அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (பொருளாளர்)– உக்கடம் மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு. தம்பிதுரை ( கொள்கை பரப்புச் செயலாளர்)– மணப்பாறை

    தமிழ்நாடு சட்டமன்ற பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஏ. ஜெயராமன் (தேர்தல் பிரிவுச் செயலாளர்) – கிணத்துக்கடவு

    அமைப்புச் செயலாளர் செ. செம்மலை, அமைச்சர் டி.கே.எம்.சின்னையா – தாம்பரம்

    துரை கோவிந்தராஜன் (விவசாயப் பிரிவுத் தலைவர்)– அறந்தாங்கி

    அமைச்சர் பா.வளர்மதி (இலக்கிய அணிச் செயலாளர்) – ஆயிரம்விளக்கு

    பி. பழனியப்பன் (தலைமை நிலையச் செயலாளர்), அமைச்சர் அனிதா குப்புசாமி –பழநி

    கு. தங்கமுத்து ( விவசாயப் பிரிவுச் செயலாளர்) – கள்ளக்குறிச்சி

    தாடி ம. ராசு, (அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர்) – ஓசூர்

    ஆர். சின்னசாமி, எம்.எல்.ஏ., (அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர்), சேலம் மாநகராட்சி மேயர் எஸ். சவுண்டப்பன் – அஸ்தம்பட்டி

    ஏ. ஜஸ்டின் செல்வராஜ் (சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர்) – முஞ்சிறை

    அ.அன்வர்ராஜா, எம்.பி., (சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர்) – பரமக்குடி நகரம்

    அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் (ஜெயலலிதா பேரவைச் செயலாளர்)– சாத்தூர்

    அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா (அமைப்புச் செயலாளர்)– அண்ணாநகர்

    ஏ.கே. செல்வராஜ்,எம்.பி., (அமைப்புச் செயலாளர்)– பவானி

    டாக்டர் பி. வேணுகோபால், எம்.பி., (மருத்துவ அணிச் செயலாளர்) – கும்மிடிப்பூண்டி

    கே.கே. கலைமணி (மீனவர் பிரிவுச் செயலாளர்)– சத்தியமங்கலம்

    எஸ். ஜெனிபர் சந்திரன் (மீனவர் பிரிவு இணைச் செயலாளர்) – அவனியா புரம்

    ஆர். கமலக்கண்ணன் (அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்) – வில்லிவாக்கம்

    நாஞ்சில் சம்பத் (கொள்கை பரப்பு துணைச் செயலாளர்) – பூவிருந்த வல்லி

    எல். சசிகலா புஷ்பா, எம்.பி., (மகளிர் அணிச் செயலாளர்) – தியாகராயநகர் பகுதி

    ப. குமார், எம்.பி., (இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர்) – ஜங்ஷன்

    எஸ்.ஆர். விஜயகுமார், எம்.பி., (மாணவர் அணிச் செயலாளர்)– சைதாப்பேட்டை

    வி. அலெக்சாண்டர் (எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்)– பரங்கிமலை மேற்கு

    நத்தம் இரா. விசுவநாதன்

    ஆதிராஜாராம் (அமைப்புச் செயலாளர்) – காட்டாங்கொளத்தூர்

    அஸ்பயர் கே. சுவாமிநாதன் (தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர்)– ஆற்காடு

    அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் (ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்) –கொடைக்கானல் நகரம்

    அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் (ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்) –கோவில்பட்டி

    அமைச்சர் ப. மோகன் ( விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர்) – உளுந்தூர்பேட்டை ஒன்றியம்

    அமைச்சர் செல்லூர் கே. ராஜூ (மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர்) – மதுரை வடக்கு

    அமைச்சர் ஆர். காமராஜ் (திருவாரூர் மாவட்டச் செயலாளர்) – அரியலூர்

    அமைச்சர் பி. தங்கமணி ( நாமக்கல் மாவட்டச் செயலாளர்)– நாமகிரிப்பேட்டை கிழக்கு

    –அமைச்சர் ஏ. செந்தில்பாலாஜி (கரூர் மாவட்டக் ச் செயலாளர்) – ஸ்ரீரங்கம்

    அமைச்சர் பி.வி. ரமணா (திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர்) – திருவள்ளூர்

    அமைச்சர் எம்.சி. சம்பத் ( கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர்)– பண்ருட்டி

    அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி ( திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர்) – கலசபாக்கம்

    அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ( கோவை புறநகர் மாவட்டச் செயலாளர்)– தொண்டாமுத்தூர்

    அமைச்சர் டாக்டர் எஸ். சுந்தரராஜ் – சிவகங்கை

    அமைச்சர் பி. செந்தூர்பாண்டியன் – திருநெல்வேலி

    அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் (தூத்துக்குடி மாவட்டச் செயலாளர்) – சங்கரன்கோவில்

    அமைச்சர் ந. சுப்ரமணியன் – லால்குடி

    அமைச்சர் கே.ஏ. ஜெயபால் (நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர்) – திருவிடைமருதூர்

    அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியன் (திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர்)– போளூர் ஒன்றியம்

    அமைச்சர் கே.சி. வீரமணி (வேலூர் புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர்)– ஜோலார்பேட்டை

    அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் (திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர்) – திருப்பூர் வடக்கு

    அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் (ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளர்)– சென்னிமலை

    அமைச்சர் டி.பி.பூனாட்சி – மணச்சநல்லூர் ஒன்றியம்

    அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் (புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர்)– பெரம்பலூர்

    எஸ்.டி.கே. ஜக்கையன் (தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி)– மதுரை தெற்கு

    வரகூர் அ. அருணாசலம் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றப் பொருளாளர்)– சேலம்

    திருப்பூர் மாநகராட்சி மேயர் ஏ. விசாலாட்சி (மகளிர் அணி துணைச் செயலாளர்) – திரு.வி.க. நகர்

    சி.ஆர். சரஸ்வதி (மகளிர் அணி துணைச் செயலாளர்) – சத்துவாச்சாரி நகரம்

    கே.எம். கலைச்செல்வி (மகளிர் அணி துணைச் செயலாளர்) – செய்யாறு

    எம்.டி. பாபு (மாணவர் அணி துணைச் செயலாளர்) –வீரப்பன்சத்திரம்

    பி. ராஜய்யன் (அண்ணா தொழிற்சங்கப் பேரவை இணைச் செயலாளர்) – பத்மநாபபுரம்

    ஆர். சங்கரலிங்கம் (அண்ணா தொழிற்சங்கப் பேரவை இணைச் செயலாளர்)– மதுரை கிழக்கு

    எம். அப்துல் அமீது (அண்ணா தொழிற்சங்கப் பேரவை பொருளாளர்) – பேரணாம்பட்டு

    சிந்தை ஏ.எம்.டி. இஸ்மாயில் (சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைத் தலைவர்) – நாகப்பட்டினம்

    எஸ்.எம். அப்துல் ஜலில் (சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர்)–திருவெறும்பூர்

    பூ. துரையரசன் (இலக்கிய அணி இணைச் செயலாளர்)– ராஜபாளையம்

    வெண்பாவூர் தேவராஜன் (மீனவர் பிரிவு இணைச் செயலாளர்) – குமராட்சி

    செம்மஞ்சேரி வி. குணசேகரன் (அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி துணைச் செயலாளர்)– அச்சிறுப்பாக்கம்

    ஆர். ராஜலட்சுமி, எம்.எல்.ஏ., (இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர்) – மதுராந்தகம்

    ஆர்.எஸ். முத்துசாமி (இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர்)– மருங்காபுரி

    ஆர்.கே. பாரதிமோகன், எம்.பி., – மயிலாடுதுறை

    இரா.கோபாலகிருஷ்ணன், எம்.பி., – மதுரை மத்தி

    கே. அசோக்குமார், எம்.பி., – வேப்பனப்பள்ளி

    எஸ். செல்வகுமார சின்னையன், எம்.
    Sep 13,2014 06:49 pm
    Jayalalithaa
    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அவர்கள் அறிவிப்பு -...
    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அவர்கள் அறிவிப்பு - 13.9.2014
    *******************************************************************************

    "பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 106ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 23.9.2014 முதல் 25.9.2014 வரை மூன்று நாட்கள் ‘பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 106ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்’ தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

    பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள் மற்றும் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்படுகிறது. கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மாவட்டக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழக நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் தொடர்புகொண்டு, பேரறிஞர் அண்ணாவுடைய பிறந்த நாள் விழா பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்."

    23–ந்தேதி நடைபெறும் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசுவோர் விவரம் –

    மதுசூதனன்–பெரம்பூர், பி.எச்.பாண்டியன்– துறைமுகம், தமிழ் மகன் உசேன்– ஆலந்தூர், விசாலாட்சி நெடுஞ்செழியன்–குன்றத்தூர் ஒன்றியம், சுலோசனா சம்பத்– வளசரவாக்கம், அமைச்சர் வளர்மதி–மதுரவாயல், அமைச்சர் உதயகுமார்– வேளச்சேரி, அமைச்சர் அப்துல்ரகீம்–ஆவடி, மேயர் சைதை துரைசாமி–ராயபுரம்.

    அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம்–திருப்பூர், பழனியப்பன்–தருமபுரி, நத்தம் விசுவநாதன்–தூத்துக் குடி, வைத்திலிங்கம்–தென் காசி, எடப்பாடி பழனிசாமி– விருதுநகர், செல்லூர் ராஜூ–தேனி, காமராஜ்– திருவாரூர்.

    பி.வி.ரமணா–சோழவரம் ஒன்றியம், அக்ரி கிருஷ்ண மூர்த்தி–திருப்பத்தூர், எஸ்.பி.வேலுமணி– ஊட்டி, சின்னைய்யா– வேலூர், செந்தூர் பாண்டியன்– ராஜபாளையம், முக்கூர் சுப்பிரமணியன்–விழுப் புரம், கே.சி.வீரமணி– திருவண்ணாமலை, ஆனந்தன்–பொள்ளாச்சி, ஜெயபால்–நாகப்பட்டினம், ராஜேந்திர பாலாஜி– திருத்தங்கல், விஜயபாஸ்கர்– புதுக்கோட்டை, தோப்பு வெங்கடாசலம்–நாமக்கல்.

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை– கரூர் நடிகை சி.ஆர்.சரஸ்வதி– குடியாத்தம், நடிகை, வெண்ணிற ஆடைநிர்மலா– தஞ்சை, மதுரைமேயர் ராஜன் செல்லப்பா–மத்திய மதுரை, சினிமா டைரக்டர் லியாகத் அலிகான்–உடுமலைப் பேட்டை, நடிகர் சரவணன்– திருமங்கலம், நடிகர் சிங்கமுத்து–குனியமுத்தூர், நடிகை ஆர்த்தி–கொண்டலம்பட்டி, பட தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர்–செங்கம் ஒன்றியம்.
    Sep 13,2014 07:18 am
    Jayalalithaa
    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அவர்கள் அறிவிப்பு -...
    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அவர்கள் அறிவிப்பு - 12.9.2014
    ****************

    "கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தை சேர்ந்த அத்திப்பட்டு ஊராட்சி தாடி சங்கர் இன்றுமுதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

    கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்."
    Sep 13,2014 07:13 am
    Jayalalithaa
    Text of the D.O. letter addressed by the Honble Chief Minister of Tamil Nadu to...
    Text of the D.O. letter addressed by the Honble Chief Minister of Tamil Nadu to Honble Union Minister of Finance, Corporate Affairs and Defence, New Delhi on crucial financial issues dated 10.9.2014 (Tamil version)
    *******************************************************************************

    "நான் உங்களை கடந்த 3-6-2014 அன்று சந்தித்த போது சரக்கு, சேவை வரி திருத்தம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் சில முக்கிய நிதி பிரச்சினைகள் பற்றி கடிதம் கொடுத்தது நினைவு இருக்கலாம். அதன் விளைவாக திருத்தம் செய்யப்பட்ட வரைவு மசோதா 20-6-2014 அன்று தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களுக்கு தரப்பட்டது.

    அதில் அறிவிக்கப்பட்ட சரக்குகள் சரக்கு சேவை வரி பட்டியலில் இருந்து அகற்றப்பட்டிருப்பதும், மதுபான வகைகள் சரக்கு சேவை வரி விதிப்புக்கு வெளியில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் 20-8-2014 அன்று நடந்த மாநில நிதி மந்திரிகள் கூட்டத்தில் சரக்குகள், சேவைகள் மீதான வரி விதிப்பின் தொடக்க அளவாக ரூ.10 லட்சம் என்று நிர்ணயிக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டதாக எனக்கு தெரிய வந்துள்ளது.

    இது தவிர சரக்கு, சேவை வரி மசோதாவின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்கள் பட்டியல் மத்திய - மாநில அரசுகளுக்கு பொதுவானதாக இருக்க வேண்டும் என்று கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. இதை மத்திய அரசு ஏற்று ஒத்துக்கொள்ளும் என்று நம்புகிறேன்.

    மேலும் அனைத்துப் பொருட்களுக்கும் எந்த தடையும் இல்லாமல் உள்ளூர் முக்கியத்துவத்தை பெறும் வகையில் விலக்கு அளிக்க, மாநில அரசுகளை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அது போல மாநிலத்துக்குள்ளும், மாநிலங்களுக்கு இடை யிலும் சரக்குகள், சேவைப் பணிகளில் ரூ.1.5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களிடம் மாநில அரசுகள் மட்டுமே வரிவிதிக்க வகை செய்ய வேண்டும். இதன் மூலம் தொழில் செய்பவர்கள் மீது மத்திய அரசும் கட்டுப்பாடு விதிக்கும் இரட்டை நிர்வாக முறையை தவிர்க்க முடியும்.

    பெட்ரோலியம் பொருட்களையும் சரக்கு, சேவை வரி விதிப்பின் கீழ் கொண்டு வர மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இது மாநில அரசுகளின் வருவாய் வளத்தை குறைத்து பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். பெட்ரோலியம் பொருட்கள் மீது மாநில அரசுகளும் ஏற்கனவே உள்ள வரி விதிப்பு விகிதத்தை தொடர லாம் என்பதை ஏற்க இய லாது. இந்த விஷயத்தில் மாநிலங்களுக்கு ஏற்படும் திடீர் வருமான இழப்பை தவிர்ப்பதற்காக 3 ஆண்டுகளுக்கு பெட்ரோலியம் பொருட்கள் மீது குறைந்த அளவில் வரி விதிக்கும் புதிய பரிந்துரை தமிழ்நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    மூன்று ஆண்டு காலத் தில் பெட்ரோலியம் பொருட்கள் மீதான வரி யில் இருந்து கிடைக்கும் வருவாய்க்கு பதில் மற்ற சேவை மற்றும் இறக்குமதி பொருட்கள் மீதான வரிவிதிப்பு மூலம் கிடைக்கும் என்பதற்கு எந்த உறுதியும், உத்தரவாதமும் இல்லை. மாநில அரசுகளின் வருவாய் ஏற்கனவே குறைவாக இருப்பதால் பெட்ரோல் மற்றும் பெட்ரோலியம் பொருட்கள், சரக்கு, சேவை வரி விதிப்பின் எல்லையில் இருந்து முழுமையாக வெளி யில் இருக்க வேண்டும் என்று மிகவும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

    தமிழ்நாட்டில் தற்போது புகையிலை மீது 14.5 சதவீத வரியும், புகையிலைப் பொருட்கள் மீது 20 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது. மக்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு, எல்லா மாநில அரசுகளையும் புகையிலைப் பொருட்கள் மீதான வாட் வரிவிதிப்பை அதிகரிக்க கூறியுள்ளது. என்றாலும் மாதிரி சட்டத் திருத்த மசோதாவில், மத்திய அரசுக்கு இணையாக மாநிலங்களும் புகையிலைப் பொருட்கள் மீது வரி விதிப்பது பற்றிய அம்சம் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. எனவே மத்திய அரசுக்கு இணையாக மாநிலங்களும் புகையிலைப் பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும் அதிகாரத்தை மாதிரி சட்டத் திருத்த மசோதாவில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

    சரக்கு, சேவை வரிகளின் தொடக்க அளவு, விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தான் மாநிலங்களுக்கு சேவைகளில் இருந்து கிடைக்கும் வரி வருவாயை மதிப்பீடு செய்வதாக உள்ளன. இந்த முக்கிய அம்சங்களை கவனத்தில் கொள்ளாமல் மாநிலம் வாரியான வரி வருவாயை துல்லியமாக கணக்கிட இயலாது.

    எனவே எந்த விதத்திலும் சரக்கு, சேவை வரிவிதிப்பை அதிக அளவில் நிர்ணயிக்க இயலாது. இது தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் குறைந்த வருவாய்க்கு வழி வகுத்துவிடும். இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு மிக அதிகமான வருவாய் இழப்பு ஏற்பட்டுவிடும். சரக்கு, சேவை வரி மசோதா அமல்படுத்தப்படும் பட்சத்தில் தமிழ்நாட்டுக்கு நிரந்தர வருவாய் இழப்பு ஏற்பட்டு விடும் என்பதை மறுக்க முடியாது. மேலும் பொழுது போக்குவரி, சொகுசு வரி, நுழைவு வரி உள்ளிட்ட வரி வருவாய்களிலும் தமிழ்நாட்டுக்கு கணிசமான இழப்பு ஏற்படும்.

    குஜராத் மாநில அரசு இது தொடர்பாக கொடுத்துள்ள பரிந்துரையில், அனைத்து வரி விதிப்புகளில் இருந்தும் 2 சதவீத கழிவை கோரியுள்ளது. இதுபற்றி நீங்கள் என்னிடம் 3-6-2014 அன்று உரையாடியபோது குறிப்பிட்டீர்கள். ஆனால் அனைத்து மாநிலங்களும் 4 சதவீதம் முழுவதையும் பெற அனுமதிக்கலாம் என்ற கருத்து எழுந்துள்ளது. இது மாநிலங்களுக்கு வழங்கும் இழப்பீடு தொகையையும் குறைப்பதாக இருக்கும்.

    சரக்கு, சேவை வரி மசோதாவை அமல்படுத்தும் முன்பு வருவாய் இழப்பு மற்றும் அதற்கான இழப்பீடு பற்றி தெளிவான நிலை எட்டப்பட வேண்டும். இழப்பீடு வழங்குவது பற்றி தனி சட்டப்பிரிவு தொடங்க மத்திய அரசு அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாக அறிகிறேன். வெறும் சட்டப்பிரிவு மட்டும் இதற்கு உதவாது.

    மாநிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு கொள்கை சட்டப்பூர்வமானதாக இருக்க வேண்டும். அது நேரத்துக்கு நேரம் மாறும் மத்திய அரசின் கொள்கை போல் இருக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் நான் எனது கருத்துக்களையும் தெரிவிக்க விரும்புகிறேன். சரக்கு, சேவை வரி சட்ட திருத்த மசோதாவை கொண்டு வரும் முன்பு அதுபற்றி மாநில அரசுகளுடன் கலந்து பேசி, மாநில அரசுகளின் கருத்தை அறிய வேண்டும். மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு, அதற்கான காலங்கள் தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படுத்தப்பட வேண்டும். இரட்டை நிர்வாகம், நிதி சுயாட்சி பற்றி தெளிவுபடுத்த வேண்டும். நிரந்தர வருவாய் இழப்பு ஏற்படுவதை சரி செய்ய வேண்டும்."
    Sep 11,2014 07:16 pm
    Jayalalithaa
    Text of the D.O. letter addressed by the Honble Chief Minister to the Honble Pri...
    Text of the D.O. letter addressed by the Honble Chief Minister to the Honble Prime Minister on fishermen issues dated 11.9.2014 (Tamil version)
    *******************************************************************************

    "தமிழக மீனவர்கள் பாக்ஜலசந்தியில் உள்ள தங்களது பாரம்பரியமான மீன் பிடிக்கும் பகுதிக்கு செல்லும் போதெல்லாம் இலங்கை கடற்படையினரால் தாக்கி கடத்தி செல்லப்படுவது பற்றி நீங்கள் கடந்த மே மாதம் பதவி ஏற்றதிலிருந்து பல தடவை உங்களுக்கு நான் கடிதம் எழுதி இருக்கிறேன்.

    சிறிது இடைவெளிக்கு பிறகு இலங்கை மீண்டும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தொடங்கி உள்ளது.கடைசியாக இது தொடர்பாக உங்களுக்கு நான் கடிதம் எழுதிய பிறகு தமிழக மீனவர்கள் கடத்தி செல்லப்படுவது 3 தடவை நடந்துள்ளது.

    கடந்த 10–ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து 6 படகுகளில் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க சென்ற 30 மீனவர்கள் கடத்தி தலைமன்னாருக்கு அழைத்து செல்லப்பட்டனர்.மற்றொரு சம்பவத்தில் நாகப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 23 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டுள்ளனர். 3–வது சம்பவமாக தஞ்சை மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றிருந்த 4 மீனவர்களை இன்று அதிகாலை இலங்கை கடற்படையினர் சட்ட விரோதமாக கைது செய்து காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று உள்ளனர்.

    இந்த பிரச்சினையில் உங்களது அரசு மேற்கொள்ளும் சரியான அணுகுமுறைக்கு நான் ஏற்கனவே பாராட்டி உள்ளேன். உங்களது அதிகாரிகள் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட நமது மீனவர்களை விடுவிக்கும் நடவடிக்கைகளில் சரியான முறையில் செயல்பட்டனர்.

    என்றாலும் இலங்கையின் அணுகுமுறை மாறவில்லை. அவர்கள் தொடர்ந்து கடுமையான போக்கையே கடைபிடிக்கிறார்கள். அப்பாவி தமிழக ஏழை மீனவர்களுக்கு நிரந்தரமாக பாதிப்பு ஏற்படும் வகையில் அவர்கள் தந்திரமாக செயல்படுகிறார்கள். இதுபற்றி நான் ஏற்கனவே உங்களுக்கு கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளேன். அவர்கள் தமிழக மீனவர்களை விடுவித்து இருந்தாலும் 64 படகுகளை இன்னும் விடுவிக்கவில்லை. இந்த போக்கு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக உள்ளது.

    இந்த விவகாரத்தில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் தீர்வு காண முடியும். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டை எடுத்தால்தான் இதற்கு தீர்வு கிடைக்கும். இந்த தகவலை உயர்மட்ட அளவில் கொண்டு சென்று பேச வேண்டியது அவசியமாகும். ஏனெனில் தமிழக மீனவர்களுக்கு எதிரான இந்த சதி திட்டம் இலங்கையின் உயர்மட்டத்தில் இருந்து தோன்றி இருப்பது தெரிய வந்துள்ளது. இன்று காலை வெளியான ஒரு நாளிதழில் இலங்கை அதிபர் கொடுத்துள்ள பேட்டியில் தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க மாட்டோம் என்று கூறி இருப்பதிலிருந்து இது உறுதி ஆகி இருக்கிறது.

    இந்த பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண நீண்ட கால முறையில் நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டியது உடனடி தேவை என்பதை உங்களுக்கு வலியுறுத்தி தெரிவித்துக் கொள்கிறேன்.

    கடந்த ஜூன் மாதம் 3–ந்தேதி நான் உங்களிடம் அளித்த மனுவில் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளேன். கச்சத்தீவு பிரச்சினைதான் இந்த விவகாரத்தில் முதன்மையாக உள்ளது. கச்சத்தீவு ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது நான் ஏற்கனவே சுட்டிக்காட்டி உள்ளேன்.

    இந்திய மீனவர்கள் கச்சத்தீவை சுற்றி உள்ள தங்களது பாரம்பரிய பகுதிகளில் மீன் பிடித்து வந்தனர். 1974 மற்றும் 1976 –ம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் காரணமாக கச்சத்தீவு சட்டவிரோதமாக தவறானபடி இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. அன்று முதல் தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே தங்கள் பாரம்பரிய பகுதியில் மீன் பிடிக்க முடியாதபடி தடுக்கப்பட்டு வருகிறார்கள்

    கச்சத்தீவு மீட்கக் கோரியும் அதை இந்தியாவின் ஒரு பகுதியாக அறிவிக்கக்கோரியும் 1991–ம் ஆண்டு முதலே வலியுறுத்தி வருகிறோம். தமிழக சட்டசபையிலும் தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். இது தவிர நான் தனிப்பட்ட முறையில் சுப்ரீம்கோர்ட்டில் 2008–ம் ஆண்டு கச்சத்தீவை மீட்க கோரி ஒரு வழக்கு தொடர்ந்தேன். 2011–ம் ஆண்டு தமிழக அரசும் இந்த வழக்கோடு இணைந்துள்ளது.

    எனவே 1974 மற்றும் 1976–ம் ஆண்டு இலங்கையுடன் போடப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்து கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய பகுதிகளில் மீன் பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மிகவும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

    தமிழக மீனவர்களின் பிரச்சினை தீர்வு காண்பதற்காக மற்றொரு கருத்தையும் நாங்கள் முன் வைத்துள்ளோம். ஆழ்கடல் பகுதிக்கு சென்று மீன் பிடிப்பதற்கு வசதியாக பெரிய படகுகள் வாங்குவதற்கு 50 சதவீதம் மானியம் அளிக்க கோரியுள்ளோம். இதற்கு மிகப்பெரிய நிதி உதவியும், தொழில்நுட்ப ஆலோசனையும் தேவை. ஆனால் மத்திய அரசு இந்த கருத்தை பற்றி எந்த ஒப்புதலையும் தரவில்லை.

    இது தவிர தமிழக மீனவர்களுக்கு ரூ.1,520 கோடி செலவில் ஒருங்கிணைந்த சிறப்பு தொகுப்பூதிய திட்டம் பற்றி உங்களிடம் கூறியது நினைவு இருக்கலாம். இதில் 975 கோடி படகுகள் வாங்குவதற்கும் ரூ.80 கோடி நடுக்கடலில் மீன் பதப்படுத்தும் பூங்கா அமைப்பதற்கும் தேவை என்று கூறி இருந்தோம். மீன்பிடி துறைமுகங்களை பராமரிக்க ரூ. 10 கோடியும், 32 ஆயிரம் நாட்டு படகுகளை எந்திர படகுகளாக மாற்றவும் கோரிக்கை விடுத்து இருந்தோம்.

    இலங்கையுடான தமிழக மீனவர்களை மீட்க சம்பந்தப்பட்ட மத்திய மந்திரி உடனடியாக நடவடிக்கை எடுக்க நீங்கள் உத்தரவிட வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்துகிறேன். ஏழை இந்திய மீனவர்கள் விஷயத்தில் இலங்கை கடற்படை தொடர்ந்து கடுமையாக நடந்து கொள்வதை இலங்கை அரசுடன் உயர்மட்ட அளவில் தொடர்பு கொண்டு பேச வேண்டும்.

    சமீபத்தில் டெல்லியில் நடந்த இந்தியா–இலங்கை மீனவர் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுப்படி பயனுள்ள தீர்வு காண வேண்டும். அதற்கு முன்பாக நிரந்தர தீர்வாக கச்சத்தீவு பிரச்சினையை நீண்ட கால பிரச்சினையாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பக்கத்து நாட்டுடனான பிரச்சினையை தீர்ப்பதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குறிப்பாக தமிழ்நாடு மீனவர் பிரச்சினையில் முன்னுரிமை அளித்து கடத்தப்பட்ட 78 மீனவர்களையும் 72 படகுகளையும் உடனடியாக மீட்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்."
    Sep 11,2014 07:04 pm
    Jayalalithaa
    Text of the DO letter addressed by the Honble Chief Minister to the Honble Prime...
    Text of the DO letter addressed by the Honble Chief Minister to the Honble Prime Minister of India on the Fishermen issues - 9.9.2014
    ******************************************************************************

    “This is to bring to your notice a new trend that has emerged in the Sri Lankan Navy’s tactics of harassing and intimidating Indian fishermen from Tamil Nadu fishing in their traditional fishing waters in the Palk Bay. Of late, the Sri Lankan Navy is targeting fishing boats stranded in mid-sea due to adverse weather conditions or mechanical failure as well as fishing boats that go to the rescue of such fellow fishermen in distress. These boats in distress and Indian fishermen on board are being apprehended and remanded to custody in Sri Lanka. This is a totally inhumane approach and completely against the ethics of maritime search and rescue operations.

    In the latest episode one mechanised fishing boat, belonging to Ramanathapuram District with 6 fishermen who set sail for fishing from Rameswaram fishing base on 8.9.2014 and was drifting due to a mechanical snag, has been apprehended by the Sri Lankan Navy on 9.9.2014. I learn that the boat and fishermen have been taken to Thalaimannar in Sri Lanka. Even in the last two instances on 1.9.2014 and 2.9.2014, 15 Indian fishermen were apprehended from boats which were in distress in mid-sea. Two boats sank and the boat which went to their rescue was captured. The 15 fishermen and one boat continue to be in Sri Lankan custody.

    I wish to reiterate that the Sri Lankan strategy of keeping the apprehended fishing boats of our fishermen in custody has snatched away the source of meagre livelihood of the poor fishermen and their families and is also fuelling despondency and great unrest amongst the fishermen. The 63 boats of Tamil Nadu fishermen in Sri Lankan custody are deteriorating due to lack of maintenance on a daily basis. With the North East Monsoon due to arrive shortly, these precariously berthed impounded boats will suffer irreparable damage if not released immediately.

    These incidents once again highlight the importance of retrieving the Katchatheevu islet. I had challenged the constitutionality of the Indo-Sri Lankan Agreements of 1974 and 1976 which unilaterally ceded the islet of Katchatheevu to Sri Lanka in the Hon’ble Supreme Court of India in W.P.(Civil) No. 561/2008, and sought to declare the 1974 and 1976 Agreements as null and void. The stand of the Government of Tamil Nadu is that Katchatheevu has always been a part of India, geographically, culturally and historically. The permanent solution to this vexatious issue lies in retrieving Indian sovereignty over Katchatheevu and in recognizing the rights of our fishermen to fish in their traditional fishing grounds of the Palk Bay.

    May I exhort you to immediately take up the matter with the Sri Lankan Government and arrange for the immediate release of all the 21 fishermen of Tamil Nadu now in Sri Lankan custody including the 6 fishermen apprehended today (9.9.2014) and the immediate release of the 64 impounded boats? I hope the Government of India under your leadership would find a decisive and permanent solution to this sensitive livelihood issue of our fishermen.“
    Sep 10,2014 07:38 pm
    Jayalalithaa
    அ.தி.மு.க. தலைமைக்கழக செய்தி குறிப்பு - 8.9.2014 *******************************...
    அ.தி.மு.க. தலைமைக்கழக செய்தி குறிப்பு - 8.9.2014
    ********************************************************

    பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 106-ஆவது பிறந்த நாளான 15.9.2014 திங்கட் கிழமை அன்று மாலை 4.45 மணி அளவில், கோவை மாவட்டம், அவினாசி ரோடு, எல்.ஐ.சி. கார்னரில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் , முதலமைச்சருமான ஜெயலலிதா அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி, பிறந்தநாள் விழா சிறப்பு மலரை வெளியிட உள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள்.

    அதே போல், 15.9.2014 அன்று காலை 10 மணி அளவில், சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு கழக அவைத் தலைவர் இ. மதுசூதனன் தலைமையில் கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள்.
    Sep 08,2014 08:36 pm
    Jayalalithaa
    அ.தி.மு.க. தலைமைக்கழக செய்தி குறிப்பு - 8.9.2014 *******************************...
    அ.தி.மு.க. தலைமைக்கழக செய்தி குறிப்பு - 8.9.2014
    ********************************************************

    உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் 18.9.2014 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுக்காக போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என 4.9.2014 அன்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் இ. புவனேஸ்வரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், கழகப் பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா, உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு தேர்தல் பிரச்சாரச் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்கள்.

    14.9.2014 - ஞாயிற்றுக்கிழமை : தூத்துக்குடி மாநகராட்சி

    15.9.2014 - திங்கட்கிழமை : கோயம்புத்தூர் மாநகராட்சி
    Sep 08,2014 08:33 pm
    Jayalalithaa
    Statement of the Honble Chief Minister on contribution of a sum of Rs. 5 crores...
    Statement of the Honble Chief Minister on contribution of a sum of Rs. 5 crores from the Chief Minister Public Relief Fund to the Government of Jammu and Kashmir - 8.9.2014
    *******************************************************************************

    "The unprecedented floods and landslides in Jammu & Kashmir have caused extensive damage to property and have taken a heavy toll of lives. This has also caused untold suffering to the people of the State and tourists visiting Jammu & Kashmir.

    The Government of India declared the flood situation in Jammu & Kashmir as a National-level disaster. The Army has evacuated more than 15,000 people from inundated areas across the State.

    On behalf of the State Government and people of Tamil Nadu, I convey my heartfelt condolences to the family members of all those who have lost their lives in the colossal tragedy. The State of Jammu & Kashmir is faced with the arduous task of ensuring immediate rescue, relief and rehabilitation measures for the flood ravaged areas and reconstruction of the devastated areas in the coming days. As a token of the support and solidarity of the Government and people of Tamil Nadu with the Government and people of Jammu & Kashmir in their hour of need, I have ordered the immediate contribution of a sum of Rs. 5 crores from the Chief Minister’s Public Relief Fund to the Government of Jammu & Kashmir.

    The Government of Tamil Nadu stands ready to render any other assistance as may be required by the Government of Jammu & Kashmir."
    Sep 08,2014 04:03 pm
    Jayalalithaa
    Honble Chief Minister Message on Water Release from Thirumoorthy Reservoir 6.9....
    Honble Chief Minister Message on Water Release from Thirumoorthy Reservoir 6.9.2014
    *******************************************************************************

    "திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள பரம்பிக்குளம் பிரதான கால்வாய் மற்றும் தளிவாய்க்கால் பாசன அமைப்பின் கீழ் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடக் கோரி, திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக் குழு மற்றும் தளி வாய்க்கால் வடபூதிநத்தம் பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருமூர்த்தி அணையிலிருந்து, பரம்பிக்குளம் பிரதான கால்வாய், உடுமலைப்பேட்டை கால்வாய், உயர்மட்டக் கால்வாய் மற்றும் தளிவாய்க்கால் பாசன அமைப்பின் கீழ் உள்ள விவசாய நிலங்களின் பாசனத்திற்காக 7.9.2014 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

    இதனால், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 96,987 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்."
    Sep 06,2014 06:59 am
    Jayalalithaa
    அ.தி.மு.க. தலைமைக்கழகம்- முதல்வரின் அறிவிப்பு 5.9.2014 ************************...
    அ.தி.மு.க. தலைமைக்கழகம்- முதல்வரின் அறிவிப்பு 5.9.2014
    ****************************************************************

    "திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் மாதவரம் வி.மூர்த்தி இன்று முதல்வர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

    திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் தெற்கு என செயல்பட்டு வரும் மாவட்ட கழக அமைப்புகள் இன்று முதல் கழக அமைப்பு ரீதியாக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், திருவள்ளூர் மேற்கு மாவட்டம் என கீழ்கண்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும்,

    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் - பொன்னேரி (தனி), மாதவரம், திருவொற்றியூர், அம்பத்தூர், மதுரவாயல் சட்டமன்ற தொகுதி,

    திருவள்ளூர் மேற்கு மாவட்டம் - கும்மிடிப்பூண்டி, பூவிருந்தவல்லி (தனி), ஆவடி, திருவள்ளூர், திருத்தணி சட்டமன்றத்தொகுதிகள் என செயல்படும்.

    இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகச்செயலாளர் பொறுப்பில் பொன்னேரி சட்டமன்ற தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பி.பலராமனும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகச்செயலாளர் பொறுப்பில் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.வி.ரமணா ஆகியோர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

    திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கு மாவட்ட அளவில் திருத்தி அமைக்கப்பட்ட கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.

    கழக அமைப்பு ரீதியாக தற்போது பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், சம்மந்தப்பட்ட மாவட்ட கழகச் செயலாளருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கழகப் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."
    Sep 05,2014 06:17 pm
    Jayalalithaa
    உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முதல்வர் 3 நாள் தேர்தல் பிரச்சாரம் அ. தி.மு.க. தலை...
    உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முதல்வர் 3 நாள் தேர்தல் பிரச்சாரம்

    அ. தி.மு.க. தலைமை கழக அறிக்கை - 4.9.2014
    ***************************************************************************



    உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் 18–9–2014 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா அவர்கள் 12–9–2014 முதல் 15–9–2014 வரை அண்ணா தி.மு.க.வின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு கழக வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    12–9–2014 வெள்ளிக்கிழமை – தூத்துக்குடி மாநகராட்சி

    14–9–2014 ஞாயிற்றுக்கிழமை – திருநெல்வேலி மாநகராட்சி

    15–9–2014 திங்கட்கிழமை – கோவை மாநகராட்சி
    Sep 04,2014 07:34 pm
    Jayalalithaa
    TEACHERS DAY Greetings Message of the Honble Chief Minister dated 4th September...
    TEACHERS DAY Greetings Message of the Honble Chief Minister dated 4th September 2014
    *******************************************************************************

    "ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி இந்தியக் குடியரசுத் தலைவராக உயர்ந்த தத்துவ மேதை டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 5-ம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    “நாட்டின் எதிர்காலம், பள்ளி வகுப்பறைகளிலேயே தீட்டப்படுகின்றது” என்று ஆசிரியப் பணியின் உயர்வினை டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் புகழ்ந்துரைத்துள்ளார். ஆசிரியப் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் கற்பிப்பதல்ல– நல்லொழுக்கத்தையும், சிறந்த பண்பையும், பொது அறிவையும், சமூக சிந்தனை களையும் மாணவச் சமுதாயத்திற்கு கற்பிப்பதாகும்.

    எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவச் செல்வங்களுக்கு தரமான கல்வியை அளிப்பதுடன், அவர்களை சிறந்த குடிமக்களாக உருவாக்கிடும் மகத்தான பணியினை ஆற்றி வரும் ஆசிரியர்களைப் பாராட்டி தமிழக அரசு ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்கிடும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 53,288 ஆசிரியர்களை பணி நியமனம் செய்துள்ளது.

    மேலும், 14,700 ஆசிரியர் பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட்டு வருகின்றன. ஆசிரியர் பெருமக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு திட்டங்களை எனது தலைமை யிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

    “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்று ஆசிரியர் பெருமக்களை பெருமைப்படுத்தி கூறுவதற் கேற்ப, மாணவர் சமுதாய மேம்பாட்டிற்கென இடை விடாது உழைத்திடும் ஆசிரியப் பெருமக்களின் கல்விப் பணி மேன்மேலும் சிறந்தோங்கிட வேண்டுமென வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்."
    Sep 04,2014 05:28 pm
    Jayalalithaa
    Statement of the Honble Chief Minister on release of water from Vaigai Dam for I...
    Statement of the Honble Chief Minister on release of water from Vaigai Dam for Irrigation dated 3rd September 2014
    ****************************************************************************

    "தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையிலிருந்து பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள இருபோக பாசன நிலங்களின் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள இருபோக பாசன நிலங்களின் முதல் போக பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து 5.9.2014 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

    இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை வட்டம் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி மற்றும் மதுரை வடக்கு வட்டங்களிலுள்ள 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்."
    Sep 03,2014 09:13 pm
    Jayalalithaa
    Text of the DO letter addressed by the Honble Chief Minister to the Honble Prime...
    Text of the DO letter addressed by the Honble Chief Minister to the Honble Prime Minister of India on the Fisherman Issue- dated 2.9.2014
    *****************************************************************************

    “This is to bring to your notice two more incidents of apprehension of Indian fishermen from Tamil Nadu by the Sri Lankan Navy while fishing in their traditional waters in the Palk Bay. In the first incident, 9 fishermen set sail in 2 fishing boats from Ramanathapuram District on 1.9.2014 for fishing and one mechanized fishing boat sank in the sea. The fishermen on board the boat that sank were rescued by the fishermen in the other boat. This boat which had rescued the fishermen who were in distress was apprehended by the Sri Lankan Navy along with all 9 fishermen and taken to Kankesanthurai and they have been remanded up to 16.9.2014.

    In another incident which took place on 2.9.2014, a fishing boat from Ramanathapuram District carrying 6 fishermen developed mechanical failure and sank. It is reported that these 6 fishermen have also been apprehended by the Sri Lankan Navy and taken to Karainagar Naval base, Sri Lanka.

    In the last two months, there have been 15 incidents of apprehensions wherein 319 fishermen from Tamil Nadu have been apprehended along with their 62 fishing boats. Due to the efforts of your Government all the 319 fishermen have been released. Unfortunately the 62 fishing boats continue to be in Sri Lankan custody.

    The Sri Lankan Government’s inhumane and cruel strategy of not releasing the boats of our fishermen is causing great loss of livelihood to the fishermen and their families. It is particularly distressing that a senior member of the Bharatiya Janata Party, Dr. Subramanian Swamy has, in a televised media interview on 1.9.2014, stated that it was he who had advised the Sri Lankan Government not to release the boats of the Tamil Nadu fishermen. This statement of Dr. Subramanian Swamy has given rise to resentment and angst not only amongst the fishermen community but also amongst the entire population of Tamil Nadu. I am confident that these are not the official views of your Party or of the Government of India.

    Without their sole means of earning their livelihood, these fishermen are in a despondent state. Denying our fishermen the right to peaceful fishing in their traditional waters of the Palk Bay, to which they have a historical claim, is fuelling a sense of frustration amongst them. The desperate fishermen are resorting to protests and strikes.

    This issue of non-release of 62 fishing boats of our fishermen was highlighted by the Secretary, Animal Husbandry, Dairying and Fisheries Department, Government of Tamil Nadu, in the recently held meeting of the India-Sri Lanka Joint Committee on Fisheries held on 29.8.2014 at New Delhi.

    I am confident that your Government will find suitable mechanisms to resolve this long pending fishing dispute between Tamil Nadu and Sri Lanka by retrieving Katchatheevu and restoring the traditional fishing rights of our fishermen in the Palk Bay. The alarmingly increasing frequency of apprehension of our fishermen by the Sri Lankan Navy is a matter of utmost concern for my Government. An immediate intervention at the highest level is sought to resolve this long standing issue.

    I urge you to take this up with the highest authorities of the Sri Lankan Government and ensure the immediate release of the 15 fishermen now apprehended and all the 63 boats in their custody.”
    Sep 03,2014 09:10 pm
    Jayalalithaa
    AIADMK Chief & Honble CM Announcement - 1.9.2014 *******************************...
    AIADMK Chief & Honble CM Announcement - 1.9.2014
    ***************************************************************

    "கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் தென்சென்னை தெற்கு மாவட்ட ஜெ.ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் என்.வைத்தியநான், பூவிருந்தவல்லி ஒன்றிய இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் டி.தியாகராஜன் ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகின்றனர்.

    கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன்."
    Sep 01,2014 07:51 pm
    Jayalalithaa
    AIADMK Chief & Honble CM Announcement - 30.8.2014 ******************************...
    AIADMK Chief & Honble CM Announcement - 30.8.2014
    *****************************************************************

    "கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென்சென்னை தெற்கு மாவட்ட ஜெ.ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் என்.வைத்தியநாதன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    இதேபோல் கழககத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், பூவிருந்தவல்லி ஒன்றிய இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை இணைச்செயலாளர் டி.தியாகராஜன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்."
    Aug 31,2014 06:09 pm
    Jayalalithaa
    Statement of the Honble Chief Minister on hike in Diesel price - 30.8.2014 *****...
    Statement of the Honble Chief Minister on hike in Diesel price - 30.8.2014
    *******************************************************************************

    "பணவீக்கம், அதிலும் குறிப்பாக உணவு பணவீக்கம் இன்னமும் எதிர்பார்த்த அளவு கட்டுப்படுத்தப்படாத சூழ்நிலையில், உணவு பணவீக்கம் உயர்வதற்கு காரணமான டீசல் விலையை நேற்று நள்ளிரவு முதல் எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தி இருப்பது கவலை அளிக்கிறது.

    முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் டீசல் விலை நிர்ணயக் கொள்கையே எண்ணெய் நிறுவனங்கள் இது போன்று விலை உயர்வை அறிவித்திருப்பதற்கு காரணம் ஆகும். சர்வதேச அளவில் டீசல் விலை குறைந்து கொண்டே வருகின்ற நிலையில், முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் டீசல் விலை நிர்ணயக் கொள்கையை சுட்டிக் காட்டி, அதன்படி டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகள் என்று எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி இருப்பது ஏழை மக்களை வருத்தமடையச் செய்துள்ளது.

    இந்த டீசல் விலை உயர்வு காரணமாக, உணவுப் பொருட்களை ஆங்காங்கே எடுத்துச் செல்லும் வேன், லாரி ஆகியவற்றின் கட்டணங்கள் உயரும். இந்த உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலையையும், காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையையும் உயர்த்த வழிவகுக்கும். இது மட்டுமல்லாமல், பிற வாகனங்களின் கட்டணங்களும் உயரக்கூடும். இதன் மூலம் தனியார் வாகனங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் மிகவும் பாதிக்கப்படுவர். சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த டீசல் விலை உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

    டீசல் விலை உயர்வு என்பது சங்கிலித் தொடர் போன்றது. அனைத்து பொருட்களின் விலை உயர்விற்கு முக்கிய காரணமாக விளங்குவது டீசல் விலை உயர்வு. இந்த உயர்வைக் கட்டுப்படுத்தினால், உணவு பணவீக்கம் உள்பட அனைத்து பணவீக்கமும் குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

    தற்போது எண்ணெய் நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டுள்ள டீசல் விலை என்பது முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான கொள்கையை அடிப்படையாக கொண்டது.

    பல துறைகளில் மாற்றங்களை கொண்டு வரும் பாரத பிரதமர், நான் பல முறை சுட்டிக்காட்டியுள்ளபடி, பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயக் கொள்கையில் தனி கவனம் செலுத்தி, பணவீக்கம் மற்றும் விலைவாசியை கட்டுப்படுத்தும் வகையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயக் கொள்கையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும், தற்போதைய டீசல் விலை உயர்வை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்."
    Aug 31,2014 06:03 pm
    Jayalalithaa
    உள்ளாட்சி தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் - AIADMK Chief & Honble CM Announceme...
    உள்ளாட்சி தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் - AIADMK Chief & Honble CM Announcement - 29.8.2014
    *******************************************************************************

    "அண்ணா தி.மு.க. ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 18.9.2014 அன்று நடைபெற உள்ள மாநகராட்சி மேயர்கள், மாமன்ற உறுப்பினர்கள்; நகர மன்றத் தலைவர்கள், நகர மன்ற வார்டு உறுப்பினர்கள்; பேரூராட்சி மன்றத் தலைவர்கள், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள்; மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆகிய உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத் தேர்தல்களில், அண்ணா தி.மு.க.வின்அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான அண்ணா தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் வருமாறு:–

    1. கோயம்புத்தூர் மாநகராட்சி – கணபதி ப. ராஜ்குமார் (கோவை மாநகர் மாவட்ட செயலாளர், மாநகராட்சி வடக்கு மண்டல குழு தலைவர்)

    2. திருநெல்வேலி மாநகராட்சி– புவனேஸ்வரி (திருநெல்வேலி மாநகர் மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர்).

    3. தூத்துக்குடி மாநகராட்சி –ஏ.பி.ஆர். அந்தோணி கிரேஸி (தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர்–பொதுக்குழு உறுப்பினர், தூத்துக்குடி தொகுதி).

    மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான கழக வேட்பாளர்கள் விவரம்:

    1. சென்னை மாநகராட்சி (35வது வார்டு)– ஏ.டேவிட் ஞானசேகரன்,

    2. சென்னை மாநகராட்சி (166-வது வார்டு)–எஸ்.எஸ்.கே. ராஜேந்திரன்

    3. ஈரோடு மாநகராட்சி (60-வது வார்டு)–டி. பாலசுப்பிரமணியம்

    4. திருப்பூர் மாநகராட்சி (22-வது வார்டு)–கலைமகள் கோபால் (எ) ஆ. கோபால்சாமி

    5. திருப்பூர் மாநகராட்சி (45-வது வார்டு)– எம்.கண்ணப்பன்

    6. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி (15-வது வார்டு)– எம். ராஜலெட்சுமி,

    7. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 32-வது வார்டு)–ஆர். சங்கர்

    8. தஞ்சாவூர் மாநகராட்சி (7-வது வார்டு)–ஏ.வாசுகி,

    9. மதுரை மாநகராட்சி (85-வது வார்டு)–யு.கே. லதா குமார்

    10. மதுரை மாநகராட்சி(4-வது வார்டு–கே. சண்முகம்

    11. திண்டுக்கல் மாநகராட்சி (9-வது வார்டு)–பி.பாண்டி

    12. தூத்துக்குடி மாநகராட்சி (37-வது வார்டு)–ஏ.மாரிமுத்து

    நகர மன்றத் தலைவர் பதவிகளுக்கான கழக வேட்பாளர்கள் விவரம்:

    1. அரக்கோணம் நகராட்சி (வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டம்) –எஸ். கண்ணதாசன்

    2. கடலூர் நகராட்சி (கடலூர் கிழக்கு மாவட்டம்)– ஆர். குமரன்

    3. விருத்தாசலம் நகராட்சி (கடலூர் கிழக்கு மாவட்டம்)–பி. அருளழகன்

    4. குன்னூர் நகராட்சி (நீலகிரி மாவட்டம்)–டி.. சரவணகுமார்

    5. புதுக்கோட்டை நகராட்சி (புதுக்கோட்டை மாவட்டம்)–ஆர். ராஜசேகரன்

    6. கொடைக்கானல் நகராட்சி (திண்டுக்கல் மாவட்டம்)–எம்.ஸ்ரீதர்

    7. ராமநாதபுரம் நகராட்சி (ராமநாதபுரம் மாவட்டம்)– எஸ். சந்தானலெட்சுமி

    8. சங்கரன்கோவில் நகராட்சி ( திருநெல்வேலி மாநகர் மாவட்டம்)–வி.எம். ராஜலெட்சுமி

    நகர மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான கழக வேட்பாளர்கள் விவரம்:

    1. பல்லாவரம் நகர மன்ற -2வது வார்டு–ஏ.சி.கணேசன்

    2. தாம்பரம் நகர மன்ற 7-வது வார்டு–எம்.கே. நாகூர்கனி.

    3. தாம்பரம் நகர மன்ற 33-வது வார்டு–யு.கோமளா

    4. மறைமலைநகர் நகர மன்ற 11-வது வார்டு–பி. கலையரசி

    5. செங்கல்பட்டு நகர மன்ற 1-வது வார்டு–ஏ. ஜீவரத்தினம்

    6. செங்கல்பட்டு நகர மன்ற 6-வது வார்டு– ஏ. கன்னியப்பன்

    7. மதுராந்தகம் நகர மன்ற 15-வது வார்டு–கே.வடிவேல்

    8. ஆவடி நகர மன்ற 33-வது வார்டு–ஏ. உமாமகேஸ்வரி

    9. வாணியம்பாடி நகர மன்ற 35-வது வார்டு–ஆர்.மகேஸ்வரி அவர்கள்

    10. ஆரணி நகர மன்ற 18-வது வார்டு–ஆர். சந்திரா

    11. கடலூர் நகர மன் ற42-வது வார்டு–ஏ.ராபின்

    12. விருத்தாசலம் நகர மன்ற 26-வது வார்டு–எல்.அருண்

    13. சிதம்பரம் நகர மன்ற 17-வது வார்டு–தன. ராஜேந்திரன்

    14. சிதம்பரம் நகர மன்ற 20-வது வார்டு சி.அன்பழகன்

    15. ஒசூர் நகர மன்ற 9-வது வார்டு– தியாகராஜ ரெட்டி

    16. மேட்டூர் நகர மன்ற 24-–வது வார்டு–ஏ. குணசேகரன்

    17. ராசிபுரம் நகர மன்ற 6-வது வார்டு– ஆர்.ஏ பரமேஸ்வரன்

    18. வெள்ளக்கோவில் நகர மன்ற 17-வது வார்டு–டி. தனலட்சுமி

    19. பவானி நகர மன்ற 7-வது வார்டு–பி.செல்லப்பன்

    20. பல்லடம் நகர மன்ற -வது வார்டு–பி. சிவகாமி

    21. பொள்ளாச்சி நகர மன்ற11-வது வார்டு–எம். தனலட்சுமி

    22. பொள்ளாச்சி நகர மன்ற 31-வது வார்டு–ஐ. நசீர்பானு

    23. நெல்லியாளம் நகர மன்ற 3-வது வார்டு–கே.சாந்தா

    24. அரியலூர் நகர மன்ற 13-வது வார்டு–பி.மல்லிகா

    25. மயிலாடுதுறை நகர மன்ற 9-வது வார்டு–ஐ. தெரசா இருதயராஜ்

    26. கூத்தாநல்லூர் நகர மன்ற 12-வது வார்டு–ஜி.சாந்தி

    27. உசிலம்பட்டி நகர மன்ற 21-வது வார்டு–எம்.ராமகிருஷ்ணன் அவர்கள்

    28. திருமங்கலம் நகர மன்ற 17-வது வார்டு–ஜி.பாலமுருகன்

    29. தேனி -அல்லி நகர மன்ற 26-வது வார்டு–எம். மீனா

    30. தேனி -அல்லி நகர மன்ற 33-வது வார்டு– செல்லப்பாண்டி (முன்னாள் எம்.சி.,)

    31. விருதுநகர் நகர மன்ற 10-வது வார்டு–எம்.சையது இப்ராஹிம்

    32. விருதுநகர் நகர மன்ற 21-வது வார்டு ஐ. மருது

    33. விருதுநகர் நகர மன்ற 34-வது வார்டு– நா. வாடியான்பாலன்

    34. ராஜபாளையம் நகர மன்ற 10-வது வார்டு–வி.முருகன்

    35. ராஜபாளையம் நகர மன்ற 15- வது வார்டு–வி. குருசாமி

    36. ராஜபாளையம் நகர மன்ற 17-வது வார்டு –கே. ராமசுப்

    37. சிவகங்கை நகர மன்ற 2-வது வார்டு–பி.லலிதா

    38. ராமநாதபுரம் நகர மன்ற 19-வது வார்டு–ஏ.சீனி சர்புதீன்

    39. கீழக்கரை நகர மன்ற 15-வது வார்டு–ஏ.ஜென்னத்துல் பிர்தௌஸ் அ

    40. பரமக்குடி நகர மன்ற 20-வது வார்டு–ஆர்.கண்ணன்

    41. புளியங்குடி நகர மன்ற 17-வது வார்டு –பா. சின்னத்துரை

    42. சங்கரன்கோவில் நகர மன்ற 4-வது வார்டு–ஏ.எஸ். கணேசன்

    43. சங்கரன்கோவில் நகர மன்ற 3-வது வார்டு–எம். ராமதுரை

    44. கடையநல்லூர் நகர மன்ற 19-வது வார்டு–எம். சேக் உதுமான்

    45. கடையநல்லூர் நகர மன்ற 24-வது வார்டு–எம். கோமதிபாண்டியன்

    46. தென்காசி நகர மன்ற 14-வது வார்டு–எஸ். சந்திரன்

    47. விக்கிரமசிங்கபுரம் நகர மன்ற 20-வது வார்டு–எஸ். முத்துசரம்

    48. காயல்பட்டினம் நகர மன்ற 1-வது வார்டு–எம். அமலக்கனி

    49. நாகர்கோவில் நகர மன்ற 37-வது வார்டு–டி. ஜெயராம்

    50. குளச்சல் நகர மன்ற 11–வது வார்டு–எல். ஆன்றனி ராஜன்

    51. பத்மநாபபுரம் நகர மன்ற 11-வது வார்டு–எம். பாரூக

    52. குழித்துறை நகர மன்ற 10-வது வார்டு–சி. ஏசுதாஸ்

    53. குழித்துறை நகர மன்ற 20-வது வார்டு–சி.சுந்தர்ராஜ்.

    பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கான கழக வேட்பாளர்கள் விவரம்:

    1. ஓமலூர் பேரூராட்சி (சேலம் புறநகர் மாவட்டம்)– எம்.சிவக்குமார்.

    2. திருமுருகன்பூண்டி பேரூராட்சி (திருப்பூர் மாநகர் மாவட்டம்)–ஏ.பழனிச்சாமி

    3. மடத்துக்குளம் பேரூராட்சி (திருப்பூர் புறநகர் மாவட்டம்)–எஸ். பழனிச்சாமி

    4. சூலூர் பேரூராட்சி (கோவை புறநகர் மாவட்டம்)–எஸ்.தங்கராஜ்

    5. இருகூர் பேரூராட்சி (கோவை புறநகர் மாவட்டம்)–டி. பத்மாசுந்தரி

    6. அபிராமம் பேரூராட்சி (ராமநாதபுரம் மாவட்டம்)–எம். குமணன்

    7. சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி (திருநெல்வேலி புறநகர் மாவட்டம்)–ஏ. பண்டாரம்

    பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான கழக வேட்பாளர்கள் விவரம் வருமாறு:–

    1. அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி —-மன்ற 13-வது வார்டு–க. மெய்யப்பன்

    2. உத்திரமேரூர் பேரூராட்சி மன்ற 13-வது வார்டு–சி. வேளாங்கண்ணன்

    3. வாலாஜாபாத் பேரூராட்சி மன்ற 15-வது வார்டு–எஸ். கணபதி

    4. கலவை பேரூராட்சி மன்ற 7-வது வார்டு –எம்.பிரபு

    5. திமிரி பேரூராட்சி மன்ற 14-வது வார்டு– எஸ்.ஜி.கேசவன்

    6. நாட்றாம்பள்ளி பேரூராட்சி 8–வது வார்டு–பி.இளவரசன்

    7. ஆலங்காயம் பேரூராட்சி மன்ற 2-வது வார்டு–எம். சாந்த

    8. சேத்துப்பட்டு பேரூராட்சி மன்ற 5-வது வார்டு–எம்.ஜி. பாண்டியன்

    9. சேத்துப்பட்டு பேரூராட்சி மன்ற 9-வது வார்டு –ஏ.ரவி

    10. அண்ணாமலைநகர் பேரூராட்சி —-மன்ற 3-வது வார்டு–எம். ராஜா

    11. தியாகதுருகம் பேரூராட்சி மன்ற 6-வது வார்டு–ஜே. கங்கா

    12. திருக்கோவிலூர் பேரூராட்சி மன்ற 13-வது வார்டு–ஜி.வடிவேல்

    13. ஊத்தங்கரை பேரூராட்சி மன்ற 13-வது வார்டு–எஸ். சக்திவேல்

    14. காவேரிப்பட்டினம் பேரூராட்சி —மன்ற 2-வது வார்டு–ராதா (எ) விவேகானந்தன்

    15. கடத்தூர் பேரூராட்சி மன்ற 8-வது வார்டு–பி.சுரேஷ்

    16. பொ. மல்லாபுரம் பேரூராட்சி மன்ற 3-வது வார்டு–எம். அன்பழகன்

    17. அரூர் பேரூராட்சி மன்ற 13-வது வார்டு –வி. தீர்த்தகிரி

    18. பெத்தநாயக்கன் பாளையம் பேரூராட்சி மன்ற 7-வது வார்டு–என். சக்திகோபால்

    19. பெத்தநாயக்கன் பாளையம் -பேரூராட்சி மன்ற 11-வது வார்டு –ஏ.நல்லப்பன்

    20. சங்ககிரி பேரூராட்சி மன்ற 18-வது வார்டு–நா. தங்கவேல்

    21. தெடாவூர் பேரூராட்சி மன்ற 4-வது வார்டு–பழ. மருதமுத்து

    22. தாரமங்கலம் பேரூராட்சி மன்ற 3-வது வார்டு–பி. கோவிந்தராஜ்

    23. இளம்பிள்ளை பேரூராட்சி மன்ற 9-வது வார்டு–எ.கருணாமூர்த்தி

    24. ஜலகண்டாபுரம் பேரூராட்சி மன்ற 4-வது வார்டு–எம்.மனோகரன்

    25. வெங்கரை பேரூராட்சி மன்ற 8-வது வார்டு–ஜே. ஜெயந்தி

    26. படைவீடு பேரூராட்சி மன்ற 3-வது வார்டு–சி.மாதேஸ்வரன்

    27. படைவீடு பேரூராட்சி மன்ற 10-வது வார்டு–ஆர்.கிருஷ்ணமூர்த்தி

    28. வேலூர் பேரூராட்சி மன்ற 18-வது வார்டு–ஆர். தமிழ்செல்வி

    29. நாமகிரிப்பேட்டை பேரூராட்சி மன்ற 2-வது வார்டு–எம்.சக்திவேல்

    30. சேந்தமங்கலம் பேரூராட்சி மன்ற 9-வது வார்டு–ஆர். ஆறுமுகம்

    31. மூலனூர் பேரூராட்சி மன்ற 15–வது வார்டு– எஸ்.அமுதா

    32. பவானிசாகர் பேரூராட்சி மன்ற 10-வது வார்டு–ஆர். ஆறுமுகம்

    33. பள்ளபாளையம் பேரூராட்சி மன்ற 6-வது வார்டு–பி. தங்கமணி

    34. கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி மன்ற 8-வது வார்டு–பி. சுப்பிரமணியம்

    35. தளி பேரூராட்சி மன்ற 5-வது வார்டு–கே.முத்துசாமி

    36. தளி பேரூராட்சி மன்ற 7-வது வார்டு–டி.ராஜேஸ்வரி

    37. தளி பேரூராட்சி மன்ற 8-வது வார்டி–டி. லட்சுமி

    38. கணியூர் பேரூராட்சி மன்ற 1-வது வார்டு–எஸ். வீரப்பன்

    39. வீரபாண்டி பேரூராட்சி மன்ற 2-வது வார்டு–எம். முரளி

    40. சர்க்கார்சாமக்குளம் பேரூராட்சி மன்ற 3-வது வார்டு எஸ்.முருகேசன்

    41. கோட்டூர் பேரூராட்சி மன்ற 16-–வது வார்டு–எஸ்.முத்துச்சாமி

    42. வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சி —மன்ற 9-வது வார்டு–எஸ்.கே. பச்சியப்பன்

    43. கீழ்குந்தா பேரூராட்சி மன்ற 1-வது வார்டு– நஞ்சுண்டன்

    44. கீழ்குந்தா பேரூராட்சி மன்ற 7-வது வார்டு –க. மணியரசன்

    45. அதிகரட்டி பேரூராட்சி மன்ற 1-வது வார்டு–பி. ஐயர்

    46. உலிக்கல் பேரூராட்சி மன்ற 6-வது வார்டு– எம். முருகன்

    47. புள்ளம்பாடி பேரூராட்சி மன்ற 12-வது வார்டு– ஆர். ஜெயபால்

    48. மண்ணச்சநல்லூர் பேரூராட்சி —-மன்ற 4-ஆவது வார்டு–எஸ்.சந்திர

    49. தொட்டியம் பேரூராட்சி மன்ற 13-வது வார்டு–ஆ. திருஞானம்

    50. கூத்தப்பார் பேரூராட்சி —-மன்ற 15-வது வார்டு–ஆர். செல்வி

    51. பூலாம்பாடி பேரூராட்சி மன்ற 15-வது வார்டு கு. அப்துல் சலாம்

    52. நங்கவரம் பேரூராட்சி மன்ற 10-வது வார்டு–வி. மகாமுனி

    53. புஞ்சை புகளூர் பேரூராட்சி மன்ற 6-வது வார்டு–எம். மோகன்குமார்

    54. அய்யம்பேட்டை பேரூராட்சி மன்ற 4-வது வார்டு– கா. செல்லக்கண்ணு

    55. திருப்பனந்தாள் பேரூராட்சி மன்ற 11-வது வார்டு–அ. கமால் பாட்சா

    56. சோழபுரம் பேரூராட்சி மன்ற 4- வது வார்டு–எம்.ஆஷாத் அலி

    57. பெருமகளூர் பேரூராட்சி மன்ற 10- வது வார்டு–பி. பாலசுப்பிரமணியன்

    58. அதிராம்பட்டினம் பேரூராட்சி மன்ற 8-வது வார்டு–எம். ஹாஜா முகைதீன்

    59. மதுக்கூர் பேரூராட்சி மன்ற 3-வது வார்டு–ஆர். தமிழ்செல்வி

    60. நன்னிலம் பேரூராட்சி மன்ற 4-வது வார்டு–எம். இந்துமதி

    61. பேரளம் பேரூராட்சி மன்ற 10-வது வார்டு–பி. செல்லதுரை

    62. கொரடாச்சேரி பேரூராட்சி மன்ற 1-வது வார்டு–எம். ரவி

    63. முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற 18-வது வார்டு–எம். திருமலை

    64. மார்கையன்கோட்டை பேரூராட்சி —மன்ற 12-வது வார்டு–எஸ். மாரியப்பன் அவர்கள்

    65. காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி —-மன்ற 3-வது வார்டு–எஸ். சித்ரா

    66. காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி —-மன்ற 6-வது வார்டு–பி. வேல்முருகன்

    67. உத்தமபாளையம் பேரூராட்சி -மன்ற 1-வது வார்டு–ஆர்.தன்ராஜ்

    68. வடுகபட்டி பேரூராட்சி மன்ற 5-வது வார்டு–எஸ். ஆண்டியம்மாள்

    69. சித்தையன்கோட்டை பேரூராட்சி மன்ற 11-வது வார்டு–கே. ஜெயகுமார் அ

    70. ஸ்ரீராமபுரம் பேரூராட்சி மன்ற 1-வது வார்டு–பி. தங்கராஜ்

    71. ஸ்ரீராமபுரம் பேரூராட்சி மன்ற 2-வது வார்டு–வி. கண்ணன்

    72. நெய்க்காரப்பட்டி பேரூராட்சி மன்ற 9-வது வார்டு–எம். ஈஸ்வரன்

    73. பண்ணைக்காடு பேரூராட்சி மன்ற 8-வது வார்டு–எம்.கௌசல்யா

    74. கானாடுகாத்தான் பேரூராட்சி —-மன்ற 1-வது வார்டு–எஸ்.கிருஷ்ணன்

    75. சிங்கம்புணரி பேரூராட்சி மன்ற 15-வது வார்டு–சி.செல்லையா)

    76. மண்டபம் பேரூராட்சி மன்ற 9-வது வார்டு–எம்.பர்வீன் பானு

    77. ஆர்.எஸ். மங்கலம் பேரூராட்சி மன்ற 12-வது வார்டு–எஸ். ஜம்ருத்துல் குரைசி அ

    78. ராயகிரி பேரூராட்சி மன்ற 2-வது வார்டு–செ. முத்துராமலிங்கம்

    79. பத்தமடை பேரூராட்சி மன்ற 2-வது வார்டு–இ. ராம்ராஜ்

    80. பணகுடி பேரூராட்சி மன்ற 3-வது வார்டு–எஸ். ஜெயபால்

    81. சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி மன்ற 13-வது வார்டு–எம்.லெட்சுமி

    82. திருக்குறுங்குடி பேரூராட்சி மன்ற 3-வது வார்டு–எம். முருகன்

    83. மூலக்கரைப்பட்டி பேரூராட்சி மன்ற 11-வது வார்டு–பி.ராமர்

    84. நாங்குநேரி பேரூராட்சி மன்ற 6-வது வார்டு–பி.புஷ்பா

    85. மேலகரம் பேரூராட்சி மன்ற 5-வது வார்டு–இ.முருகன்

    86. சாயர்புரம் பேரூராட்சி மன்ற 14-வது வார்டு–பி. பொன்செல்வி

    87. தென்திருப்பேரை பேரூராட்சி மன்ற 2-வது வார்டு– ஜி.கல்யாணி

    88. தென்திருப்பேரை பேரூராட்சி —-மன்ற 11-வது வார்டு–பி. குற்றாலிங்கம்

    89. தேரூர் பேரூராட்சி மன்ற 9-வது வார்டு–பி.பாபு

    90. தேரூர் பேரூராட்சி மன்ற 13-வது வார்டு–எஸ். ராமலெட்சுமி

    91. கொட்டாரம் பேரூராட்சி மன்ற 4-வது வார்டு–ஆர்.சாந்தி ராபர்ட்

    92. கணபதிபுரம் பேரூராட்சி மன்ற 1-வது வார்டு–என்.அண்ணாமலை

    93. திங்கள்நகர் பேரூராட்சி மன்ற 11-வது வார்டு–ஆர். பாண்டியம்மாள்

    94. இரணியல் பேரூராட்சி மன்ற 13-வது வார்டு–எஸ். ஐயப்பன் ஆசாரி

    95. ரீத்தாபுரம் பேரூராட்சி மன்ற 2-வது வார்டு–சி. ரவீந்திரநாத் தாகூர்

    96. திற்பரப்பு பேரூராட்சி மன்ற 4-வது வார்டு–. கனகராஜ்

    97. ஏழுதேசம் பேரூராட்சி மன்11-வது வார்டு–ஆ. மகேஷ்வரி

    98. ஆற்றூர் பேரூராட்சி மன்ற 1-வது வார்டு–விஜயகுமாரி

    99. கொல்லங்கோடு பேரூராட்சி —மன்ற 8-வது வார்டு–யு. மோகன்

    100. பாகோடு பேரூராட்சி மன்ற 12-வது வார்டு–எம். முத்துமாரி

    101. பளுகல் பேரூராட்சி மன்ற 5-வது வார்டு எஸ். லாரன்ஸ்

    மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான கழக வேட்பாளர்கள் விவரம்:–

    1. திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழு 31-வது வார்டு– ஆர். அர்ஜூனன்

    2. விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக் –குழு 29-–வது வார்டு–யு. ஜெய்சங்கர்.

    3. கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சிக் –குழு 10-வது வார்டு–கே. ராமு

    4. நாமக்கல் மாவட்ட ஊராட்சிக் –குழு 4-வது வார்டு–வி. வைரம் தமிழரசி

    5. திருப்பூர் மாவட்ட ஊராட்சிக் குழு 11-வது வார்டு–பி.கே.ராஜ்

    6. ஈரோடு மாவட்ட ஊராட்சிக் குழு 3-வது வார்டு–பி.பி.அண்ணாதுரை

    7. தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சிக் –குழு 4-வது வார்டு– தம்பி க. தேவரத்தினம்

    8. விருதுநகர் மாவட்ட ஊராட்சிக்

    9. விருதுநகர் மாவட்ட ஊராட்சிக் –குழு 19-வது வார்டு–கே.எஸ்.சண்முகக்கனி

    10. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சிக் குழு 10-வது வார்டு–பி.மோகன்

    11. கன்னியாகுமரி மாவட்ட ஊரா
    Aug 29,2014 06:57 pm
    Jayalalithaa
    AIADMK Chief & Honble CM Message - 29.8.2014 ***********************************...
    AIADMK Chief & Honble CM Message - 29.8.2014
    ***********************************************************

    "என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளுக்கு நன்றி! அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் தாரக மந்திரமான "உழைப்பே உயர்வு தரும்" என்ற பொன்மொழிக்கேற்ப பணியாற்றி வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள் என் மீது மாறாப் பற்றும், மிகுந்த நம்பிக்கையும், விசுவாசமும் கொண்டு, கழக சட்ட திட்ட விதிகளுக்கேற்ப என்னை மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்து உள்ளமைக்காக எனது நெஞ்சார்ந்த நன்றியினை என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக நான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற அவாவில், எனது சார்பில் தலைமைக் கழகத்தில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்த கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    "போற்ற வேண்டியவை உண்மை, உழைப்பு, உயர்வு; பின்பற்ற வேண்டியவை கனிவு, பணிவு, துணிவு; பேணப்பட வேண்டியவை கடமை, கண்ணியம், கட்டுப்பாடு" என்றார் பேரறிஞர் அண்ணா. பேரறிஞர் அண்ணா அவர்களின் இந்த அமுதமொழிக்கேற்ப, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், வெற்றிக்காகவும், கழக உடன்பிறப்புகளின் முன்னேற்றத்திற்காகவும், நாட்டு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன் என்ற உறுதியை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்வதோடு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ரத்தத்தின் ரத்தமான, என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றியினை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்."
    Aug 29,2014 06:38 pm
    Jayalalithaa
    AIADMK Chief & Honble CM Announcement - 27.8.2014 "கழகத்தின் கொள்கை - குறிக்கோள...
    AIADMK Chief & Honble CM Announcement - 27.8.2014

    "கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கடலூர் கிழக்கு மாவட்டம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் சி.கே.சுப்பிமணியன் மற்றும் கடலூர் நகர ஜெ. ஜெயலலதா பேரவை பொருளாளர் சி.கே.எஸ். சண்முகம் ஆகியோர் இன்றுமுதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறனர்.
    கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்."
    Aug 27,2014 06:50 pm
    Jayalalithaa
    Statement of the Honble Chief Minister on the new schemes for the benefit of pub...
    Statement of the Honble Chief Minister on the new schemes for the benefit of public in Kodaikanal, Kumbakonam and Karur Municipalities - 27.8.2014
    ****************************************************************************************

    "நகர்ப்புறங்களில் ஆரோக்கியமான சுற்றுச் சூழலை உருவாக்குதிலும், பொது சுகாதாரத்தை பேணிப் பாதுகாப்பதிலும், பாதுகாக்கப்பட்ட குடிநீரினை வழங்குவதிலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப திட்டங்களை தீட்டிச் செயல்படுத்துவதிலும் எனது தலைமையிலான அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது.

    சுற்றுலாத்தலமாக விளங்கும் கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த மூன்று ஆண்டுகளில், 27 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள் அமைத்தல், தெருவிளக்குகள் பொருத்துதல், திடக்கழிவு மேலாண்மை பணிகள் என 132 அடிப்படை வசதிப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன. கொடைக்கானல் நகராட்சியில் 140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்த எனது தலைமையிலான அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் கோரப்படும். கொடைக்கானல் நகர மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் குடிநீர் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு 43 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான கீழ்குண்டாறு குடிநீர் திட்டம் என்னால் அறிவிக்கப்பட்டு அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கொடைக்கானல் நகராட்சியில் அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்திற் கொண்டு, பொதுமக்களுக்கு மேலும் பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதென எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி,

    கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் வகையில், 87 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொடைக்கானல் ஏரி அழகு படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்தின் கீழ் ஏரியினை தூர்வாருதல், ஆகாயத் தாமரை மற்றும் தேவையற்ற நீர் தாவரங்களை அப்புறப்படுத்துதல், நீரில் உள்ள ஆக்ஸிஜன் தன்மையினை அதிகரித்தல், மீன் வளர்ப் பிற்கு தேவையான தகுந்த சூழ்நிலையினை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், ஏரியினை சுற்றிலும் மழை நீர் வடிகால் அமைத்தல் மற்றும் வெளியேற்றுதல், கழிவு நீர் மேலாண்மை மற்றும் திடக்கழிவு மேலாண்மை, பூங்கா அமைத்தல், வாகன நிறுத்தம் அமைத்தல், சாலை வசதியினை மேம்படுத்துதல், அலங்கார தாவரங்களை அமைத்தல், வண்டல் படிவுகளை அப்புறப்படுத்துதல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படும். இவை மட்டுமின்றி, படகு குழாம்களை முறைப்படுத்தி அழகுப்படுத்துதல், ஏரியின் எழில் தோற்றத்தினை மேம்படுத்துதல், சுற்றுலா தகவல் மையம், சைக்கிள் நிறுத்துமிடம் போன்ற வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும்.

    கோயில்கள் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணம் நகராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில், 35 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள், சாலைகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள் மற்றும் இதரப் பணிகள் என 234 அடிப்படை வசதிப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதன் தொடர்ச்சியாக, கும்பகோணம் நகரில் நடைபெறவுள்ள மகாமகம் பெரு விழாவையொட்டி இந்நகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் வகையில், 2 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர்ப் பணிகளும், 5 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெருவிளக்கு அமைக்கும் பணிகள் மற்றும் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்வாய் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    மேலும், 10 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலைப் பணிகள், 1 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தேரோடும் வீதி மேம்பாட்டுப் பணிகள் மற்றும் 1 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுகாதார சந்துகளை மேம்பாடு செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதுமட்டுமல்லாமல், 11 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டம், 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவறைகளை மேம்படுத்தும் பணிகள், 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேலக்காவேரி ஆற்றின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைத்தல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படும். மொத்தத்தில் 43.78 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கரூர் நகராட்சியில், கடந்த மூன்று ஆண்டுகளில் 108 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், பூங்காக்கள் என 608 அடிப்படை வசதிப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன. கரூர், இனாம் கரூர் மற்றும் தாந்தோணி பகுதிகளுக்கு ஜெர்மானிய மேம்பாட்டு வங்கியின் நிதியுதவியுடன் 68 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகள் செயலாக்கத்தில் உள்ளன.

    கரூர் நகரின் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தருவதென எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி,

    1. கரூர் நகராட்சியில், குளத்துப்பாளையம் ஈரோடு–கரூர் இருப்புப்பாதையில் 3 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்கப்படும். இப்பணி, தென்னக ரயில்வே மூலம் செயல்படுத்தப்படும். மேலும், இந்த சுரங்கப்பாதைக்கான அணுகு சாலை அமைக்கும் பணி 3 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும்.

    2. கரூர் நகராட்சியில் வடக்கு பசுபதி பாளையத்தில், திருச்சி மற்றும் கரூர் திண்டுக்கல் இருப்புப்பாதையில் 3 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்கப்படும். இப்பணி, தென்னக ரயில்வே மூலம் செயல்படுத்தப்படும். மேலும், இந்த சுரங்கப்பாதைக்கான அணுகு சாலை அமைக்கும் பணி 2 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும்.

    மேற்காணும் நடவடிக்கைகள், கொடைக்கானல், கும்பகோணம் மற்றும் கரூர் நகராட்சிகளைச் சார்ந்த மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள் கிடைத்திடவும், ஆரோக்கியமான சுற்றுசூழல் நிலவவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
    Aug 27,2014 06:45 pm
    Jayalalithaa
    AIADMK Chief & Honble CM Announcement - 26.8.2014 "கழகத்தின் கொள்கை - குறிக்கோள...
    AIADMK Chief & Honble CM Announcement - 26.8.2014

    "கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி துணைச்செயலாளர் சி.உதயகுமார் இன்றுமுதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
    கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்."
    Aug 26,2014 06:39 pm
    Jayalalithaa
    Statement of the Honble Chief Minister on the new schemes for the benefit of pub...
    Statement of the Honble Chief Minister on the new schemes for the benefit of public in Thanjavur and Dindigul Corporations - 26.8.2014
    **************************************************************************************

    "மக்கள் தொகை பெருக்கம், வளர்ந்து வரும் வணிகமயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல், அதிகரித்து வரும் வருவாய் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் நகராட்சிகளை மாநகராட்சிகளாக எனது தலைமையிலான அரசு சென்ற ஆண்டு தரம் உயர்த்தியது.

    இது மட்டுமல்லாமல், கடந்த மூன்று ஆண்டுகளில் தஞ்சாவூர் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், 61 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் திட்டப்பணிகள், சாலைகள், மழை நீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், தெரு விளக்குகள் என 454 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதே போன்று, திண்டுக்கல் மக்களின் அடிப்படைத் தேவைகளை மேம்படுத்தும் வகையில், 29 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் திட்டப் பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், தெருவிளக்குகள் என 119 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இது தவிர, திண்டுக்கல் மாநகருக்கென தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் காமராஐர் சாகர் அணை குடிநீர்த் திட்டத்தை புனரமைப்பு செய்யவும், திண்டுக்கல் மாநகர் மற்றும் காமராஜர் சாகர் திட்டத்தில் உள்ள வழியோர கிராமங்களுக்கு தேவைப்படும் 26 எம்.எல்.டி குடிநீரை பெறவும் 70 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் விரைவில் கோரப்படும்.

    இதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மாநகராட்சி மக்களுக்கு மேலும் பல்வேறு அடிப்படை வசதிகளை 82 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தி தருவதென எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி,

    1. தஞ்சாவூர் பகுதி மக்களுக்கு சீரான மற்றும் போதுமான அளவு குடிநீர் வழங்கும் வகையில், தஞ்சாவூர் மாநகராட்சியில் 45 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    2. பாதாள சாக்கடைப் பணிகள் மற்றும் குடிநீர் பணிகளால் சேதமடைந்த சாலைகள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

    3. தஞ்சாவூர் மாநகராட்சியின் அழகையும், பொலிவையும், தூய்மையையும் மேம்படுத்தும் வகையில், தஞ்சாவூர் மாநகரில் அமைந்துள்ள சிவகங்கை பூங்கா 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

    4. பாதசாரிகள், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் சாலைகளில் பாதுகாப்பாக நடந்து செல்ல ஏதுவாக, தஞ்சாவூர் மாநகராட்சியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகளில் நடைபாதைகள் அமைக்கப்படும்.

    5. தஞ்சாவூர் மாநகரத்தில் உள்ள சாலைகள் முழுவதிலும் சீரான மற்றும் தரமான ஒளியை வழங்கும் நோக்கில், தஞ்சாவூர் மாநகராட்சியில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெரு விளக்குகள் அமைக்கப்படும்.

    6. திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை தவிர்க்க, 4 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பிடங்கள் கட்டப்படும்.

    இதேபோன்று, திண்டுக்கல் மாநகராட்சி மக்களுக்கும் 42 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கீழ்க்காணும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நான் உத்தரவிட்டுள்ளேன். இதன்படி,

    1. பொதுமக்களும், நகரங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளும் சாலைகளையும், சுற்றுலா இடங்களையும் எளிதில் அறிந்து கொள்ள ஏதுவாக, திண்டுக்கல் மாநகராட்சி எல்லை மற்றும் தெருக்களில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவினத்தில் ஒளிரும் வழிகாட்டி பலகைகள் மற்றும் குறியீடுகள் அமைக்கப்படும்.

    2. மழை நீர் சேகரிப்பு திட்டத்தை மேலும் மேம்படுத்திடும் வகையில், திண்டுக்கல் மாநகராட்சியில் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

    3. திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள், மாநகராட்சி அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் தேவையான வசதிகளை செய்து தரப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், திண்டுக்கல் மாநகராட்சிக்கென 5 கோடி ரூபாய் செலவில் புதிய அலுவலகக் கட்டடம் கட்டித் தரப்படும்.

    4. திண்டுக்கல் மாநகரின் வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு, பேருந்து நிறுத்துமிடங்கள், நடைமேடைகள், கழிப்பறை வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்தி, உணவகம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தும் வகையில், 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    5. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் சாலைகளை அமைத்துத் தரவும், மேம்படுத்திடவும் ஏதுவாக திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் 17 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 65 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    6. சாலைகளில் மழை நீர் தேங்குவதை தடுக்கும் வகையில், திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    7. திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுத்து, சுகாதாரமான சுற்றுச்சுழலை உருவாக்கும் வகையில், திண்டுக்கல் மாநகராட்சியில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 இடங்களில் நவீன பொது கழிப்பறைகள் அமைக்கப்படும்.

    இந்த நடவடிக்கைகள் தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி எழில்மிகு மாநகராட்சிகளாக உருவாக வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
    Aug 26,2014 06:31 pm
    Jayalalithaa
    AIADMK Chief & Honble CM Announcement - 24.8.2014 ______________________________...
    AIADMK Chief & Honble CM Announcement - 24.8.2014
    ______________________________________________

    "ஈரோடு மாநகர் மாவட்டத்தை சேர்ந்த டி.கே.வேலுசாமி (கொடுமுடி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர்), மதுரை புறநகர் மாவட்டத்தை சேர்ந்த எம்.பி.ஜெயக்குமார் (உத்தங்குடி கிளை, மதுரை கிழக்கு ஒன்றியம்), கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த அ.அசோக்குமார் (அழகப்புரம் பேரூராட்சிக் கழக முன்னாள் செயலாளர்), ஆர்.ராஜேந்திரன் (இரணியல் பேரூராட்சி கழக முன்னாள் செயலாளர்), ஐ.சிவசுப்பிரமணியன் (மருங்கூர் பேரூராட்சி மன்ற முன்னாள் வார்டு உறுப்பினர்) ஆகியோர் தங்களது செயலுக்கு வருந்தி நேரிலும் கடிதம் மூலமும் மன்னிப்பு கோரி, தங்களை மீண்டும் கழகத்தில் இணைத்துக்கொள்ள வேண்டி கேட்டுக்கொண்டதால் இன்று முதல் உறுப்பினர்களாக கழகத்தில் இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள்."
    Aug 25,2014 07:26 pm
    Jayalalithaa
    Statement of the Honble Chief Minister on the new schemes for the benefit of pub...
    Statement of the Honble Chief Minister on the new schemes for the benefit of public in Thoothukudi and Tirunelveli Corporations -25.8.2014
    **************************************************************************************

    "மக்கள் தொகை பெருக்கத்திற் கேற்ப மாநகராட்சிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு மாநகராட்சி பகுதிகளுக்கு இணையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதிலும் எனது தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

    கடந்த மூன்று ஆண்டுகளில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், தெரு விளக்குகள், கட்டடங்கள் என 445 அடிப்படை வசதிப் பணிகள் 413 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலானபணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி மாநகராட்சியில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் 282 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டம் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளான அத்திமரப்பட்டி, மீளவிட்டான், முத்தையா புரம், சங்கரப்பேரி, தூத்துக்குடி புறநகர் ஆகிய 5 பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதன் அடிப்படையில், தூத்துக்குடி மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 29.74 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் அமைக்கும் பணிகள் மேற் கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதே போன்று, சுகாதாரக் கேடுகளை கட்டுப்படுத்தும் வகையிலும், நிலத்தடி நீர் மாசுபடுவதைத் தடுக்கும் வகையிலும், தூத்துக்குடி மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள் மற்றும் விடுபட்ட பகுதிகளில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில், கடந்த மூன்று ஆண்டுகளில் 327 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான குடிநீர் திட்டப் பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மை பணிகள் என 63 அடிப்படை வசதிப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

    திருநெல்வேலி மாநகராட்சியின் நீர் ஆதாரம் மற்றும் குடிநீர் பகிர்மான கட்டமைப்பினை மேம்படுத்தும் வகையில், 230 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் கோரப்படும்.

    இதனைத் தொடர்ந்து, பாதாள சாக்கடை திட்டம் இல்லாத மாநகராட்சிப் பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் தாமிரபரணி ஆறு மாசுபடுவதைத் தடுக்கும் வகையில், திருநெல்வேலி மாநகராட்சியின் விடுபட்ட பகுதிகளுக்கு, 490 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது மட்டுமல்லாமல், திருநெல்வேலி மாநகராட்சியின் 8 வார்டுகளில் குடிநீர் மேம்பாட்டு பணிகளால் சேதமடைந்துள்ள 61 கிலோ மீட்டர் நீளச் சாலைகள் 35 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மறு சீரமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், திருநெல்வேலி மாநகர பொதுமக்கள் மற்றும் இம்மாநகருக்கு வந்து செல்லும் பயணிகளின் நலனை கருத்திற் கொண்டு, திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தினை நவீனமயமாக்குதல் மற்றும் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தப் பணிகள் நிறை வேற்றப்படுவதன் மூலம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகளைச் சார்ந்த மக்களின் கூடுதல் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதோடு, சுகாதாரமான சுற்றுச்சூழல் நிலவவும் வழிவகை ஏற்படும்."
    Aug 25,2014 11:13 am
    Jayalalithaa
    Text of the D.O. letter addressed by the Honble Chief Minister to the Honble Pri...
    Text of the D.O. letter addressed by the Honble Chief Minister to the Honble Prime Minister of India on Tax issues dated 24.8.2014:
    **************************************************************************************

    “I understand that the Government of India has referred an additional term of reference to the Fourteenth Finance Commission, regarding making recommendations on the resources that would be available to the successor or reorganized States on the reorganization of the State of Andhra Pradesh in accordance with the Andhra Pradesh Reorganization Act, 2014. The Act promises a number of fiscal and economic benefits to the successor States in Section 93 read with the Thirteenth Schedule and in Section 94. As a neighbouring State, we do not begrudge the benefits that are sought to be conferred on the successor States of Andhra Pradesh and Telangana for their development. However, sub-section (1) of Section 94 which states as follows, is of particular concern to us in Tamil Nadu:

    “94. (1) The Central Government shall take appropriate fiscal measures, including offer of tax incentives, to the successor States, to promote industrialisation and economic growth in both the States.”

    This provision promises tax concessions to the two States to promote industrialization and economic growth. The nature and type of concessions have not been indicated in the Act and the matter appears to have been left to the discretion of the Government of India. I understand that there are demands from certain quarters that area based tax concessions should be provided to Andhra Pradesh and Telangana. Hence, it would be appropriate to intervene at this stage and express some of the apprehensions and reservations that Tamil Nadu has as a neighbouring State.

    As you are aware, the general direction of taxation reforms in India has been towards rationalization and simplification of various exemptions. A conscious attempt has been consistently made at harmonizing indirect tax rates amongst States and to eliminate harmful tax competition. This led to the introduction of the Value Added Tax regime which substituted the earlier Sales Tax regime at
    the State level. The Centre, over the last two decades, has also attempted to reduce and eliminate various exemptions. A major aberration in this regard was the introduction of area based exemptions from income tax and central excise for new industrial units located in certain parts of Himachal Pradesh and Uttaranchal in 2003.

    I recall that there was a spirited debate on this issue in the meeting of the National Development Council held in June, 2005, and I had also written to the then Prime Minister seeking withdrawal of such exemptions in August 2005. In the NDC meeting, almost all the Chief Ministers had even then favoured the scrapping of such exemptions as they significantly distorted the investment decisions of companies and corporate houses, thereby drastically affecting the investment climate in their own States. Independent analysis has also acknowledged that the area-based exemption scheme was not calibrated properly and did not take into account the possibility of flight of capital and relocation of units from other States in the country. Any extension of such area based concessions to Andhra
    Pradesh or Telengana would cause a huge flight of capital and relocation of industries, in particular from neighbouring States. It would also make the neighbouring States totally uncompetitive. In fact, such concessions to new industries would render existing industries, both in neighbouring States and even in the States where such concessions are granted, completely uncompetitive. These are grave risks which cannot be ignored.

    Such area based exemptions are also fiscally very expensive. The Statement of Revenue Foregone presented to Parliament in July, 2014, along with the Union Budget for 2014-15 indicates that the total revenue foregone through such area based tax concessions during 2013-14 was Rs.9267.5 crores in direct taxes and almost Rs.18,000 crores in excise duty. These are revenues which could have been shared with the States. If a similar concession is extended to the successor States of Andhra Pradesh or Telengana, the fiscal impact would be substantially greater, given the much larger size of the States and the fact that these States have a fairly well developed infrastructural base.

    It must also be pointed out that when a bifurcation of three States took place in 2000, neither Jharkhand and Chattisgarh, two of the newly created States nor the residual States of Bihar, Madhya Pradesh and Uttar Pradesh received any such fiscal incentive. In the case of Uttarakhand, then Uttaranchal, the comparison could have been with Himachal Pradesh, another hill state with issues of difficult
    terrain and remoteness, which was already categorized as a special category state on par with the North Eastern States, Jammu and Kashmir and Sikkim. A similar categorisation cannot be made in the case of either Andhra Pradesh or Telengana.

    A very limited, time bound exemption may be justified to enable an area to recover from a natural disaster. An area based exemption was granted for a limited period of 3 years for the Kutch area of Gujarat in 2001 soon after the devastating earthquake that struck the area. However, when I made a similar request on 6th June, 2005, for a limited excise duty holiday for the areas affected by the
    catastrophic tsunami in Tamil Nadu in December 2004, no such concession was provided by the then UPA Government even when adequate justification existed.

    The Andhra Pradesh State Re-organization Act, 2014, already contains a substantial and significant economic package. Hence, I strongly urge you to adopt a cautious approach to the complex issue of providing area based tax concessions in the name of encouraging economic development in these two States. Such exemptions run counter to one of the basic thrusts of economic reforms — a rational tax policy that is neutral, encourages a common market in the country, rewards competitive efficiency, and exploits comparative advantage. Any shift of investments from States with a strong infrastructure and trained manpower to other States motivated by tax reliefs alone would undo the two decade long work or rationalisation of tax structures.

    Despite having put in place sunset clauses on area based exemptions during their two terms in office, the previous UPA Government, on grounds of sheer short term political expediency, offered this vaguely worded promise of taking appropriate fiscal measures including distortionary tax incentives. This reflects the moral bankruptcy of the previous UPA Government.

    Your Government must exercise the greatest care in approaching this issue. Nothing should be done which would distort economic incentives or a level playing field and render States like Tamil Nadu uncompetitive vis a vis their neighbours. It would be highly ill-advised to offer across the board area based tax concessions.

    I am confident that you would definitely consider all aspects of
    this issue and ensure that the interests of neighbouring States like
    Tamil Nadu are fully protected while taking a final decision.”
    Aug 25,2014 11:08 am
    Jayalalithaa
    Honble Chief Minister Statement - COIMBATORE Developments: dated 24.8.2014 *****...
    Honble Chief Minister Statement - COIMBATORE Developments: dated 24.8.2014
    ********************************************************************************************

    "தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக் கப்படுவதும், தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த நகரமாக விளங்குவதும், விரைந்து வளர்ந்து வரும் வணிக மையமாகவும், உகந்த சீதோஷ்ண நிலையைக் கொண்டதாகவும் விளங்குகின்ற கோயம்புத்தூர் மாநகராட்சியில், பெருகி வரும் மக்கள் தொகையைக் கணக்கிற்கொண்டு, கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை எனது தலைமையிலான அரசு ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த மூன்று ஆண்டுகளில், குடிநீர் திட்டப்பணிகள், பாதாள சாக்கடை பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், தெருவிளக்குகள், கட்டடங் கள், பூங்காக்கள் என மொத்தம் 309 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1490 அடிப்படை வசதிப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மருத்துவ வசதி என எடுத்துக் கொண்டால், கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லுலூரியில் 57 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. மேலும், இம்மருத் துவமனையில் 15 கோடி ரூபாய் செலவில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி இம்மருத்துவமனையில் ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்புச் சேவை (சீமாங்) பிரிவிற்கு 7 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடமும், அறுவை சிகிச்சை அரங்கிற்கு 2 கோடி ரூபாய் செலவில் நவீன மருத்துவக் கருவிகளும், மேம்படுத்தப்பட்ட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

    இது தவிர, கோயம்புத்தூர் மாநகரில் உக்கடம்சுண்டக் காமுத்தூர் மேம்பாலம் கட்டும் பணிகள் மற்றும் கோவை புதூர் சாலைப்பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் டாக்டர்.நஞ்சப்பா சாலை மற்றும் சின்னசாமி சாலை ஆகியவற்றில் மேம்பாலம் மற்றும் பாதசாரிகள் சுரங்க பாதை அமைக்கும் பணிகள் 162 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளன.

    இது மட்டுமல்லாமல், கோயம்புத்தூர் மாநகராட்சியில் சீரான அழுத்தத்துடன் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில், குடிநீர் விநியோகத் திட்டம் 451 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என என்னால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்டு அதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதன் தொடர்ச்சியாக, கோயம்புத்தூர் மாநகராட்சி மக்களுக்கு மேலும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தரும் வகையில் கீழ்க்காணும் திட்டங்களை செயல்படுத்த நான் ஆணையிட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதன்படி,

    1. நகர்ப்புர ஏழை மக்களின் மருத்துவத் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு 7 கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் தற்போதுள்ள 12 நகர்ப்புர சுகாதார மையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படுவதோடு 20 நகர்ப்புர சுகாதார மையங்கள் மேம்படுத்தப்படும். இதுமட்டுமின்றி ஒரு புதிய நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்தப்படும்.

    2. கோயம்புத்தூர் மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு கீழ்காணும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்:

    (அ) வெள்ளலூர் பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய நிதியின் கீழ் 125 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

    (ஆ) கோவை மாநகருக்கு வெளியே பல்வேறு உட் கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய லாரிகள் நிறுத்துமிடம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, இதனடிப்படையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

    (இ) சங்கனூர் பள்ளத்தை சீரமைத்து, அதன் இரு கரைகளிலும் இலகு ரக வாகனங்கள் செல்லும் விதமாக, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினாசி சாலை மற்றும் திருச்சி சாலை முதலான சாலைகளை இணைத்து ஒரு அரை வட்ட சாலை அமைக்கப்படும். மேலும், கரைகளில் வாழ்ந்து வரும் மக்களுக்கு மாற்றிடங்களில் வீடுகள் வழங்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

    (ஈ) காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், டி.பி.சாலை மற்றும் டவுன் ஹால் ஆகிய மூன்று இடங்களில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்படும். இதனை தனியார் பங்களிப்புடன் 80 கோடி ரூபாயில் செயல்படுத்த விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது.

    3. சமுதாயத்தின் நலிந்த பிரிவினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் போதுமான வீட்டு வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதன் அடிப்படையில், வீடில்லாத ஏழைகளுக்கு 443 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான 20 ஏக்கர் பரப்பளவில் 2912 வீடுகள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டித்தரப்படும்.

    4. கோயமுத்தூர் மாநகரின் அதிகரித்து வரும் குடி நீர் தேவையை கருத்திற்கொண்டு, மூன்றாவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ஏதுவாக, பெரிய கோம்பை மலை மற்றும் கட்டன் மலையில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனிக்குகை வழிப்பாதை அமைக்கப்படும்.

    5. கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு உள்ள பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டத்திற்கு விரிவான திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில், சுமார் 1745 கிலோ மீட்டர் நீளம் மழை நீர் வடிகால் வசதி படிப்படியாக ஏற்படுத்தி தரப்படும். 1550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இப்பணிகளை மேற்கொள்வதற்கான விரிவான திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    6. கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடைப் பணிகள் மற்றும் குடிநீர் பணிகளால் சேதமடைந்த சாலைகள் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

    7. கோயம்புத்தூர் மாநகரின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், கட்டடக் கழிவுகளை மறு சுழற்சி செய்து பயன்தரும் பொருட்களாக மாற்றம் செய்யும் திட்டம் 12 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டில் முதன்முறையாக செயல்படுத்தப்படும்.

    மேற்காணும் திட்டங்கள் மூலம், கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் கூடுதல் வசதிகளை பெறுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
    Aug 24,2014 07:51 am
    Jayalalithaa
    அதிமுக தலைமைக்கழக அறிவிப்பு - 19.8.2014 ****************************************...
    அதிமுக தலைமைக்கழக அறிவிப்பு - 19.8.2014
    *****************************************************

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட திட்ட விதி-30, பிரிவு-2-ன் படி கழக அமைப்புகளின் பொதுத் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்திட வேண்டும் என்ற விதிமுறைக்கு ஏற்ப கழக பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் கீழ்க்கண்ட அட்டவணைப்படி நடைபெற உள்ளது.

    தேர்தல் ஆணையாளர்: விசாலாட்சி நெடுஞ்செழியன் (அமைப்புச் செயலாளர்)

    வேட்புமனு தாக்கல்: 20.8.2014 புதன்கிழமை காலை 9 மணி முதல் 24.8.2014 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி வரை.

    வேட்பு மனு பரிசீலனை: 27.8.2014

    வேட்பு மனு திரும்பப் பெறுதல்: 28.8.2014

    தேர்தல் நாள் மற்றும் தேர்தல் முடிவு அறிவிப்பு: 29.8.2014 வெள்ளிக்கிழமை.
    Aug 19,2014 05:58 pm
    Jayalalithaa
    AIADMK Chief & Honble CM Announcement - 18.8.2014 "அ.தி.மு.க. மருத்துவ அணித் தல...
    AIADMK Chief & Honble CM Announcement - 18.8.2014

    "அ.தி.மு.க. மருத்துவ அணித் தலைவர் பொறுப்பில் இருக்கும் டாக்டர் வா.மைத்ரேயன் எம்.பி. இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

    அ.தி.மு.க. நாடாளுமன்ற குழு, மக்களவைக் குழு மற்றும் மாநிலங்களவைக் குழு நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தலைவர் - டாக்டர் பி.வேணுகோபால், துணைத் தலைவர்- ஏ.நவநீதகிருஷ்ணன்.

    மக்களவை குழு நிர்வாகிகள்:
    ******************************
    தலைவர் - டாக்டர் பி.வேணுகோபால்

    துணைத் தலைவர் - பி.குமார்

    கொறடா - கே.என்.ராமச்சந்திரன்

    பொருளாளர் - ஆர்.வனரோஜா

    செயலாளர் - டாக்டர் கே.காமராஜ்

    மாநிலங்களவை குழு நிர்வாகிகள்:
    ************************************
    தலைவர் - ஏ.நவநீதகிருஷ்ணன்

    துணைத்தலைவர் - எஸ்.முத்துக்கருப்பன்

    கொறடா - எல்.சசிகலா புஷ்பா

    பொருளாளர் - டாக்டர் ஆர்.லட்சுமணன்

    செயலாளர் - டி.ரத்தினவேல்."
    Aug 18,2014 06:33 pm
    Jayalalithaa
    Text of the D.O. letter addressed by the Honble Chief Minister to the Honble Pri...
    Text of the D.O. letter addressed by the Honble Chief Minister to the Honble Prime Minister of India on Goods and Services Tax issues - dated 17.8.2014:
    **************************************************************************************

    “As you may recall, I had handed over a Memorandum to you on 3.6.2014, highlighting some very crucial issues of concern to Tamil Nadu. One of these issues was the impact of the proposed Goods and Services Tax (GST) on the fiscal autonomy of States and the huge permanent revenue loss such a taxation system is likely to cause to a manufacturing and net exporting State like Tamil Nadu.

    I understand that a further revised draft Constitutional Amendment Bill on GST has been circulated to the States by the Government of India on 20.6.2014. I am happy to note that some of the concerns that I had raised have been addressed in the latest draft Bill, with the provisions relating to Declared Goods having been removed and alcoholic liquor for human consumption kept outside GST. The provisions relating to advisory Committees for dispute resolution have also been deleted.

    However, a number of concerns still remain. Foremost amongst these is the issue of fiscal autonomy. The proposed GST Council with the functions assigned to it will override the supremacy of the Legislature – both at the Centre and in the States in taxation matters. This is unacceptable to Tamil Nadu.

    The Amendment Bill also does not include enabling provisions for States to levy higher taxes on Tobacco and Tobacco products, similar to what has been permitted for the Centre. Tobacco consumption is a public health hazard and many States including Tamil Nadu are levying higher taxes on tobacco, which should continue to be permitted.

    Petroleum products such as petrol and diesel which are currently outside the purview of State VAT in most States, are still proposed to be covered by GST under the draft Bill. A new provision has been made in the revised draft amendment Bill which enables States to levy additional taxes over and above the GST on the sale of petroleum products. However, this system of a dual levy of GST and an additional tax is not acceptable to Tamil Nadu as a portion of the tax on petroleum products would still be eligible for input tax credit. Considering the short supply chain, collection of tax on Petroleum and Petroleum products at the first and second points of sale is now done efficiently and without leakage. Bringing these products under the ambit of GST will entail huge revenue loss to the States as Input Tax Credit will have to be provided. Hence, I reiterate my earlier request that Petroleum and Petroleum products should be kept outside the purview of GST.

    In addition, it is also being made out by the Ministry of Petroleum and Natural Gas that due to the levy of irrecoverable taxes such as entry tax, octroi, and Input Tax Credit availment restrictions on crude oil and other petroleum products, there are a number of “State Specific Costs” that are perforce passed on to the consumers in the State. Abolition of such irrecoverable dues has been sought so as to enable the Oil Marketing Companies (OMCs) to reduce “under-recoveries” without increasing the prices for petroleum products.

    In this context, I have already stated in a number of fora that the "under-recoveries" of the OMCs are not really losses and are notionally calculated on the basis of international prices of petroleum products which is neither relevant nor fair since a portion of the crude oil is domestically produced and what is imported into India is crude oil and not petroleum products. In this context, only an actual cost based formula would be appropriate to determine the real subsidy burden falling on the OMCs. This figure is much lower and the State levies are not as large a burden as is being made out. States have to protect their slender tax base and cannot be expected to subsidize what is essentially a Central responsibility through foregoing their legitimate revenues.

    Further, in Tamil Nadu, no State specific levies like entry tax, octroi, cess or surcharge are being levied on petroleum products. As far as Input Tax Credit (ITC) on crude oil is concerned, the OMCs/ refineries are eligible to avail of Input Tax Credit to the extent of tax paid on purchase of Crude Petroleum from ONGC on the sale of eligible products like lubricants and commercial LPG. Other petroleum products are non-VAT goods and hence not eligible for Input Tax Credit. Making all petroleum products VAT goods, in order to reduce the subsidy burden of the Government of India will result in a drastic fall in State revenue. It is also a precursor to including all petroleum products under GST and hence, this proposal is unacceptable to Tamil Nadu.

    Manufacturing States like Tamil Nadu stand to permanently lose substantial revenue if GST is implemented. However, there is no assurance of a permanent compensation mechanism. Further, the State’s experience with the Centre’s compensation mechanism both for the introduction of VAT and the reduction of Central Sales Tax has been far from satisfactory and does not inspire confidence that a fair, hassle-free and workable compensation mechanism can be devised and implemented. Hence, it is imperative that an independent compensation mechanism for revenue losses suffered by the States should be enshrined in the Constitution itself and not reduced to an instrument of Union policy which may change from time to time. Hence, I reiterate my earlier suggestion that the Amendment Bill should provide for an independent compensation mechanism in this regard.

    I understand that the Sub-Committees constituted by the Empowered Committee of State Finance Ministers on various aspects of GST such as the problems of dual control, threshold and exemptions in the GST regime; on Inter-State GST and GST on imports; and on revenue neutral rates for State GST and Central GST and place of supply rules are yet to submit their final reports.

    May I also point out that many of the concerns that I have raised, as also the apprehension amongst many of the present VAT assessees that they would now be subjected to two sets of taxation authorities, could be overcome if a simpler structure of completely delegating the levy, collection and appropriation of the substitutes for VAT, Central Excise Duty and Service Tax within a State to the State machinery is put in place, with the Central machinery focusing on inter-State taxation? Not only would such an arrangement be administratively much simpler, but it would also ensure that the original Constitutional design of fiscal federalism of leaving the States in complete control of at least one sizeable source of revenue is preserved. I believe it is still not too late to move forward on GST
    by putting in place the elegant solution I have suggested.

    In any event, I strongly urge you that a broad consensus on key and contentious issues like dual rate bands, taxation threshold, IGST Model, commodities to be excluded from GST, clarity on dual administrative control, compensation period and methodology, should be arrived at among the States and with the Central Government before the enactment of the Constitutional Amendment Bill on GST is taken up.

    I look forward to a positive response from you in this matter”.
    Aug 18,2014 06:28 pm
    Jayalalithaa
    Honble Chief Minister Condolence letter to Thiru K Balachander whose son passed...
    Honble Chief Minister Condolence letter to Thiru K Balachander whose son passed away - dated 16.8.2014:

    "தங்களின் அன்பு மகன் திரு. B.கைலாசம் 15.8.2014 அன்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மனவேதனையும் அடைந்தேன்.

    இந்தத் துயரச் சம்பவத்தினால் ஈடுசெய்ய முடியாத இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ளபோதிலும், இந்தத் துயரத்தை தாங்கிக்கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் அளிக்கவேண்டும் என்றும் திரு. கைலாசம் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும், எல்லாம் வல்ல இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்.

    திரு. கைலாசம் அவர்களை இழந்து வாடும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்."
    Aug 16,2014 08:13 pm
    Jayalalithaa
    AIADMK Chief and Honble CM Selvi J Jayalalithaa Statement - 16.8.2014: "கழகத்தி...
    AIADMK Chief and Honble CM Selvi J Jayalalithaa Statement - 16.8.2014:

    "கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென்சென்னை தெற்கு மாவட்டம், விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 65-வது தெற்கு வட்ட கழக அவைத்தலைவர் டி.எஸ்.பசுபதி இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

    கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்."
    Aug 16,2014 07:59 pm
    Jayalalithaa
    Independence Day celebration at Secretariat, Fort. Saint George, Chennai - 15.8....
    Independence Day celebration at Secretariat, Fort. Saint George, Chennai - 15.8.2014


    Aug 16,2014 07:39 pm
    Jayalalithaa
    Statement of the Honble Chief Minister on release of water from Mettur Dam for I...
    Statement of the Honble Chief Minister on release of water from Mettur Dam for Irrigation dated 14th August 2014
    .........................................................................................................

    "மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மேட்டூர் அணையிலிருந்து புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய்களில் பாசனத்திற்காக 15.8.2014 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

    இதன் மூலம், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 87,736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்."
    Aug 16,2014 07:35 pm
    Jayalalithaa
    Text of the D.O. letter addressed by the Honble Chief Minister to the Honble Pri...
    Text of the D.O. letter addressed by the Honble Chief Minister to the Honble Prime Minister on allocation of transmission capacity under Long Term Access by the Power Grid Corporation of India Limited dated 13.8.2014:
    ...........................................................................................................

    “I am writing this letter requesting your urgent intervention in the matter of allocation of transmission capacity under Long Term Access by the Power Grid Corporation of India Limited to enable transmission of power from the Western and Eastern Regions to Tamil Nadu, for which 15 years Power Purchase Agreements have been signed with Private Power Producers by the Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO). Based on the advice of the Ministry of Power to go in for Long Term Power Purchase to meet the demand supply gap, TANGEDCO has signed Long Term Power Purchase agreements for 15 years commencing from 2014 for 3330 MW. Of this, 2158 MW is contracted from Private Power Producers outside the Southern Region. These suppliers have applied for Long Term Access from November, 2013, to January, 2014, to the Power Grid Corporation of India Ltd (PGCIL), the designated Central Transmission Utility.

    You are aware that the Sholapur to Raichur inter-regional transmission lines with a capacity of 4000 MW have been commissioned enabling flow of power from the Western Region to the Southern Region. Even though a transmission capacity of 4000 MW has been created, a total transfer capability of 1100 MW and available transfer capability of 350 MW only has been declared by the PGCIL for the present after considering a high transmission reliability margin of 750 MW. This implies that only 350 MW can flow to the Southern Region now.

    When the applications for Long Term Access from the long term power suppliers of the Tamil Nadu Generation and Distribution
    Corporation Limited (TANGEDCO) are pending with the PGCIL since November 2013, the Ministry of Power has allocated an additional 377 MW of surrendered power of the Government of Delhi to Andhra Pradesh, Telangana and Kerala over and above the present allocation of 316 MW to these States up to 31.03.2015. This will adversely affect availing of transmission capacity under Long Term Access by Tamil Nadu as even temporary allocation of power from Central Generating Stations (CGS) is considered equivalent to long term power for allocation of transmission capacity.

    I am of the considered view that this temporary allocation of power by the Ministry of Power should not curtail the genuine Long Term Access entitlement of Tamil Nadu. Further, fixing high transmission
    reliability margin of 750 MW, requires review and reconsideration. Therefore, I request your urgent intervention to advise the Ministry of Power and the Power Grid Corporation of India to consider the Long Term Access application of power suppliers to Tamil Nadu without taking into account the temporary allocation of surrendered power of 693 MW to some of the Southern States. The Ministry of Power and PGCIL may be also be directed to review the transmission reliability margin so that Tamil Nadu can get its rightful share of Long Term Access.”
    Aug 16,2014 07:32 pm
    Jayalalithaa
    HON’BLE CHIEF MINISTER AWARDS MEDALS TO TWELVE POLICE OFFICERS ON THE OCCASION O...
    HON’BLE CHIEF MINISTER AWARDS MEDALS TO TWELVE POLICE OFFICERS ON THE OCCASION OF THE INDEPENDENCE DAY, 2014
    ............................................................................................................

    In recognition of the excellent work performed in criminal investigation and with a view to applaud the commitment and dedication to work, the following police officers have been awarded the Tamil Nadu Chief Minister’s Police Medal for Excellence in Investigation on the occasion of the Independence Day, 2014:-

    1. Thiru L.Balaji Saravanan,
    Additional Superintendent of Police,
    Prohibition Enforcement Wing,
    Tiruppur.

    2. Thiru P.Arockiaraj,
    Inspector of Police,
    Special Branch,
    Namakkal District.

    3. Thiru M.Dineshkumar,
    Inspector of Police,
    Thuraiyur Police Station,
    Trichy District.

    4. Thiru S.Syed Babu,
    Inspector of Police,
    Annuperpalayam Police Station,
    Tiruppur City.

    5. Thiru S.Sivasubbu,
    Inspector of Police,
    Panruti Police Station,
    Cuddalore District.

    6. Thiru M.Kanagasabapathy,
    Inspector of Police,
    City Crime Branch,
    Coimbatore City.

    7. Thiru J.K.Gopi,
    Inspector of Police, formerly Theni Police Station,
    Theni District, now serving in Peelamedu Police Station,
    Coimbatore City.

    8. Thiru K.T.Rajanbabu,
    Inspector of Police,
    C-4 Thilagarthidal L&O Police Station,
    Madurai City.

    9. Thiru S.Chandramohan,
    Inspector of Police,
    B-11 L&O Police Station,
    Coimbatore City and

    10. Thiru S.Meenachisundaram,
    Sub-Inspector of Police,
    Devakottai Taluk Police Station,
    Sivagangai District.

    Similarly, as a token of recognition of the outstanding work done and the strong commitment to keenness, zeal and selfless Public Service, the following two Police Officers have been awarded the Tamil Nadu Chief Minister’s Police Medal for Excellence in Public Service, on the occasion of Independence Day, 2014:-

    1) Thiru M.Pandian, IPS.,
    Superintendent of Police,
    Special Branch CID, Chennai

    and

    2) Thiru Ara.Arularasu,
    Superintendent of Police,
    Special Division,
    Special Branch CID, Chennai.

    The recipients of the Medal are each eligible to receive a lump sum grant of Rs.5,000/- and a gold Medal weighing eight grams. These Medals will be presented by the Hon’ble Chief Minister of Tamil Nadu at a special function to be held in due course.
    Aug 16,2014 07:25 pm
    Jayalalithaa
    Independence Day message of the Honble Chief Minister - dated 14 August 2014 ......
    Independence Day message of the Honble Chief Minister - dated 14 August 2014
    ...........................................................................................................

    "வெள்ளையர்களை விரட்டியடித்து நம் தாய்த் திருநாடு விடுதலை பெற்ற இந்த இனிய நன்னாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    “வந்தே மாதரம் என்போம் - எங்கள்
    மாநிலத் தாயை வணங்குதும் என்போம்...
    ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
    ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே"

    ---- என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளின்படி நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தால் தான் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்திட முடியும் என்பதை உணர்ந்திடல் வேண்டும்.

    நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களை இந்திய மண்ணிலிருந்து விரட்டிட தன்னலமற்ற பல சுதந்திர போராட்ட தியாகிகள் தங்கள் இன்னுயிரை ஈந்து நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்தனர். அத்தகைய விலை மதிப்பற்ற தியாகங்களைச் செய்து சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த தியாகச் சீலர்களின் நாட்டுப்பற்றையும் தியாக உணர்வையும் போற்றி வணங்குதற்குரிய நன்னாள் இந்தச் சுதந்திரத் திருநாளாகும்.

    சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் போற்றும் வகையில் எனது தலைமையிலான அரசு, தியாகிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை 9,000 ரூபாயாகவும்; குடும்ப ஓய்வூதியத்தை 4,500 ரூபாயாகவும்; மருத்துவப் படியை 500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியுள்ளது. மேலும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் அளப்பறிய தியாகங்களை வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில்,தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம், தியாகி தீரன் சின்னமலை நினைவுச் சின்னம், தியாகி வாஞ்சிநாதன் நினைவு மண்டபம், வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம், வீரத்தாய் குயிலி நினைவுச் சின்னம், வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் என பல்வேறு தியாகிகளின் நினைவகங்களை எழுப்பி சிறப்பித்து வருகிறது.

    போராடிப் பெற்ற சுதந்திரத்தை போற்றிப் பாதுகாத்து, அனைவரும் ஒன்றுபட்டு சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் வாழ்ந்திட உறுதியேற்போம் எனக் கூறி அனைவருக்கும் எனது சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்."
    Aug 16,2014 07:19 pm
    Jayalalithaa
    Statement of the Honble Chief Minister on release of water from Bhavanisagar Dam...
    Statement of the Honble Chief Minister on release of water from Bhavanisagar Dam for Irrigation dated 13th August 2014:

    "ஈரோடு மாவட்டம், பவானி சாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாய் மற்றும் நீட்டிப்பு கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மூலமாகவும், சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப் படை மதகுகள் மூலமாகவும், முதல் பருவ நன்செய் பயிர்களின் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாய் மற்றும் நீட்டிப்பு கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மூலமாகவும், சென்ன சமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மூலமாக